முகப்பு »  நலவாழ்வு »  உடல் எடை குறைக்க பப்பாளி சாப்பிடலாமா??

உடல் எடை குறைக்க பப்பாளி சாப்பிடலாமா??

 வைட்டமின் சி, ஈ, பீட்டா கெரட்டின், ஆண்டிஆக்ஸிடண்ட் போன்றவை இருப்பதால் சருமத்தை இளமை தோற்றத்துடன் வைத்திருக்கும்.   

உடல் எடை குறைக்க பப்பாளி சாப்பிடலாமா??

சிறப்பம்சங்கள்

  1. நார்ச்சத்து மற்றும் கலோரிகள் குறைந்த பழம் பப்பாளி.
  2. இதில் பீட்டா கெரட்டின் இருப்பதால் சருமத்திற்கு மிகவும் நல்லது.
  3. செரிமானத்தை சீராக வைக்கிறது பப்பாளி.

கோடைக் காலத்தில் மிக எளிதில் கிடைக்கக்கூடிய பழம் பப்பாளி.  பப்பாளியில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது.  வைட்டமின் சி, ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் சரும ஆரோக்கியம் மற்றும் கண் பார்வையை அதிகரிக்கும்.  பப்பாளியை சாப்பிடுவதால் நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் போன்ற உடல் உபாதைகள் குணமாகிறது.  அத்துடன் பப்பாளியில் இருக்கும் மேலும் சில ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்ப்போம்.  

கொலஸ்ட்ரால்: 
பப்பாளியில் வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் தமணிகளில் தேங்கும் கொலஸ்ட்ராலை குறைக்கிறது.  இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்கள் தடுக்கப்படுகிறது.  

உடல் எடை: 
உடல் எடை குறைக்க பப்பாளி சாப்பிடலாம்.  பப்பாளியில் உள்ள நார்ச்சத்து உங்களை நாள் முழுக்க நிறைவாக வைத்திருக்கும்.  செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கலை தடுக்கிறது.  இந்த பழத்தில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் உடல் எடை குறைக்க பப்பாளி உகந்தது.  
 


p87d1d8g

 

நீரிழிவு நோய்: 
பப்பாளியில் இனிப்பு சத்து குறைவு.  அதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.  நீரிழிவு நோயாளிகள் பப்பாளி பழம் நிறைய சாப்பிடலாம்.  

நோய் எதிர்ப்பு சக்தி: 
வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.  மேலும் உடலில் நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும்.  

கண் பார்வை: 
பப்பாளியில் வைட்டமின் ஏ இருப்பதால் கண் பார்வை குறைபாடு நீங்கும்.  

ஆர்திரிடிஸ்: 
வைட்டமின் சி மற்றும் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் ஆர்திரிடிஸ் நோயை தடுக்கிறது.  

செரிமானம்: 
பப்பாளியில் பாப்பெயின் என்னும் என்சைம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.  

மாதவிடாய்:
பப்பாளி சாப்பிடுவதால் மாதவிடாயின் போது இரத்த போக்கு சீராக இருக்கும்.  


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

புற்றுநோய்: 
ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஃபைட்டோநியூட்ரியன்ட்ஸ், ஃப்ளேவனால்ஸ் இருப்பதால் புற்றுநோய் அபாயம் தடுக்கப்படுகிறது.  குறிப்பாக குடல் பகுதியில் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.  

சரும பாதுகாப்பு: 
சூரிய கதிர்களால் உண்டாகும் சரும பாதிப்புகளை போக்க பப்பாளி சாப்பிடலாம்.  வைட்டமின் சி, ஈ, பீட்டா கெரட்டின், ஆண்டிஆக்ஸிடண்ட் போன்றவை இருப்பதால் சருமத்தை இளமை தோற்றத்துடன் வைத்திருக்கும்.   
 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------