முகப்பு »  நலவாழ்வு »  வயிறு உப்புசம் தீர இந்த உணவுகளை சாப்பிடலாம்!!

வயிறு உப்புசம் தீர இந்த உணவுகளை சாப்பிடலாம்!!

உடலில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவதால் வயிறு உப்புசம் ஏற்படுகிறது.  உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கம் மூலம் இதனை சரிசெய்யலாம். 

வயிறு உப்புசம் தீர இந்த உணவுகளை சாப்பிடலாம்!!

சிறப்பம்சங்கள்

  1. உப்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் வயிறு உப்புசம் ஏற்படும்.
  2. உணவிற்கு பின் தயிர் சாப்பிடுவதால் செரிமானம் சிறப்பாக இருக்கும்.
  3. சாப்பிட்ட பின் வெந்தயம் சாப்பிடலாம்.

சாப்பிட்ட பிறகு வயிற்றில் வீக்கம் ஏற்பட்டதை போல உணர்ந்தீர்கள் என்றால் அதுதான் வயிறு உப்புசம் என்று அர்த்தம்.  வயிறு உப்புசம் உங்களுக்கு வயிற்று வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.  உடலில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவதால் வயிறு உப்புசம் ஏற்படுகிறது.  உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கம் மூலம் இதனை சரிசெய்யலாம்.  எண்ணெயில் பொரிக்கப்பட்ட, துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவதாலும் வயிறு உப்புசம் ஏற்படும்.  வயிறு உப்புசத்தை போக்கும் சில உணவுகளை பார்ப்போம். 

யோகர்ட்:


லேக்டோ பேசிலஸ், பிஃபிடஸ் மற்றும் அசிடோஃபிலஸ் போன்ற பாக்டீரியாக்கள் தயிரில் இருப்பதால் செரிமான கோளாறுகள் ஏற்படாம தடுக்கிறது.  உணவிற்கு பின் தயிர் சாப்பிடுவது வயிறு உப்புசத்தை குறைக்கும்.  

தர்பூசணி:

தர்பூசணியில் 92 சதவிகிதம் நீர்ச்சத்து இருக்கிறது.  இது உங்கள் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்குகிறது.  தர்பூசணியில் பொட்டாசியம் இருப்பதால் வயிறு உப்புசத்தை குறைக்கிறது.  

மஞ்சள்:

செரிமானத்திற்கு சிறந்த தீர்வு மஞ்சள்.  கொழுப்பு உணவுகள் ஜீரணமாக செய்யும் தன்மை மஞ்சளுக்கு உண்டு.  மேலும் இதில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை உள்ளதால் உடலில் வீக்கம் ஏற்படாமல் தடுக்கிறது.  

கீரை:

கீரையில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் அடிக்கடி கீரையை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். 

m70im248

அன்னாசி:

கோடைக்கு உகந்த பழங்களில் அன்னாசியும் ஒன்று.  அன்னாசியில் 85 சதவிகிதம் நீர்ச்சத்து இருக்கிறது.  அன்னாசியை சாப்பிடுவதால் செரிமானம் மண்டலம் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.  

எலுமிச்சை சாறு:

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் செரிமானம் சீராக இருக்கும்.  இது கல்லீரலில் உள்ள நச்சுக்களை அகற்றிவிடும்.  வயிறு உப்புசத்தை போக்கி, குடல் பகுதிகளை சுத்தமாக வைத்திருக்கும்.  

சோம்பு:

செரிமானத்தை தூண்டக்கூடிய தன்மை சோம்பிற்கு உண்டு.  சாப்பிட்ட பின் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் செரிமானம் சீராக இருக்கும்.  

வெள்ளரி:

வெள்ளரியில் வைட்டமின் சி மற்றும் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானம் மற்றும் மலச்சிக்கலை போக்குகிறது.  வெள்ளரியை சாலட்டாக செய்து சாப்பிடலாம். 

செலரி:

நீர்ச்சத்து நிறைந்தது செலரி.  சாலட், பழச்சாறு, சூப் ஆகியவற்றில் செலரியை சேர்த்து கொள்ளலாம்.  இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.  

வாழைப்பழம்:

வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்திருப்பதால் உடலில் சோடியத்தால் உருவாகும் உபாதைகளை தடுக்கும்.  வாயு தொல்லை மற்றும் செரிமான கோளாறுகளை சரிசெய்யும்.  

அவகாடோ:

அவகாடோவில் உடலுக்கு தேவையான கொழுப்புகள் இருப்பதால் செரிமான மண்டலம் சார்ந்த பிரச்சனைகளை தடுக்கிறது. 

பெருங்காயம்:

வெதுவெதுப்பான நீரில் பெருங்காயம் சேர்த்து குடித்து வந்தால் வாயு தொல்லை, செரிமான பிரச்சனை மற்றும் வயிற்று வலி போன்றவை குணமாகும்.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com