முகப்பு »  நலவாழ்வு »  இயற்கை வழியில் வாய்ப்புண் குணமாக இவற்றை பின்பற்றுங்கள்!!

இயற்கை வழியில் வாய்ப்புண் குணமாக இவற்றை பின்பற்றுங்கள்!!

நம் பற்கள் மற்றும் நாக்கு பகுதியை சரியாக சுத்தம் செய்யாமல் வைத்திருந்தால் பாக்டீரியா அல்லது வைரஸ் போன்ற நோய் கிருமிகளாலும் வாய்ப்புண் உண்டாகும். 

இயற்கை வழியில் வாய்ப்புண் குணமாக இவற்றை பின்பற்றுங்கள்!!

சிறப்பம்சங்கள்

  1. தேனில் ஆண்டிபாக்டீரியல் தன்மை இருக்கிறது.
  2. வாய்ப்புண் குணமாக உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிக்கலாம்.
  3. வாய்ப்புண் குணமாக தேங்காய் எண்ணெய் தடவலாம்.

வாய்ப்புண் என்பது இருபாலருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனை தான். வாய் பகுதியில் இருக்கக்கூடிய மெல்லிய திசுக்களில் உருவாகக் கூடிய சிறு சிறு கொப்புளங்கள் தான் வாய்ப்புண்.  நம் பற்கள் மற்றும் நாக்கு பகுதியை சரியாக சுத்தம் செய்யாமல் வைத்திருந்தால் பாக்டீரியா அல்லது வைரஸ் போன்ற நோய் கிருமிகளாலும் வாய்ப்புண் உண்டாகும்.  மேலும் உணவுகளில் உப்பு, காரம் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்த உணவுகளை அதிகம் சாப்பிட்டாலும் வாய்ப்புண் ஏற்படும். வாய்ப்புண் வந்தால் 7-10 நாட்கள் வரை இருக்கும்.  ஆனால் சிலருக்கு வாய்ப்புண் ஏற்பட்டால் வலி மற்றும் வீக்கம் உண்டாகும்.  இயற்கை முறையில் இதனை எப்படி சரிசெய்வதென்று பார்ப்போம்.  

ஊட்டச்சத்துக்கள்: 


சிங்க், இரும்புச்சத்து, வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடும்போது வாய்ப்புண் ஏற்படாது.  கீரைகள், ப்ரோக்கோலி, பீன்ஸ் மற்றும் பருப்புகள் ஆகியவற்றை சாப்பிடலாம். 

ஆப்பிள் சிடர் வினிகர்:

அமிலத்தன்மை மிகுந்த இந்த ஆப்பிள் சிடர் வினிகரை ஒரு மேஜைக்கரண்டி எடுத்து அரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து வாய் கொப்பளித்தால் சில நாட்களில் வாய்ப்புண் குணமாகும். 

l9bi4p9

 பற்பசை: 

பற்பசையில் ஆண்டிமைக்ரோபியல் தன்மை இருப்பதால், வாய் பகுதியில் உள்ள கிருமிகளை அழிக்கிறது.  பற்பசையை வாய்ப்புண்ணில் தடவி சில நிமிடங்கள் கழித்து கொப்பளித்தால் வாய்ப்புண் குணமாகும்.  

உப்புநீர்: 

வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் குணமாகும்.  

uui3hmv8

பூண்டு: 

பூண்டில் ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் தன்மை இருக்கிறது.  பூண்டை நறுக்கி, அதனை வாய்ப்புண்ணில் ஓரிரு நிமிடங்கள் தேய்த்து வந்தால் விரைவில் குணமாகும்.  

தேன்: 

தேனில் ஆண்டிபாக்டீரியல் தன்மை இருப்பதால் தேனை வாய்ப்புண்ணில் தடவலாம்.  இது வறட்சியை போக்கி ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.  

Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

தேங்காய் எண்ணெய்: 

தேங்காய் எண்ணெயில் காட்டனை நனைத்து வாய்ப்புண்ணில் தடவலாம்.  இது வாய்ப்புண்ணில் வீக்கம் குறையும்.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------