முகப்பு »  ஊட்டசத்து »  தடகள வீரர்களுக்கு கீடோ டயட் சிறந்ததா?

தடகள வீரர்களுக்கு கீடோ டயட் சிறந்ததா?

தடகள வீரர்கள் சுறுசுறுப்பாகவும் ஆற்றலுடனும் செயல்படுவதற்காக கீடோ டயட்டை பின்பற்றுகிறார்கள். 

தடகள வீரர்களுக்கு கீடோ டயட் சிறந்ததா?

சிறப்பம்சங்கள்

  1. உடல் எடை குறைக்க கீடோ டயட்டை பின்பற்றலாம்.
  2. கொழுப்பு நிறைந்த உணவுகளை மட்டுமே கீடோ டயட்டில் உண்ண வேண்டும்.
  3. தடகள வீரர்களுக்கு கீடோ டயட் மிகவும் முக்கியமானது.

மிக குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் அதிகளவு கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பதே கீடோ டயட்.  உடல் கார்போஹைட்ரேட்டிற்கு பதிலாக, கொழுப்பை எரித்து உடல் எடையை குறைக்கிறது.  பொதுவாக உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் கீடோ டயட்டை பின்பற்றுவார்கள்.  ஆனால் தடகள வீரர்கள் சுறுசுறுப்பாகவும் ஆற்றலுடனும் செயல்படுவதற்காக கீடோ டயட்டை பின்பற்றுகிறார்கள்.  சில தடகள வீரர்கள் கீடோ டயட்டை பின்பற்றுவதால் சில சமயங்களில் உடலில் ஆற்றலிழந்து காணப்படுவர்.  ஆனால் பெரும்பாலான தடகள வீரர்களுக்கு அதிகபடியான ஆற்றல் அளித்து ஊட்டச்சத்துடன் வைத்திருக்கிறது.  gfitnjj8

 

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், தடகள வீரர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு கீடோ டயட்டை பின்பற்றுவது சிறந்ததாக இருக்கிறதாம்.  ஆனால் கீடோ டயட் உடனடியாக உடலில் வேலை செய்வதில்லை.  எந்த ஒரு டயட்டும் உடலில் தன் வேலையை செய்வதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் எடுத்து கொள்ளும்.  அதுபோல தான், கீடோ டயட் என்பது உடலில் வேலை செய்வதற்கு சில மாதங்கள் வரை ஆகிறதாம்.  கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளில் இருந்து சத்துக்களை பெறுவதற்கும் உடலுக்கு தேவையான ஆற்றலை தருவதற்கும் சில மாத அவகாசம் தேவைப்படுகிறது.  


இந்த டயட்டிற்கு உடல் பழகுவதற்கு சில காலங்கள் ஆகும் என்பதால் அவ்வப்போது புரதம் நிறைந்த உணவுகளையும் உட்கொள்ள வேண்டியிருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.  உடலில் கீடோனை உற்பத்தி செய்வதற்கு புரதம் மிகவும் அவசியமானது.  கொழுப்பை கரைக்கும்போது உடலுக்கு கிடைக்கப்படும் மற்றொரு சத்துதான் கீடோன்.  கொழுப்பை எரிப்பதால் உடலுக்கு க்ளுக்கோஸ் கிடைக்கிறது.  உடலுக்கு க்ளுக்கோஸ் சீராக கிடைத்து வந்தால் உடலுக்கு தேவையான ஆற்றலும் கிடைத்துவிடுகிறது. 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------