முகப்பு »  நலவாழ்வு »  மழைக்கால கூந்தல் பிரச்னையைத் தீர்க்க நெய்யைப் பயன்படுத்துங்கள்..!

மழைக்கால கூந்தல் பிரச்னையைத் தீர்க்க நெய்யைப் பயன்படுத்துங்கள்..!

ஆயுர்வேதத்தில் நெய்யானது கூந்தல் பிரச்சனைகளைக் போக்கும் சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது. இது கூந்தலை உள்ளிருந்து வலுவடையச் செய்வதோடு வெளியில் பளப்பளப்பாகவும் காட்சியளிக்கச் செய்கிறது.

மழைக்கால கூந்தல் பிரச்னையைத் தீர்க்க நெய்யைப் பயன்படுத்துங்கள்..!

சிறப்பம்சங்கள்

  1. தலை முழுவதும் நெய்யை வைத்து மசாஜ் செய்வதால் வேர்கள் வலுவடைகின்றன
  2. ஆரோக்கியமான கொழுப்புக்கள் முடிக்கு ஆழ்ந்த ஊட்டச்சத்துகளை அளிக்கின்றன
  3. வைட்டமின்கள் A, D, K, E ஆகியவவை முடியின் இளநரையைத் தடுக்க உதவுகிறது

நெய் என்பது சாப்பிடக்கூடிய கொழுப்பின் ஆரோக்கியமான வடிவம். இந்திய உணவுகளில் நாவை ஊறவைக்கும், நறுமணத்தைக் கூட்டும் தன்மைக்கொண்ட நெய்யின் முக்கியமான ஒரு பயன்பாடு பலருக்கும் தெரியாது. ஆயுர்வேதத்தில் நெய் கூந்தல் பிரச்சனைகளைக் போக்கும் சிறந்த தீர்வாகப் பார்க்கப்படுகிறது. இது கூந்தலை உள்ளிருந்து வலுவடையச் செய்வதோடு வெளியில் பளப்பளப்பாகவும் காட்சியளிக்கச் செய்கிறது. வைட்டமின் A, D, K மற்றும் E ஆகியவற்றால் நிறைந்த நெய் செபம் உற்பத்தியை அதிகரிக்கவும் முடி உதிர்தலைத் தடுக்கவும் விஷத்தன்மை, அழுத்தத்தில் இருந்து முடிகளைப் பாதுகாக்கவும் செய்கிறது. இத்தகைய இயற்கைத் தீர்வான ஊட்டச்சத்து மதிப்பு உங்கள் முடியினது பராமரிப்பில் நீங்கள் ஏன் நெய்யைச் சேர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்களுள் ஒன்றாகும். 15 நிமிடங்கள் உங்கள் தலை முழுவதும் நெய்யை வைத்து மசாஜ் செய்வதால் வேர்கள் வலுவடைகின்றன. இதனால் நீங்கள் எல்லோரும் விரும்பும் வலுவான, பளப்பளப்பான கூந்தலைப் பெறலாம். சந்தையில் கிடைக்கும் மற்ற செயற்கை ஷாம்புக்கள் மற்றும் கண்டிஷனர்கள் போலல்லாமல் நெய் இயற்கையாக நீண்ட காலம் உங்களின் கூந்தலுக்கான நன்மைகளைக் கொண்டிருக்கும்.

1. கூந்தலுக்கான இயற்கையான கண்டிஷனர்

நெய் உங்கள் கூந்தலுக்கான ஒரு சிறந்த இயற்கையான கண்டிஷனர். இந்த இயற்கையான கண்டிஷனர் கடையில் கிடைக்கும் பிற கண்டிஷனர்களைப் போல் நறுமணம் தரவில்லையென்றாலும் உங்கள் கூந்தலுக்கு இரசாயன பாதிப்புக்களை ஏற்படுத்தாது. நெய்யில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் மற்றும் கொழுப்புகள் கூந்தலுக்கு ஊட்டச்சத்துகளைத் தருகின்றன. சிறந்த பலனைப் பெற நெய்யை ஆலிவ் எண்ணெய்யுடன் சேர்த்துப் பயன்படுத்துங்கள்.


