முகப்பு »  நலவாழ்வு »  முடிக்கொட்டுவதிலிருந்து காக்கும் இயற்கை!

முடிக்கொட்டுவதிலிருந்து காக்கும் இயற்கை!

வறண்ட கூந்தல், முடி உதிர்வு, பொடுகு, முடி உடைதல் போன்ற பிரச்சனையை குறைந்த செலவில் சரிசெய்ய முக்கிய குறிப்புகள் உங்களுக்காக ஸ்வில்ஸ்டர் பரிந்துரைக்கிறோம்.

முடிக்கொட்டுவதிலிருந்து காக்கும் இயற்கை!

Shikakai can help you have smooth and shiny hair

சிறப்பம்சங்கள்

  1. Shikakai has a cooling effect on your scalp
  2. Anti-fungal properties of shikakai can help in getting rid of dandruff
  3. Shikakai can prevent split ends and premature greying of hair

வறண்ட தலை முடி, உடைந்த முடி நுனி, பொடுகுகள்... இவைதான் உங்கள் அழகான கூந்தலுக்கு முதலும் கடைசியுமான எதிரிகள். இந்த எதிரிகளிடமிருந்து காக்க இயற்கை நமக்கு பல அரிதான பொருட்களை தந்திருக்கிறது. அவற்றில் சில்வற்றை பற்றி பார்ப்போம்.

kh065kko

Shikakai can help in having shiny and smooth hair
Photo Credit: iStock


சீயக்காயின் பயன்கள்:

1) சீயக்காய் தலையை குளுமையாக வைக்க உதவுகிறது.

2) சீயக்காய் ஒரு நல்ல ஆன்டி-ஃபங்கள் பொருளாக இருக்கிறது.

3) தலைமுடி உடைவதைத் தடுக்கிறது.

வறண்ட தலைமுடி, பொடுகுகள், குறிப்பிட்ட வயதுக்கு முன்பே பூப்படைதல், முடி உடைதல், சிக்கலான கூந்தல் இவை அனைத்தும் முடி உதிர்வதற்கான முக்கிய காரணிகளாகும். இப்பொழுதும் இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்துவதே சிறந்த ஒன்றாகும். உணவுப் பழக்க வழக்கம் மற்றும் பல காரணங்களால் வாழ்க்கை முறை மாறிவிட்டது. இதனால் பலவகையான பிரச்னைகளை நாம் சந்திக்கிறோம். அவற்றில் முக்கியமான ஒன்று முடி உதிர்தல். இயற்கை முறையில் அவற்றை ஈஸியாக சரி செய்யலாம்.

இயற்கை முறையில் எப்படி சரி செய்வது?

நம் முன்னோர்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்டது சீயக்காய் தான். சீயக்காயை காயவைத்துப் பொடியாக்கி கொஞ்சம் சூடான தண்ணிரில் கலந்து பேஸ்ட் மாதிரி பத்ததில் வைத்து மஸாஜ் செய்வது போன்று தலையில் தேய்த்து கழுவலாம்.

முடிப்பராமரிப்பில் முக்கியமான ஒன்று உச்சந்தலையை சுத்தமாகவும், குளுமையாகவும் வைத்திருக்க வேண்டும். தூசி மற்றும் அழுக்குகள் சேரும்போது அது முடியின் வேரை வெகுவாக பாதிக்கும். இதனால், முடி உதிர்தல் சீக்கிரம் வந்துவிடும்.

சீயக்காயின் பயன்கள்:

1) தலையை குளுமையாகவும், வறன்டு விடாமல் பாதுகாக்கவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. 

2) சீயக்காவில் இருக்கும் இயற்கை மூலப் பொருட்கள் பூஞ்சைகள் ஏற்படாமல் பாதுகாக்கும். 

3) தலை அரிப்புக்கான சிறந்த நிவாரணி சீயக்காய் மட்டுமே.

4) பலருக்கு முடி உதிர்தல் பெரிய பிரச்னையாக இருக்கும். ஆன்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த சீயக்காய் மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கும்.

5) வைட்டமின் C,A,E மற்றும் K நிறைந்த சீயக்காய் முடியை பளபளக்க வைக்க உதவும்.

6) இயற்கை முறையில் மென்மையான பட்டுப் போன்றதொரு கூந்தலாக்க சீயக்காய் சிறந்த ஒன்று.

7) ஊட்டமிழந்த முடிகளை சரிசெய்ய, முடி உடைதலைத் தடுக்கும்.

8) தலையில் இருக்கும் பேன்களை முற்றிலும் அழிக்கவும், பரவாமல் தடுக்க சியக்காய் நல்லது.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com