முகப்பு »  தோல் »  சருமத்திலுள்ள கருமையை போக்க சில இயற்கை வழிகள்!!

சருமத்திலுள்ள கருமையை போக்க சில இயற்கை வழிகள்!!

யோகர்ட் சருமத்தை மென்மையாக்குகிறது.  இதில் இருக்கக்கூடிய லாக்டிக் அமிலம் மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் சருமத்தை பிரகாசிக்க செய்யும். 

சருமத்திலுள்ள கருமையை போக்க சில இயற்கை வழிகள்!!

சிறப்பம்சங்கள்

  1. சிட்ரஸ் பழங்கள் சருமத்தை பொலிவாக்குகிறது.
  2. பால் மற்றும் பால் பொருட்கள் சருமத்தை மென்மையாக்கும்.
  3. கற்றாலை, தக்காளி போன்றவை சருமத்தில் உள்ள கருமையை போக்கும்.

கோடையின் வெப்பம் அதிகரித்துவிட்டது.  இதனால் சருமத்தில் கருமை படர்ந்துவிடும்.  குறிப்பாக கை, கால், முகம், கழுத்து மற்றும் முதுகு பகுதிகள் மட்டும் கருப்பாகிவிடும்.  இந்த கருமையை போக்குவது மிகவும் கடினமானதுதான்.  ஆனாலும், சில எளிமையான இயற்கை பொருட்களை கொண்டு தொடர்ச்சியாக முயற்சி செய்தால் சரிசெய்யலாம்.  

எலுமிச்சை சாறு மற்றும் தேன்: 


எலுமிச்சை சாறு சருமத்தில் மெலனின் உருவாவதை தடுக்கிறது.  தேன் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.  எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து சருமத்தில் தடவி வந்தால் வெயிலால் ஏற்பட்ட கருமை குறையும்.  மேலும் சருமத்தில் உள்ள இறந்த செல்களையும் அகற்றுகிறது.  

வெள்ளரி: 

வெள்ளரியில் நீர்ச்சத்து அதிகம்.  கோடைக்காலத்தில் வெள்ளரியை அதிகம் சாப்பிடலாம்.  மேலும் வெள்ளரியின் குளிர்ச்சித்தன்மை சருமத்தில் சில மாயங்களை செய்யக் கூடியது.  வெள்ளரியின் சாற்றை கருமை படர்ந்த இடத்தில் தடவி வந்தால் சரியாகும். 

யோகர்ட் மற்றும் தக்காளி: 

யோகர்ட் சருமத்தை மென்மையாக்குகிறது.  இதில் இருக்கக்கூடிய லாக்டிக் அமிலம் மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் சருமத்தை பிரகாசிக்க செய்யும்.  தக்காளி மற்றும் யோகர்ட் சேர்த்து அரைத்து சருமத்தில் பயன்படுத்தி வரலாம். 

qmhluke8

 

தேன் மற்றும் பப்பாளி: 

பப்பாளி சருமத்தில் சிறந்த ப்ளீச்சாக செயல்படும்.  இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி, சருமத்தை பளிச்சிட செய்யும்.  பப்பாளி சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படும். 

mfsgvec8

 

கற்றாலை மற்றும் தக்காளி: 

தக்காளி மற்றும் கற்றாலை சேர்த்து அரைத்து சருமத்தில் தடவி வந்தால் சருமத்திற்கு மாய்சுரைசராக பயன்படுத்தலாம்.  பருப்பு, கற்றாலை மற்றும் தக்காளி இவை மூன்றும் அரைத்து சருமத்தில் தடவினால் சருமத்தில் உள்ள கருமை நிறம் மறையும்.  

ஓட்மீல் மற்றும் மோர்: 

ஓட்மீல் பயன்படுத்தினால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி, சருமத்தை க்ளென்ஸ் செய்கிறது.  யோகர்ட்டில் இருப்பதுபோல் ஓட்மீலிலும் லாக்டிக் அமிலம் இருப்பதால் சருமத்தை மென்மையாக்கும்.  ஓட்மீல் மற்றும் மோர் சேர்த்து அந்த கலவையை சருமத்தில் தடவி 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவினால் முகம் பிரகாசிக்கும்.  

மில்க் க்ரீம் மற்றும் ஸ்ட்ராபெர்ரி: 

வைட்டமின் சி நிறைந்த ஸ்ட்ராபெர்ரியை சருமத்திற்கு உபயோகப்படுத்தினால் சருமத்தில் உள்ள சோர்வு நீங்கும்.  மில்க் க்ரீமில் லாக்டிக் அமிலம் இருப்பதால் சருமத்தை மென்மையாக்கி, கருமையை போக்கும்.  

அன்னாசி மற்றும் தேன்: 

அன்னாசியில் ப்ரோமிலைன் என்னும் என்சைம் இருப்பதால் சருமத்தில் உள்ள நச்சுக்கள் நீக்கப்படுகிறது.  சருமத்தில் வீக்கத்தை குறைக்க இதனை பயன்படுத்தலாம்.  மேலும் இந்த கலவையில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருக்கிறது.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com