சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் கால்சியம் ஆக்சலேட் என்ற வேதிப் பொருளால் ஆனது. சிறுநீரக கற்களால் வலி, சிறுநீர் சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்

சிறுநீரக கற்களை நீக்க, வீட்டிலேயே செய்யக் கூடிய மருத்துவம்
ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு
ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் எலுமிச்சை சாறில் சிட்ரிக் அமிலம் அதிகம் உள்ளதால், சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைய செயல்படுகின்றன. சிறுநீரகத்தில் உள்ள நச்சு பொருட்கள் வெளியேறவும் உதவுகின்றன. சிறுநீரகத்தில் பிரச்சனைகளால் ஏற்படும் வலி நீங்க ஆப்பிள் சிடர் வினகர் பயன்படுகிறது. 200 முதல் 250 மி.லி தண்ணீரில் இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்து கலக்கி குடிக்கவும். தினசரி, 250 மி.லிக்கு அதிகமாக இந்த கலவையை குடிக்ப்பதை தவிர்க்கவும். ஏனெனில், அளவு அதிகமாக ஆப்பிள் சிடர் வினிகர் எடுத்து கொண்டால், உடலில் உள்ள பொட்டாசியம் அளவு குறையும்.

தண்ணீர் அதிகமாக குடிக்கவும்
சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள கற்கள் கரைய அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். முக்கியமாக, உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதாலும், சிறுநீரகத்தில் கற்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியமான உடலுக்கு, கட்டாயமாக தினசரி 12 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

செலிரி
சிறுநீரகத்தில் கற்கள் ஏற்பட காரணமாக இருக்கும் நச்சு பொருட்கள் நீங்க செலரி உதவுகிறது. செலரி தண்டுகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, ஜுஸ் தயாரித்து கொள்ளவும். செலரி ஜீஸை தினசரி குடித்து வந்தால், சிறுநீரக வெளியேற்றம் சீராக அமையும். முக்கியமாக, உடல் அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தாலோ அல்லது குறைந்த இரத்த அழுத்தம் இருந்தாலோ, செலரி ஜுஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

ராஜ்மா பீன்ஸ்
மெக்னீசியம் சத்து அதிகம் நிறைந்த ராஜ்மா பீன்ஸ், சிறுநீரக பிரச்சனைகளை நீக்க உதவும். ராஜ்மா பீன்ஸ் ஆறு மணி நேரம் ஊற வைத்து சாப்பிட்டால், சிறுநீரக கற்களால் ஏற்பட கூடிய வலி குறைய உதவும்.

மாதுளைப்பழ ஜுஸ்
சிறுநீரில் உள்ள அசிடிட்டி அளவை குறைப்பது மட்டுமின்றி, சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கவும் மாதுளைப்பழ ஜுஸ் பயன்படுகிறது. ஊட்டச்சத்துகள் அதிகம் நிறைந்த மாதுளைப்பழ ஜூஸை தினமும் குடிக்கலாம். சுவையாகவும் உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
டேன்டிலியன் வேர்கள்:
டேன்டிலியன் வேர்களில் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ,பி,சி,டி, பொட்டாசியம், மினரல்ஸ், இரும்புச்சத்து ஆகியவை உள்ளது. சீரான சிறுநீரக செயல்பாட்டுக்கு உதவ கூடியது. டேன்டிலியன் வேரருடன் இஞ்சி, ஆப்பிள் சேர்த்து சாறாகவும் குடிக்கலாம். உடலில் உள்ள நச்சு பொருட்கள் வெளியேறுவதற்கும், மலச்சிக்கல் நீங்கவும் இந்த வேர் உதவுகிறது

சமீபத்திய கதைகள்
உடற்பயிற்சியை அடிக்கடி தவிர்க்கிறீர்களா.? இதனால் உங்கள் உடல் எதிர்கொள்ளும் விளைவுகள் என்ன.?
பால் குடித்தால் எடை குறையுமா..!! என்ன சொல்ரீங்க..?
மின்சார கார்களால் காற்று மாசுபடாதா..! இனியும் இதுபோன்ற கட்டுக்கதைகளை நம்பாதீங்க...
அடிக்கடி பயணம் செய்பவரா நீங்கள்.? உங்கள் ஆரோக்கியம் மற்றும் எடையை பராமரிக்க 8 டிப்ஸ் இதோ...