முகப்பு »  நலவாழ்வு »  மாலை நேர பசியை போக்க இந்த ப்ரோட்டீன் ஸ்நாக்ஸ் சாப்பிடலாம்!!

மாலை நேர பசியை போக்க இந்த ப்ரோட்டீன் ஸ்நாக்ஸ் சாப்பிடலாம்!!

வீட்டில் இருக்கக்கூடிய சில ஆரோக்கிய பொருட்கள் கொண்டு எப்படி பசியை போக்கிக் கொண்டு ஆரோக்கியத்தையும் அதிகரிப்பது என பார்ப்போம்.  

மாலை நேர பசியை போக்க இந்த ப்ரோட்டீன் ஸ்நாக்ஸ் சாப்பிடலாம்!!

சிறப்பம்சங்கள்

  1. புரதம் நிறைந்த உணவுகளை பசிக்கும்போது சாப்பிடலாம்.
  2. பாதாம் மற்றும் பன்னீரில் புரதம் அதிகம் உள்ளது.
  3. யோகர்ட்டில் ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து சாப்பிடலாம்.

வேலை நேரத்தில் எப்போது பசி உணர்வு ஏற்படும் என்பது நமக்கு தெரியாது.  அதனால் நாம் எப்போதும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு பொருட்களை நாம் வைத்துக் கொள்வது நல்லது.  ஆரோக்கியம் என விளம்பரம் செய்து விட்டு, அதில் செயற்கையான ஃப்ளேவர், இனிப்பு போன்றவற்றை சேர்த்து தயாரிக்கிறார்கள்.  இவை உடல் ஆரோக்கியத்தை கெடுப்பதோடு உடல் பருமனையும் அதிகரிக்கும்.  வீட்டில் இருக்கக்கூடிய சில ஆரோக்கிய பொருட்கள் கொண்டு எப்படி பசியை போக்கிக் கொண்டு ஆரோக்கியத்தையும் அதிகரிப்பது என பார்ப்போம்.  

பாதாம்: 


பாதாமில் புரதம், மக்னீஷியம், வைட்டமின் ஈ, நார்ச்சத்து, ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்துள்ளது. எப்போதும் ஒரு சின்ன டப்பாவில் பாதாம் எடுத்து செல்லுங்கள்.  பசிக்கும் போது இதனை சாப்பிடுவது நல்லது.  

ட்யூனா சாண்ட்விச்: 

மீனில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், வைட்டமின் பி, புரதம் ஆகிய சத்துக்கள் இருக்கிறது.  இந்த ட்யூனா சாண்ட்விச்சை வீட்டிலேயே மிக எளிதில் சமைத்து சாப்பிடலாம்.  மாலை நேர பசிக்கு சிறந்த உணவு. 

கடலைப்பருப்பு: 

அதிகபடியான புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது இந்த வறுத்த கடலைப்பருப்பு.  உடல் எடை குறைக்க நினைத்தால் இந்த வறுத்த கடலையை சாப்பிடலாம்.  

frsqr5u8

முட்டை: 

வேகவைத்த ஒரு முட்டையில் 6 கிராம் புரதம் இருக்கிறது.  தினமும் பசிக்கும்போது ஒரு வேகவைத்த முட்டையை சாப்பிடலாம்.  இது நாள் முழுக்க உங்களை ஆற்றலுடன் செயல்பட செய்யும்.  

பன்னீர்: 

பொதுவாகவே, சைவ பிரியர்களுக்கு அவ்வளவு எளிதில் புரதம் கிடைத்துவிடாது.  பன்னீரில் புரதம் அதிகமாக இருப்பதால் இதனை அடிக்கடி சாப்பிடலாம்.  கீடோ டயட்டான இந்த பன்னீர் உடல் எடை குறைக்க பயன்படுகிறது.  

யோகர்ட்: 

யோகர்டில் கால்சியம், நார்ச்சத்து, ப்ரோபையோடிக்ஸ், புரதம் போன்ற சத்துக்கள் இருப்பதால், செரிமானத்தை அதிகரித்து உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.  

ஓட்மீல்: 

இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து சீராக இருக்க செய்கிறது.  ஓட்மீல் சாப்பிடுவதால் இருதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  மேலும் இதில் நார்ச்சத்து மற்றும் புரதம் இருக்கிறது.  

ப்ரோட்டீன் பார்: 

வீட்டிலேயே செய்யக்கூடிய ப்ரோட்டீன் பார் மிகவும் ஆரோக்கியமானது.  புரதம் நிறைந்த தானியங்கள் அல்லது பருப்பு வகைகள் மற்றும் வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ப்ரோட்டீன் பார் சாப்பிடுவதால் உடல் எடை குறையும்.  

பூசணி விதை: 

புரதம் நிறைந்த இந்த பூசணி விதையை சாப்பிடுவதால் இருதயம் பலப்படும். இதில் மக்னீஷியம், சிங்க், நார்ச்சத்து போன்றவை இருக்கிறது.  அடிக்கடி பூசணி விதையை சாப்பிடலாம்.  

ஆப்பிள் மற்றும் பீனட் பட்டர்:

ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து உடல் எடை குறைக்க உதவும்.  அத்துடன் பீனட் பட்டரில் புரதம் இருப்பதால் இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது.  இதில் கலோரிகள் அதிகம் என்பதால் உடல் எடை அதிகரிக்க இதனை சாப்பிடலாம்.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com