முகப்பு »  ஊட்டசத்து »  சரும அழகை மெருகேற்றும் முட்டை!

சரும அழகை மெருகேற்றும் முட்டை!

முட்டையின் வெள்ளை கருவில் ஆஸ்ட்ரின்ஜெண்ட் தன்மை இருப்பதால் சருமத்தில் உள்ள துளைகளை சுருக்கி பொலிவாக செய்யும்.

சரும அழகை மெருகேற்றும் முட்டை!

முட்டையில் புரதம் நிறைந்துள்ளது என்பதை நாம் அறிவோம்.  குறிப்பாக முட்டையின் வெள்ளை கருவில் புரதம் மற்றும் ஆல்புமின் இருப்பதால் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.  சருமத்தில் உள்ள சுருக்கம், முகப்பரு, முதிர்ச்சியான தோற்றம், எண்ணெய் பிசுக்கு ஆகியவற்றை போக்கும் தன்மை முட்டைக்கு உண்டு.  மாசுமரு, புகைப்பழக்கம், மதுப்பழக்கம், இரசாயணம் நிறைந்த அழகு பொருட்கள், உடலில் நீரிழப்பு ஆகியவற்றால் சருமம் பெரிதளவு பாதிக்கப்பட்டிருக்கும்.  முட்டையின் வெள்ளை கருவை கொண்டு சரும அழகை எப்படி மேலும் மெருகூட்டுவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

o3kklh2g

 


சருமத்தை இறுக வைக்க:

முட்டையின் வெள்ளை கருவில் ஆஸ்ட்ரின்ஜெண்ட் தன்மை இருப்பதால் சருமத்தில் உள்ள துளைகளை சுருக்கி பொலிவாக செய்யும்.  முட்டையின் வெள்ளை கரு மற்றும் எலுமிச்சை சேர்த்து நன்கு கலந்து முகம் முழுக்க தடவி வரலாம்.  சில நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பாக நீரில் முகத்தை கழுவி விடலாம்.  இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்து வரலாம். 

எண்ணெய் சுரப்பை குறைக்க:

முகத்தில் எண்ணெய் சுரப்பு அதிகம் இருந்தால் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் ஏற்படும்.  முட்டையின் வெள்ளை கருவிற்கு முகத்தில் உள்ள எண்ணெய்  பிசுக்கை நீக்கும் தன்மை உள்ளது.  முகத்தில் வெதுவெதுப்பான நீரில் கழுவி விட்டு பின் முட்டையின் வெள்ளை கருவை தடவவும்.  உலர்ந்த பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.  மென்மையான துண்டு கொண்டு முகத்தை துடைக்கவும். 

முகப்பருவை நீக்க:

சருமத்தில் சுரக்கக்கூடிய அதிகப்படியான எண்ணெயால் முகப்பரு தோன்றும்.  முட்டையின் வெள்ளை கரு, யோகர்ட், பட்டை தூள் அல்லது மஞ்சள்  சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.  இந்த கலவையை முகத்தில் கை விரல்களால் தடவி, உலர்ந்த பின் கழுவி வரலாம்.  இவ்வாறு செய்து வந்தால் முகப்பருக்கள் குறைந்து நல்ல பலன் கிடைக்கும். 

தேவையற்ற ரோமங்களை அகற்ற:

முட்டையின் வெள்ளை கருவை முகம் முழுக்க தடவவும்.  குறிப்பாக, நெற்றி, கன்னம் மற்றும் உதட்டின் மேல் தடவி, உலர்ந்த பின் உறித்து எடுத்தால் முகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்கள் நீங்கி முகம் வழுவழுப்பாக மாறிவிடும். 

1uhiuvb8

 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------