முகப்பு »  நலவாழ்வு »  கரும்பு சாற்றில் இவ்வளவு நன்மைகளா??

கரும்பு சாற்றில் இவ்வளவு நன்மைகளா??

கரும்பு சாற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.  உடல் எடை குறைக்க நார்ச்சத்து மிகவும் முக்கியமான சத்து.  

கரும்பு சாற்றில் இவ்வளவு நன்மைகளா??

சிறப்பம்சங்கள்

  1. கரும்பு சாறு குடிப்பதால் உடல் புத்துணர்ச்சியாக இருக்கும்.
  2. உடலை ஈரப்பதத்துடன் வைத்திருக்க கரும்பு சாறு குடிக்கலாம்.
  3. உடற்பயிற்சிக்கு பிறகு குடிக்க சிறந்த பானம் கரும்பு சாறு.

கோடைக்காலத்தில் வியர்வை அதிகம் வெளியேறுவதால் உடலில் நீரிழப்பு ஏற்படும்.  உடலில் நீரை தக்க வைப்பதற்காக நிறைய நீர் ஆகாரங்களை உட்கொள்வது அவசியம்.  ஆம் பானா, சர்பத், கரும்பு சாறு, இளநீர் போன்றவற்றை அடிக்கடி குடித்து கொண்டே இருக்க வேண்டும்.  இந்த பானங்கள் உடலுக்கு குளிர்ச்சியையும் ஆரோக்கியத்தையும் தர வல்லது. அதிலும் குறிப்பாக கரும்பு சாறு.  இது உடல் எடையை குறைத்து, மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது.  தினமும் ஒரு க்ளாஸ் கரும்பு சாறு குடிப்பதால் உடல் எடை குறைகிறது.  300 மிலி கரும்பு சாற்றில் 111 கலோரிகள் உள்ளது.  இதில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது.  மேலும் கால்சியம், மக்னீஷியம், பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளது.  சிலருக்கு உடலில் உப்பு பற்றாக்குறை இருக்கும்.  கரும்பு சாறு குடிப்பதால் அதனை ஈடு செய்யலாம்.  கரும்பு சாற்றை இன்னும் சுவையாக மாற்ற விரும்பினால், அதில் ப்ளாக் சால்ட் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளலாம்.  

கரும்பு சாற்றில் இயற்கையாகவே இனிப்பு சுவை அதிகம் உள்ளது.  நம் உடலுக்கு தினசரி தேவைப்படும் சர்க்கரை அளவை கரும்பு சாறு குடிப்பதால் சீராக வைத்திருக்க முடியும்.  இது தவிர கரும்பு சாறு குடுப்பதால் உடல் எடை குறைகிறது.  மேலும் சில நன்மைகளை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.  


jpqvipc

கொழுப்பு சத்து:

உடலுக்கு புத்துணர்வு தரக்கூடிய இந்த கரும்பு சாற்றில் இனிப்பு சுவை மிகுதியாக இருக்கிறது.  ஆனால் அதில் கொழுப்பு சத்து துளியும் இல்லை.  தினமும் ஒரு க்ளாஸ் கரும்பு சாறு குடிப்பதால், உடலில் கலோரிகள் குறைந்து, எடையும் குறையும்.  

மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது:

உடலில் மெட்டபாலிசம் சிறப்பாக இருந்தால் தானாகவே உடல் எடை குறையும்.  கரும்பு சாறு குடிப்பதால் மெட்டபாலிசம் அதிகரிக்கிறது. 

நார்ச்சத்து:

கரும்பு சாற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.  உடல் எடை குறைக்க நார்ச்சத்து மிகவும் முக்கியமான சத்து.  

செரிமானம் சீராக இருக்கும்:

நார்ச்சத்து நிறைந்த கரும்பு சாற்றை குடிப்பதால் மலச்சிக்கல் இருக்காது.  செரிமானம் சீராக இருக்கும்.  வயிறு மற்றும் குடல் இயக்கங்களும் சிறப்பாக இருக்கும்.  உடலுக்கு புத்துணர்ச்சியளிக்கக்கூடியது என்பதால் தினசரி குடிக்கலாம். 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com