முகப்பு »  தோல் »  சருமத்தில் சுருக்கங்களை போக்கும் உணவுகள் என்ன தெரியுமா??

சருமத்தில் சுருக்கங்களை போக்கும் உணவுகள் என்ன தெரியுமா??

பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.  இது சருமத்தில் ஈரப்பதத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. 

சருமத்தில் சுருக்கங்களை போக்கும் உணவுகள் என்ன தெரியுமா??

சிறப்பம்சங்கள்

  1. ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது சருமத்திற்கு நல்லது.
  2. சரும பராமரிப்பிற்கு ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தலாம்.
  3. தேன், கீரைகள், பெர்ரீஸ் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

வயது முதிர்ச்சி காரணமாக சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது வழக்கமான விஷயம்தான்.  உடலில் நீர் போதாமை, சூரிய கதிர்களால் பாதிப்பு, சுற்றுச்சூழல் மாசு, உணவு பழக்கம் போன்றவற்றாலும் சருமத்தில் சுருக்கம் ஏற்படும்.  குறிப்பாக முகத்தில் தோன்றும் சுருக்கங்களை மறைப்பதற்கு ஆண்டி-ஏஜிங் மற்றும் ஆண்டி-ரிங்கிள் தன்மை கொண்ட அழகு சாதன பொருட்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.  ஆனால் இது சருமத்திற்கு மேலும் கேடு விளைவிக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.  ஆண்டிஆக்ஸிடண்ட், வைட்டமின், புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிடுவதன் மூலம் சருமத்தை சுருக்கங்கள் இன்றி, மென்மையாக, பொலிவாக இளமை தோற்றத்துடன் வைத்திருக்க முடியும்.  உங்களுக்கு இளமை தோற்றத்தை கொடுக்கக்கூடிய சில உணவுகளை பார்ப்போம்.

அவகாடோ:


இந்த க்ரீமி பழத்தில் க்ளூட்டோதையான் மற்றும் வைட்டமின் ஈ இருக்கிறது.  இது சருமத்தின் நிறத்தை அதிகரித்து, சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.  ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த பழத்தை சாப்பிடுவதால் இளமை தோற்றத்துடன் இருக்கலாம்.

பெர்ரீஸ்:

ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்ப்பெர்ரியில் ஃப்ளேவனாய்டு மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் முகத்தில் உள்ள மெல்லிய சுருக்கங்களை போக்கிவிடும். 

ஆலிவ் ஆயில்:

சமையல் மற்றும் சாலட் தயாரிப்பில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவதை போலவே சரும பராமரிப்பிற்கும் ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தலாம். சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்து, சுருக்கங்களை போக்கும்.  இதில் வைட்டமின் ஏ மற்றும் ஈ சத்துக்கள் அடங்கியிருக்கிறது. 

மாதுளை:

மாதுளையில் ப்யூனிகலாஜின் மற்றும் எலாஜிக் அமிலம் இருக்கிறது.  இது சருமத்தில் கொலாஜனை தக்கவைக்கிறது.  இதில் இருக்கக்கூடிய எலாஜிக் அமிலம், கொலாஜன் குறைவு மற்றும் வீக்கத்தை தடுத்து, சுருக்கங்களையும் சரிசெய்கிறது. 

கேரட்:

கேரட்டில் பீட்டா கெரட்டின் இருப்பதால் சருமத்திற்கு இளமை தோற்றத்தையும், பிரகாசத்தையும் கொடுக்கிறது. 

மீன்:

மீனில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருக்கிறது.  இது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். 

தேன்:

தேனில் ஆண்டிஆக்ஸிடண்ட், ஆண்டிசெப்டிக், ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி மற்றும் ஆண்டி-பாக்டீரியல் தன்மை அடங்கியிருக்கிறது.  சருமத்திற்கு தேவையான அத்துனை நன்மைகளும் அடங்கிய தேனை உங்கள் அழகு பராமரிப்பில் சேர்த்து கொள்ளலாம்.

தக்காளி:

தக்காளியில் வைட்டமின் சி, லைக்கோபீன், ஆண்டிஆக்ஸிடண்ட் போன்றவை இருப்பதால் சருமத்திற்கு பயன்படுத்தலாம்.  அதிகபடியான எண்ணெய் சுரப்பை குறைத்து சருமத்தை பளிச்சிட செய்யும்.

க்ரீன் டீ:

க்ரீன் டீயில் Epigallocatechin gallate என்னும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் சருமத்தில் சுருக்கங்களை குறைத்து, இறந்த செல்களை அகற்றி பொலிவாக்குகிறது. 

ப்ரோக்கோலி மற்றும் கீரை:

பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.  இது சருமத்தில் ஈரப்பதத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.  ஆரோக்கியமான சருமத்திற்கு கீரைகளை அதிகம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com