முகப்பு »  நலவாழ்வு »  பாடிபில்டர்களுக்கு ஒரு சைவ டயட் பிளான்!

பாடிபில்டர்களுக்கு ஒரு சைவ டயட் பிளான்!

அசைவ உணவுகளைப் போலவே சைவ உணவுகளிலும் உடலுக்கு தேவையான அனைத்துவிதமான ப்ரொட்டிங்களும் கிடைக்கின்றன. இதோ பாடிபில்டர்களுக்கான சிறந்த சைவ டயட் பிளான்கள்.

பாடிபில்டர்களுக்கு ஒரு சைவ டயட் பிளான்!

சிறப்பம்சங்கள்

  1. பாடிபில்டர்களுக்கு கலோரிகள் அவசியம்
  2. பருப்பு, பால் பொருட்கள் உடலுக்கு தேவையான நியுட்ரியன்ஸ்களை கொடுக்கிறது
  3. அரிசிக்கு பதிலாக சீமைதினையை; உடலுக்கு தேவையான ப்ரொட்டின்கள் கிடைக்கின்றன
பாக்ஹி 2 இல் இருக்கும் டைகர் ஷிராஃப், பாக் மில்கா பாக்கில் ஃபரான் அக்தர், ஃபொர்ஸ் 2 வில் வரும் ஜான் ஆபிரகாம்,ரம்லீலா வில் வரும் ரன்வீர் சிங் என அனைவரும் பொதுவாக ஒன்று வைத்துள்ளனர்.அது அவர்களின் அழகான உடலமைப்பு.பாலிவுட்டில் வரும் 6 மற்றும் 8 பக்ஸ்களை(6 and 8 packs ) வைத்துக் கொண்டு அழகாக வருபவர்களை பார்த்து பிற சிறுவர்கள் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். இதுவே அதிகமான சீறுவர்கள் ஃபிட்னஸ் ஜிம்முக்கு போவதற்கு காரணம்.பாடிபில்டிங்கு ஒர்க் அவுட்ஸ் எந்த அளவுக்கு முக்கியமோ  அந்தளவுக்கு டயட்டும் முக்கியமாகும். அசைவ உணவு உண்பவர்களுக்கு மட்டுமே ப்ரொட்டின்கள் கிடைப்பதாக நம்பப்படுகிறது, அப்படியிறுக்கையில் சைவம் உண்பவர்கள் எவ்வாறு பாடிபில்ட்ர்களாக இருக்கின்றனர்? இறைச்சி சார்ந்த உணவுகளில் மட்டும் ப்ரொட்டின்கள் இல்லை. சைவ உணவுகளிலும் தேவையான ப்ரொட்டிங்கள் இருக்கின்றன. 
 
நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது உங்கள் உணவு டயட்டில் ப்ரொட்டின் நிறைந்த உணவுகளை எவ்வாறு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும்
vegetarian diet


Photo Credit: iStock

இதோ உங்களுக்கு ஒரு சைவ டயட் பிளான்:

 

காலை

 2 வேகவைத்த முட்டைகளுடன் வெஜ் சன்வெட்ஜ் (2 multigrain breads), 4 அல்லது 5 பதாம்கள்,பிளாக் காபி.

 

மதியம்

 ஒரு சப்பாத்தி மற்றும் காய்கறிகள், வேக வைத்த பருப்பு ,அத்துடன் பிரக்கோலி சலட் மற்றும் 1 கப் தயிர்.

மாலை

 பாதி ஆப்பில்/ கிவி/ பாதி வாழைப்பழம் மற்றும் கிரீன் டீ(1 கப்), டயட் சித்வா (diet chidwa).

 இரவு

 காய்கறி சூப்புடன் கூடிய ஒரு சிறிய கப் பிரவுன் அரிசி சாதம் + பிரக்கோலி சலட்

  தூங்குவதற்கு முன்

 மிதமான சுட்டில் தண்ணீர் அல்லது கிரீன் டீ(1 கப்)

 

சைவ உணவு பழக்கம் கொண்டவர்கள் பாடிபில்டிங் செய்யும் போது சில அடிப்படையான வற்றைப் பின்பற்ற வேண்டுயது அவசியமாகும்.

 

  1. உணவில் தேவையான கலோரிகள் இருக்க வேண்டும்:

 

 ஆரோக்கியமான உணவிற்கு சரிவிகித உணவு முறை அவசியமாகும். வெஜ்டேரியன் உணவில் அதிகம் காய்கள் சேர்த்து கொள்ள வேண்டும்.இது டயடிற்கு தேவையான கலோரிகள் கிடைக்கும்.அதிக கலோரிகள் இருந்தால் தான் உடலுக்ககும் உடற்பயிற்சிக்கு ஏற்ற சக்தி கிடைக்கும்.காய்களில் அதிக புரதம் நிறைந்துள்ளது.

2) டயடில் காய் மற்றும் பழங்கள் :

 

 உடலுக்கு தேவையான கலோரிகள் காய் மற்றும் பழங்களில் அதிகமாக உள்ளன. பருப்பு வகைகள் மற்றும்  சோயா பீன்ஸ் போன்றவற்றில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இவைகளை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.தினமும் பழம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

 

  3) பருப்பு வகைகள் உணவில் தவறாமல் சேர்த்து கொள்ள வேண்டும்:

பாடிபில்டிங்க், தசை வளர்ச்சி(muscle growth) ற்க்கு தினமும் தவறாமல் உணவில் பருப்பு வகைகள் மற்றும் கொண்டைக்கடலை சேர்த்து கொள்ள வேண்டும். இவற்றில் குறைந்த அளவே கார்போஹைட்ரேட் உள்ளதால் கெட்ட கொழுப்பு சேர்ந்து விடும் என்ற பயத்திற்கு இடமில்லை.

 

4 சிறுதானிய உணவுப் பழக்கம்:

 

 அரிசியில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது.அதற்கு பதிலாக உணவில் சிறுதானிய உணவுகள் சேர்த்து கொள்வதால் உடலுக்கு ப்ரொடின்ஸ் நிறைய கிடைக்கும். குதிரை வாளி, சிகப்பு அரிசி போன்றவற்றை டயட்டில்  இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

 

 
quinoa

5.  உங்கள் உணவுகளின் தேர்வை மாற்றுங்கள்

 நீங்கள் உங்கள் உணவு பழக்கங்களை மாற்றி கொள்வதும் அவசியமானது,மீண்டும் மீண்டும் ஒரே உணவை சாப்பிடுவதால் உங்கள் சுவை அறும்புகள் சலிப்படைவதோடு உங்கள் உடம்பும் அதற்கு பதிலளிப்பதை நிறுத்திவிடும். உங்கள் உணவில் உயர்ந்த மற்றும் அதிகமான உணவு வகைகள் இருப்பதால்  உங்கள் உடலுக்கு தேவையான நியுட்ரியன்ட்ஸ்களைக் கொடுக்கிறது.

 

  1. நட்ஸை உங்கள் உடலின் எரிப்பொருளாக பயண்படுத்துங்கள்;

ஆசைவ பிரியர்கள் கிரில்டு சிக்கனை அவர்களின் ஒர்க் அவுடிற்கு பயன்படுத்துவது போல சைவம் உண்பவர்கள் நட்ஸை பயன்படுத்தலாம்.நீங்கள் ஒர்க் ஆவுட் செய்து முடிக்கும் வரை எனெர்ஜியாக இருக்க தேவையான ஃபட்ஸ் மற்றும் ப்ரொடின்கள் இதில் இருக்கிறது.

Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

 

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------