முகப்பு »  நலவாழ்வு »  நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது லிச்சியா? செர்ரியா?

நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது லிச்சியா? செர்ரியா?

க்ளைசமிக் இண்டெக்ஸ் குறைவான உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது லிச்சியா? செர்ரியா?

சிறப்பம்சங்கள்

 1. நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து மிகுந்த உணவுகளை அதிகம் சாப்பிடலாம்.
 2. லிச்சி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் எலும்புகள் உறுதியாக இருக்கும்.
 3. இவற்றில் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது.

நீரிழிவு நோயாளிகள் இனிப்பு மிகுதியான பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.  க்ளைசமிக் இண்டெக்ஸ் குறைவான உணவுகளையே அதிகம் உட்கொள்ள வேண்டும்.  க்ளைசமிக் இண்டெக்ஸ் 55 அல்லது அதற்கும் குறைவான உணவுகள் இரத்தத்தில் சர்க்கரை அளவை மெதுவாக கடத்தும்.  லிச்சி பழத்தில் க்ளைசமிக் இண்டெக்ஸ் ஐம்பதாகவும், செர்ரியில் இருபதாகவும் இருக்கிறது.  அதனால் நீரிழிவு நோயாளிகள் லிச்சி பழத்தை 4-5 மட்டுமே சாப்பிட வேண்டும்.  இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செர்ரி பழம் சாப்பிடலாம். செர்ரியில் அந்தோசையனின் என்னும் இரசாயனம் இருப்பதால் இன்சுலின் உடலில் உற்பத்தியாகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கிறது.  இவை மட்டுமின்றி மேலும் சில பழங்கள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும்.  சிவப்பு திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, காய்கறிகள், சிடர், டீ ஆகியவற்றை சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கிறது. 

l75jmk68

 


லிச்சி மற்றும் செர்ரியின் நன்மைகள்:

 • லிச்சியில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் கோடைக்காலத்தில் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருக்க, இதனை சாப்பிடலாம். 
 • லிச்சியில் மக்னீஷியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பதால் எலும்புகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.  செர்ரியை சாப்பிடுவதால் இளமை தோற்றத்துடன் இருக்க முடிகிறது.
 • செர்ரி மற்றும் லிச்சியில் பொட்டாசியத்தின் அளவு அதிகமாக இருப்பதால் இரத்தத்தில் சோடியத்தின் அளவு குறைக்கப்படுகிறது.  இதனால் இருதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
 • சருமத்திற்கு தேவையான வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் லிச்சி மற்றும் செர்ரியில் இருப்பதால் சரும ஆரோக்கியத்திற்கு இதனை சாப்பிடலாம்.
 • இவை இரண்டிலும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் மன அழுத்தம் குறைக்கப்படுகிறது.  இருதய ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டு, இளமை தோற்றம் தக்கவைக்கப்படுகிறது.  மேலும் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் புற்றுநோய் அபாயம் தடுக்கப்படுகிறது. 
 • வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாஷியம், மக்னீஷியம் மற்றும் பல ஊட்டச்சத்துகள் இவற்றில் இருக்கிறது. 
 • 100 கிராம் லிச்சியில் 71.5 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது. 
 • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இவற்றை சாப்பிடலாம்.
 • இவை இரண்டிலும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமான பிரச்சனைகளை சரி செய்கிறது.  இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்கவும், இருதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் இந்த இரண்டு பழங்களை சாப்பிடலாம்.
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------