முகப்பு »  நலவாழ்வு »  தூக்கமின்மை பிரச்சனையா? சரிசெய்ய இவற்றை சாப்பிடலாம்!!

தூக்கமின்மை பிரச்சனையா? சரிசெய்ய இவற்றை சாப்பிடலாம்!!

தூக்கமின்மையால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். 

தூக்கமின்மை பிரச்சனையா? சரிசெய்ய இவற்றை சாப்பிடலாம்!!

சிறப்பம்சங்கள்

  1. கஃபைன் நிறைந்த உனவுகள் தூக்கத்தை பாதிக்கும்.
  2. அதிகபடியான கொழுப்பு மற்றும் புரதம் தூக்கமின்மை பிரச்சனையை உண்டாக்கும்.
  3. தூக்கமின்மை பிரச்சனையை விரட்ட கால்சியத்தை சேர்த்து கொள்ளலாம்.

உடல் ஆரோக்கியம் மற்றும் மனநிலை காரணமாகவும் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும்.  தூக்கமின்மை பிரச்சனையால் மேலும் சில உடல் உபாதைகள் ஏற்படக்கூடும்.  தூக்கமின்மையால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்.  தூக்கமின்மை பிரச்சனையை விரட்டும் சில உணவுகளை தெரித்து வைத்து கொண்டு தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.  

கஃபைன்:


காபியில் கஃபைன் அளவு அதிகமாக உள்ளது.  ரெட் புல் அல்லது மான்ஸ்டர் போன்ற எனர்ஜி ட்ரிங்கில் கஃபைன் அதிகம் உள்ளது.  இவை உங்கள் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.  மதிய நேரத்திற்கு பிறகு அல்லது இரவு நேரத்தில் இத்தகைய பானங்களை குடிக்க கூடாது.  டார்க் சாக்லேட்டிலும் கஃபைன் அதிகம் உள்ளதால் தூங்கப்போகும் முன் நிச்சயம் சாப்பிடக் கூடாது. 

மது:

பீர் மற்றும் ஸ்காட்ச் போன்ற மதுபாங்கள் உங்களை சோர்வாக உணர வைக்கும்.  அதனால் மது அருந்துவதால் தூக்கம் சிறப்பாக இருக்கும் என்று நினைத்து கொள்ள வேண்டாம்.  மதுபானம் உடலில் பக்க விளைவுகளை ஏற்படுத்தி, உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும்.  

உணவு:

தூங்கப்போகும் முன் நிறைய சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.  அதிகபடியாக சாப்பிட்டால் செரிமானம் சீராக இருக்காது.  இதனால் தூக்கம் தடைபடும்.  இரவு நேர உணவை 7 அல்லது 8 மணிக்கே சாப்பிட்டுவிடுங்கள்.  பீனட் பட்டரில் கால்சியம் மற்றும் ட்ரிப்டோபான் உள்ளதால் உங்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்துவிடுகிறது.  

h1c0nf3g

 

மசாலா உணவுகள்:

மசாலா உணவுகள் அஜீரணத்தை ஏற்படுத்தி, நெஞ்செரிச்சல், குமட்டல் போன்றவற்றை உண்டாக்கும்.  நெஞ்செரிச்சல் ஈசோபேகஸ் மற்றும் வயிற்று பகுதியில் உள்ள மெல்லிய லேயர் பாதிக்கப்படும்.  இதனால் வயிற்று வலி ஏற்பட்டு தூக்கம் தடைப்படும். 

கொழுப்பு: 

அதிகபடியாக கொழுப்பு உணவுகளை சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.  வயிற்றில் அமிலம் சுரப்பு அதிகமாக இருக்கும்.  தூக்கத்தை சீராக்கும் ஒரேக்சின் சுரப்பு, கொழுப்பு உணவுகளால் தடைப்படும்.  

38772lng

 

புரதம்:

புரதம் நிறைந்த உணவுகளை அளவாக சாப்பிட வேண்டும்.  புரதம் உடலில் அதிகம் சேர்ந்தால், செரிமானத்திற்கு நிறைய நேரம் ஆகும்.  இதனால் தூக்கம் தடைப்படும்.  

நீர்ச்சத்து:

செலரி மற்றும் தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடுவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்.  தூங்க போகும் முன் இவற்றை தவிர்ப்பது நல்லது.  தூக்கமின்மையை சரிசெய்யும் சிலவற்றை பார்ப்போம். 

கால்சியம்:

தயிர், வெண்டைக்காய், ப்ரோக்கோலி, சோயா பீன்ஸ் போன்றவற்றில் கால்சியம் நிறைந்துள்ளது.  இது உடலில் மெலடோனின் சுரப்பை அதிகரிக்கும். 

ட்ரிப்டோபான்:

மீன், இறால் போன்ற கடல் உணவுகள், பூசணி விதை, சூரியகாந்தி விதை, கடலை, பாதாம், வால்நட், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் தூக்கம் சிறப்பாக இருக்கும். 

மக்னீஷியம்:

அவகாடோ மற்றும் வாழைப்பழத்தில் மக்னீஷியம் நிறைந்துள்ளது.  மக்னீஷியம் உடலில் தூக்கத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது. 

வைட்டமின் பி6:

வைட்டமின் பி6 ட்ரிப்டோபானை மெலடோனினாக மாற்றும் தன்மை கொண்டது.  கீரை, பிஸ்தா போன்ற நட்ஸில் வைட்டமின் பி6 இருக்கிறது. 

Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

பானங்கள்:

சில இயற்கை பானங்களில் வைட்டமின் மற்றும் மினரல் இருக்கிறது.  வெதுவெதுப்பான பால், கேமோமைல் டீ மற்றும் பாதாம் பால் போன்றவை தூக்கத்தை மேம்படுத்தும்.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------