முகப்பு »  நலவாழ்வு »  வாயு பிரச்சனைகளை விரட்டும் வீட்டு வைத்தியம்

வாயு பிரச்சனைகளை விரட்டும் வீட்டு வைத்தியம்

புகைப்பழக்கம், அளவுக்கு அதிகமான உணவு சாப்பிடுதல், சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது போன்ற காரணங்களினால் அஜீரணம் மற்றும் வாயு பிரச்னைகள் ஏற்படலாம்

வாயு பிரச்சனைகளை விரட்டும் வீட்டு வைத்தியம்

சிறப்பம்சங்கள்

  1. குமட்டல், வயிற்று வலி ஆகியவை வாயு பிரச்னைகளின் அறிகுறிகள்
  2. அஜீரண கோளாறுகள் குணமடைய ஓமம் பயன்படுத்தலாம்
  3. பெருங்காயம் கிருமி நாசினி குணம் கொண்டது
புகைப்பழக்கம், அளவுக்கு அதிகமான உணவு சாப்பிடுதல், சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது போன்ற காரணங்களினால் அஜீரணம் மற்றும் வாயு பிரச்னைகள் ஏற்படலாம். குமட்டல், வயிற்று வலி, வயிற்று பிடிப்பு ஆகியவை இதன் அறிகுறிகள். இந்த பிரச்னைகளை நீக்க வீட்டிலேயே வைத்தியம் செய்யலாம். வீட்டு சமையல் அறையில் இருக்கும் பெருங்காயம், ஓமம் ஆகியவைகள் வாயு பிரச்னைகளை நீக்கும் குணமுடையவை.
 
 
asafoetida

ஓமம்

ஆயுர்வேத மருத்துவத்தில் ஓமம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அஜீரண கோளாறுகளை குணப்படுத்த ஓமப்பொடி, சுக்குப் பொடி தலா 1 ஸ்பூன் எடுத்துக் கொண்டு, அவற்றுடன் கறுப்பு உப்பு சிறிதளவு சேர்க்க வேண்டும். இதை தண்ணீரில் கலந்து குடித்தால், அஜீரண தொல்லை நீங்கும்.

ஓமத்தில் உள்ள தைமால், ஜீரண சக்தியைக் கொடுக்கிறது. வாயு மற்றும் அஜீரண பிரச்னைகள் உள்ளவர்கள் ஓமப் பொடியை தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

ஓமப்பொடியை எலுமிச்சை சாறில் கலந்தும் குடிக்கலாம். இதனால், ஜீரணம் சம்பந்தமான பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
 

 
ajwain


பெருங்காயம்

அஜீரண பிரச்னைக்கு மற்றொரு சிறந்த பொருள் பெருங்காயம். ஆன்டி - பாக்டீரியல், ஆன்டி - இன்ஃப்ளமேட்ரி, கிருமி நாசினி என பல நல்ல விஷயங்கள் இதில் இருக்கின்றன. தவிர, நமது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் இது உதவுகிறது.

 
hing


தண்ணீரில், சிறிதளவு கறுப்பு உப்பு, பெருங்காயம் ஆகியவற்றுடன் கால் டீஸ்பூன் இஞ்சி பொடி சேர்த்து குடிக்கவும்.

மோரில், சிறிதளவு பெருங்காயம் சேர்த்து குடிக்கலாம். இதனால், குமட்டல், வாயு பிரச்னைகள் நீங்கும்.

அஜீரண பிரச்னைகளால் ஏற்படும் வயிற்று வலி நீங்க, தண்ணீரில் சிறிதளவு பெருங்காயத்தைக் கலந்து, அந்தத் தண்ணீரில் நனைத்த துணியை வயிற்றில் ஒற்றி எடுத்தால், வலி நீங்கும்.
 

asafoetida

சுக்கு, மிளகு, கறிவேப்பிலை, ஓமம், சீரகம், பெருங்காயம் தலா 1 டீஸ்பூன் பொடி செய்து, அதனை இ டீஸ்பூன் நல்லெண்ணெயில் போட்டு கிளறி, அதனுடன் கொஞ்சம் கல் உப்பு சேர்த்து வைத்து கொள்ளவும். இது பல வகையான அஜீரணக் கோளாறுகளுக்கும் உகந்தது.
 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------