முகப்பு »  நலவாழ்வு »  இந்த உணவுகளை நீங்கள் தினசரி தவறாமல் சாப்பிட வேண்டும்!!

இந்த உணவுகளை நீங்கள் தினசரி தவறாமல் சாப்பிட வேண்டும்!!

மோர் அல்லது தயிரை தினசரி உணவில் சேர்த்து கொள்ளலாம்.  தயிரில் உடலுக்கு தேவையான, குடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய நல்ல பாக்டீரியாக்கள்  இருக்கின்றன.

இந்த உணவுகளை நீங்கள் தினசரி தவறாமல் சாப்பிட வேண்டும்!!

சிறப்பம்சங்கள்

  1. பழங்களை அதிகம் சேர்த்து கொள்ளலாம்.
  2. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடுவதால் உடல் எடை குறையும்.
  3. ப்ரோபையோடிக் உணவுகளை சேர்த்து கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

உடல் எடையை குறைக்க இங்கு பல பேர் பல டயட்களை பின்பற்றுகிறார்கள்.  பெரும்பாலானோர் கடைபிடிப்பது கீடோ டயட்டை தான்.  கீடோ டயட் என்பது அதிகபடியான கொழுப்பு மற்றும் மிக குறைந்த அளவு கார்போஹைட்ரேட்.  வழக்கமான இந்திய உணவுகளால் நம் உடல் எடை அதிகரிக்கும்.  தினசரி நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் எவ்வளவோ கேடு விளைவிக்கக்கூடிய பொருட்கள் இருக்கின்றன.  பதப்படுத்தப்பட்ட மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகள் உடல் எடையை அதிகரிக்கக்கூடியது.  இதற்கு பதிலாக ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடலாம்.  உங்கள் உடல் எடை குறைய நீங்கள் தினசரி தவறாமல் சாப்பிட வேண்டிய சில உணவுகளை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.  

பழங்கள்:


அவ்வப்போது உங்களுக்கு ஏற்படும் பசியை போக்க நீங்கள் பழங்களை சாப்பிடலாம்.  மாம்பழம், பப்பாளி, மாதுளை, கொய்யா, ஆரஞ்சு, புளி, லிச்சீ, ஆப்பிள், முலாம்பழம், பேரிக்காய், ப்ளம்ஸ், வாழைப்பழம் ஆகியவை உடல் எடை குறைக்க உதவும்.  

காய்கறிகள்:

வெங்காயம், தக்காளி, கீரை, கத்திரிக்காய், பாகற்காய், காலிஃப்ளவர், முட்டைகோஸ், மஷ்ரூம் ஆகியவை உடல் எடை குறைக்க உதவும் காய்கறிகள்.  இவை செரிமான சக்தியை அதிகரிப்பதுடன் மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கும்.  நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் உங்களை நிறைவாக வைத்திருப்பதுடன் உடல் எடை குறைக்கவும் உதவுகிறது. 

84nf8lo8

 

ஆரோக்கிய கொழுப்புகள்:

தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி சமையல் செய்வதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  உடலுக்கு நல்ல கொழுப்புகள் சேரும்போது உடல் எடை குறையும்.  

முழு தானியங்கள்:

பார்லி, ஓட்ஸ், சிகப்பு அரிசி போன்றவை உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.  இவற்றில் கலோரிகள் மிகவும் குறைவு.  இவற்றை சாப்பிடுவதால் நீங்கள் நாள் முழுக்க நிறைவாக இருக்க முடியும்.  உடல் எடையை குறைக்க சிறந்த உணவு.  

ப்ரோபையோடிக்ஸ்:

மோர் அல்லது தயிரை தினசரி உணவில் சேர்த்து கொள்ளலாம்.  தயிரில் உடலுக்கு தேவையான, குடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய நல்ல பாக்டீரியாக்கள்  இருக்கின்றன.  தயிர் செரிமானத்தை தூண்டி உடல் எடை குறைக்க உதவும்.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------