முகப்பு »  நலவாழ்வு »  கர்ப்பிணிகளுக்கு சிறந்த உணவு முருங்கை

கர்ப்பிணிகளுக்கு சிறந்த உணவு முருங்கை

சாம்பார், அசைவ உணவுகள், சூப், சாலட் மற்றும் ஊறுகாய் போன்ற உணவு பொருட்களில் முருங்கையின் பயன்பாடு அதிகம்

கர்ப்பிணிகளுக்கு சிறந்த உணவு முருங்கை

பிரசவத்திற்கு பின் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க முருங்கைக்காய் சாப்பிடலாம்

சிறப்பம்சங்கள்

  1. முருங்கைகாயில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது.
  2. உடலுக்கு தேவையான வைட்டமின் மற்றும் மினரல்ஸ் முருங்கையில் நிறைந்துள்ளது.
  3. முருங்கைகாய் செரிமானத்தை தூண்டுகிறது.

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் விளைய கூடிய தாவரம் முருங்கை. பல்லாண்டு காலமாக முருங்கையில் சமையல் செய்வது இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் வழக்கமாக இருந்துள்ளது. சாம்பார், அசைவ உணவுகள், சூப், சாலட் மற்றும் ஊறுகாய் போன்ற உணவு பொருட்களில் முருங்கையின் பயன்பாடு அதிகம். அஸ்பராகசின் சுவையை ஒத்ததாக இருக்கும் முருங்கையை பீன்ஸை சமைப்பது போலவே சமைக்க வேண்டும். இலை, பூ, காய், விதை மற்றும் தண்டு என எல்லாமுமே மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. உடலுக்கு தேவையான அத்துணை சத்துக்களையும் கொண்டுள்ள முருங்கை கர்ப்பிணி பெண்களின் உடல் நலனில் எப்படி பங்காற்றுகிறது என்பதை பார்ப்போம்.

1. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

முருங்கைகாயில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால், உடலின் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. வைட்டமின் சி உடலில் நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பதோடு, உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் சீராக வைக்கிறது. முருங்கையில் ஆன்டி - பாக்டீரியல் தன்மை இருப்பதால் சளி மற்றும் இருமல் வராமல் தடுக்கிறது.


2. எலும்புகளை உறுதியாக்குகிறது

உடலில் ஏற்படும் கால்ஷியம் குறைபாட்டால் எலும்புகள் பலவீனமடைகிறது. முருங்கையில் கால்சியம், அயன் மற்றும் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் நிறைந்திருப்பதால், எலும்புகள் வலுப்பெற செய்கிறது. தினமும் முருங்கைக்காய் சூப் குடித்து வர எலும்பு உறுதியாகும். குழந்தைகளின் எலும்புகள் வலுவாக தினமும் முருங்கைக்காய் கொடுக்கலாம்.

8f6pam3o

 முருங்கைகாயில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால், உடலின் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது.

3. செரிமானத்தை தூண்டுகிறது

முருங்கை இலையில் நியாசின், ரிபோபிளேவின், ஃபோலிக் அமிலம் மற்றும் பைரிடாக்சின் போன்ற வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை செரிமானத்தை தூண்டக்கூடிய உடலுக்கு தேவையான சத்துக்கள். கடுமையான கார்போஹைட்ரெட், புரதம், கொழுப்பு போன்றவற்றை எளிமையானதாக மாற்றும் தன்மை முருங்கைக்கு உண்டு.

4. இரத்தத்தை சுத்திகரிக்கிறது

முருங்கை இலையில் அன்டிபையாட்டிக் குணம் உண்டு என்பதால் உடலில் இரத்தத்தை சுத்திகரிக்கிறது. தினசரி முருங்கையில் சூப் அல்லது ஜூஸ் தயாரித்து குடித்து வர சரும பிரச்சனைகள் குணமாகும். உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் தன்மை முருங்கைக்கு உண்டு.

5. சுவாசம் சீராகிறது

முருங்கையில் சூப் வைத்து குடிக்க வறண்ட தொண்டை, இருமல், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை நீங்கிவிடும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சுவாச கோளாறுகளை சரி செய்கிறது. ஆஸ்துமா, பிராண்சிட்டிஸ் மற்றும் டியூபர்குளோசிஸ் போன்றவற்றால் அவதி பட்டுக்கொண்டிருப்பவர்கள் தினமும் முருங்கைக்காய் சாப்பிட்டு வர விரைவில் குணமாகும்.

84nbp518

முருங்கைகாயில் கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது

6. கர்ப்பிணிகளுக்கு சிறந்தது

உடலுக்கு தேவையான வைட்டமின் மற்றும் மினரல்ஸ் முருங்கையில் நிறைந்து இருப்பதால், கற்பகாலத்திற்கு முன் மற்றும் பின் கர்ப்பப்பையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை தடுக்கிறது. பிரசவத்திற்கு பின் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க முருங்கைக்காய் சாப்பிடலாம். முருங்கைக்காயில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேகவைத்து சாப்பிடலாம். அத்துடன் நெய் சேர்த்து சாப்பிடுவது கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது.


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

7. நோய்த்தொற்றை தடுக்கிறது

முருங்கையில் ஆன்டி - பேக்டீரியால் தன்மை இருப்பதால், தொண்டை, நெஞ்சு மற்றும் சருமத்தில் நோய் கிருமிகளால் ஏற்படும் தொற்றை தடுக்க வல்லது. முருங்கை இலை, பூ, காய் என எல்லாவற்றிலும் சூப் செய்து சாப்பிடலாம். இதில் ஆன்டி - பையோட்டிக் தன்மையம் இருப்பதால் பூஞ்சையினால் ஏற்படும் தொற்றையும் தடுக்கிறது.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------