1fd4virg
 

2. இளநரையிலிருந்து பாதுகாக்கும்

இக்காலத்தில் இளநரை ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. ஊட்டச்சத்துக் குறைப்பாடே இந்த பிரச்சனையின் மூலகாரணம் ஆகும். இந்த பிரச்சனையிலிருந்து ஆரோக்கியமான உணவுப்பழக்கம் உங்களைக் காப்பாற்றும். அதே சமயம் அதில் நெய்யும் சிறிய அளவில் பங்கு வகிக்கிறது. வைட்டமின்கள் A, D, K, E ஆகியவை முடியின் இளநரையைத் தடுக்க உதவுகிறது. நெய்யை சூடுப்படுத்தி உங்கள் கூந்தலின் வேர்களில் மசாஜ் செய்யுங்கள். துண்டால் கூந்தலை மூடிவைத்து 20 நிமிடத்திற்குப் பின் கழுவவும்.

3. முடி உதிர்வதிலிருந்து பாதுகாக்கிறது

வைட்டமின் D குறைபாடு முடி இழப்புக்கு ஒரு காரணமாக இருக்கின்றது. வைட்டமின் டி மற்றும் வைட்டமின் D -இன் துணைச்சத்துகள் இருக்கும் உணவை உட்கொள்வது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அதை உங்கள் கூந்தலில் தடவுவது சிறந்த பலனை அளிக்கும். நெய்யைப் பயன்படுத்தி உங்கள் கூந்தலுக்கு நீங்கள் நல்ல மசாஜ் செய்வதன் மூலம் உங்கள் கூந்தலுக்கு வைட்டமின் D சத்தைக் கொடுக்கலாம். உங்கள் வழக்கமான எண்ணெய்களில் நெய்யை சேர்த்து, அதை உங்கள் கூந்தலில் நன்கு மசாஜ் செய்யவும். காலப்போக்கில், நீங்களே முடி உதிர்வு குறைவதை உணர முடியும்.

cdkvj4j
 

4. வெளிப்புறச் சேதத்திலிருந்து உங்கள் கூந்தலைப் பாதுகாக்கிறது

இரசாயனங்கள், சூரியன் மற்றும் மாசுபாடு ஆகியவற்றின் வெளிப்பாட்டால் உங்கள் கூந்தல் பெரும் பாதிப்படைகிறது. இது விஷத்தன்மை அழுத்தத்தால் ஏற்படும் கூந்தல் வெடிப்புகள், இளநரை போன்றவற்றை ஏற்படுத்துகிறது. வைட்டமின்-E போன்ற கொழுப்பினால் கரையக்கூடிய வைட்டமின்கள் உங்கள் முடியில் ஒரு பாதுகாப்பான அடுக்கை உருவாக்குகின்றன, மேலும் ஃப்ரீ ரேடிகல்கள் இருப்பதால் சேதத்திலிருந்து கூந்தலைக் காப்பாற்றுகின்றன.

5. பொடுகு மற்றும் வறட்சியிலிருந்து கூந்தலைப் பாதுகாக்கிறது

வறட்சியான மற்றும் அரிப்பு இருக்கும் தலையில் எளிதாகப் பொடுகு ஏற்படுகிறது. இது கூந்தல் உதிர்வு போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. நெய் உங்கள் உச்சந்தலைக்கு ஊட்டமளித்துப் பொடுகையும் குறைக்கிறது. வாரம் ஒரு முறை 15-20 நிமிடம் மசாஜ் செய்வதால் பொடுகிலிருந்தும் உலர்ந்த, அரிப்பு நிறைந்த உச்சந்தலை போன்றவற்றிலிருந்தும் விடுபடலாம்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------