முகப்பு »  நலவாழ்வு »  இந்த உணவுகளை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையும்!

இந்த உணவுகளை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையும்!

கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், இரத்த நாளங்களில் கொழுப்புகள் தேங்கிவிடும். 

இந்த உணவுகளை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையும்!

சிறப்பம்சங்கள்

  1. கொலஸ்ட்ரால் இருதய ஆரோக்கியத்தை பாதிக்கும்.
  2. பார்லி மற்றும் ஓட்ஸ் உடல் எடை குறைக்க உதவும்.
  3. சூரியகாந்தி எண்ணெய் மற்றும் கனோலா எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தலாம்.

துரித உணவுகளால் உடலில் கொலஸ்ட்ரால் கூடுகிறது என்ற விழிப்புணர்வு தற்போது அனைவருக்கும் ஏற்பட்டுவிட்டது.  கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் இருக்கக்கூடிய வெழுகு போன்ற திரவம்.  திடமான செல்களை உற்பத்தி செய்வதற்கு இந்த கொழுப்பு மிகவும் முக்கியமானது.  இருதயத்திற்கு ஆபத்து விளைவிக்கக்கூடியதும் இதுவே.  கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், இரத்த நாளங்களில் கொழுப்புகள் தேங்கிவிடும்.  சில உணவு வகைகள் உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைத்துவிடும்.  என்னென்ன உணவுகள் என்று பார்ப்போமா?

ஓட்ஸ்:


ஒரு பௌல் ஓட்மீலில் 2 கிராம் நார்ச்சத்து இருக்கிறது.  நாள் ஒன்றிற்கு 25 முதல் 30 கிராம் வரை நார்ச்சத்து தேவைப்படுகிறது.  ஆனால் நமக்கு குறைந்தபட்சமாக 5 முதல் 10 கிராம் நார்ச்சத்து கிடைத்துவிடுகிறது.  

பார்லி மற்றும் முழு தானியங்கள்:

பார்லி, தினை போன்ற முழு தானியங்களில் நார்ச்சத்து அதிகம்.  மேலும் இவை இருதய நோய்களின் அபாயத்தை தடுக்கிறது.  

3st0mvig

 

வெண்டைக்காய் மற்றும் கத்திரிக்காய்:

வெண்டைக்காய் மற்றும் கத்திரிக்காயில் நார்ச்சத்து அதிகம், கலோரிகள் மிக குறைவு.  இந்த இரண்டு காய்களையும் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். 

பீன்ஸ்:

பீன்ஸில் புரதம் அதிகமாக உள்ளது.  மேலும் நார்ச்சத்து இருப்பதால் உங்களை நாள் முழுக்க நிறைவாக வைத்திருக்கும்.  இவை செரிப்பதற்கு நிறைய நேரம் எடுக்கும் என்பதால் அடிக்கடி பசியுணர்வு இருக்காது.  

நட்ஸ்:

வால்நட், பீனட், பாதாம் போன்றவை இருதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.  தினமும் சிறிதளவு இந்த போன்ற நட்ஸ் சாப்பிட்டு வந்தால், கெட்ட கொலஸ்ட்ரால் குறைக்கப்படும்.  

பழங்கள்:

ஆப்பில், ஸ்ட்ராபெர்ரி, திராட்சை போன்ற பழங்களில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது.  மேலும் பெக்டின் என்னும் பொருள் இருப்பதால் கொலஸ்ட்ரால் குறைகிறது.  

சோயா:

சோயா பீன்ஸ், சோயா சங்க்ஸ், டோஃபு, சோயா பால் போன்றவை கொலஸ்ட்ராலை 5-6 சதவிகிதம் வரை குறைக்கிறது. 

வெஜிடபிள் ஆயில்:

கேனோலா ஆயில் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இரண்டுமே சமையலுக்கு சிறந்தது.  வெண்ணெய்க்கு பதிலாக இவற்றை பயன்படுத்தலாம்.  

மீன்:

வாரத்தில் 2 -3 முறை ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த மீன்களை சாப்பிடலாம்.  இறைச்சிக்கு பதிலாக மீன் சாப்பிடுவது மிகவும் நல்லது.  கொலஸ்ட்ராலை குறைக்கும் மேலும் சில எளிய முறைகளை பார்ப்போம்.  

உடல் எடை:

உடல் எடை அதிகரிக்கும்போது தானாகவே உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்.  லிஃப்ட் பயன்படுத்துவதற்கு பதிலாக படியில் ஏறி செல்லலாம்.  குளிர்பானங்களை குடிப்பதற்கு பதிலாக நிறைய தண்ணீர் குடிக்கலாம். 

புகைப்பழக்கம்:

புகைப்பிடிப்பது கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்.  புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டாலே போது உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்காது.  

உடற்பயிற்சி:

வீடியோ கேம்ஸ் விளையாடுவதை தவிர்த்து நடைப்பயிற்சி, நீச்சல் போன்ற உடற்பயிற்சிகளை செய்யலாம்.  இதனால் உடலில் கொலஸ்ட்ரால் குறைந்து உடல் எடையும் குறைகிறது.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com