முகப்பு »  நலவாழ்வு »  செரிமானத்தை அதிகரிக்கும் 5 பொருட்கள்!!

செரிமானத்தை அதிகரிக்கும் 5 பொருட்கள்!!

ஆளிவிதையில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், வைட்டமின் பி, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் புரதம் இருக்கிறது.  ஆளிவிதையை சாப்பிடுவதால் செரிமானம் சீராகி மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது. 

செரிமானத்தை அதிகரிக்கும் 5 பொருட்கள்!!

சிறப்பம்சங்கள்

  1. சோம்பு, ஆளிவிதை, ஓமம் போன்றவற்றை சாப்பிட்ட பின் சாப்பிடலாம்.
  2. ஒமத்தில் கார தன்மை மிகுதியாக இருப்பதால் குறைவாக எடுத்து கொள்ளலாம்.
  3. ஆளிவிதையை சாப்பிடுவதால் மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது.

நம்மில் பெரும்பாலானோர்க்கு செரிமான பிரச்னைகள் இருக்கிறது.  இதனை சரிசெய்ய உணவில் சோம்பு, எள், பாதாம், ஆளிவிதை, ஓமம் ஆகிய ஐந்து பொருட்களை சேர்த்து கொள்ளலாம்.  இந்த பொருட்களை மதிய உணவு சாப்பிட்ட பின் சாப்பிடுவதால் செரிமானம் சீராக இருக்கும்.  மேலும் இவற்றின் ஆரோக்கிய நன்மைகளை பார்ப்போம்.   

1. சோம்பு: 

சோம்பு சாப்பிடுவதால் செரிமான மண்டலம் சிறப்பாக இயங்கும்.  நெஞ்செரிச்சல், வலி மிகுந்த மாதவிடாய், இரத்த சர்க்கரை மற்றும் உடலில் நீரேற்றம், மெட்டபாலிசம் போன்றவற்றை சரிசெய்ய சோம்பு சாப்பிட்டு வரலாம்.  


2. எள்: 

எள் நார்ச்சத்து மிகுந்தது.  இதனை உணவில் சேர்த்து கொள்வதால் செரிமானம் சீராக இருக்கும்.  மேலும் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை இன்னும் ஆரோக்கியமாக வைக்கிறது.  100 கிராம் எள், 12 கிராம் நார்ச்சத்தை கொண்டுள்ளது.  

a46cbbt8

3. பாதாம்: 

பாதாமில் வைட்டமின் ஈ மற்றும் நார்ச்சத்து இருக்கிறது.  தினமும் பாதாம் சாப்பிட்டு வருவதால் இருதய ஆரோக்கியம் மற்றும் கண் பார்வை அதிகரிக்கிறது.  அத்துடன் செரிமானமும் அதிகரிக்கிறது.  

4. ஆளிவிதை: 

ஆளிவிதையில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், வைட்டமின் பி, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் புரதம் இருக்கிறது.  ஆளிவிதையை சாப்பிடுவதால் செரிமானம் சீராகி மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது. 

5. ஓமம்: 

ஓமத்தை அப்படியே சாப்பிடலாம்.  இதில் தைமோல் என்னும் பொருள் இருப்பதால் செரிமானத்திற்கு தேவையான அமிலங்களின் சுரப்பை அதிகரிக்கிறது.  ஓமம் கார தன்மை மிகுந்ததாக இருக்கும் என்பதால் மிகவும் குறைவான அளவே பயன்படுத்தலாம்.  அஜீர கோளாறு ஏற்பட்டால் அடிக்கடி ஓம தண்ணீர் குடிக்கலாம். 

 

 


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------