முகப்பு »  நலவாழ்வு »  உடலில் அசிடிட்டியை குறைக்க கிராம்பு சாப்பிடலாம்

உடலில் அசிடிட்டியை குறைக்க கிராம்பு சாப்பிடலாம்

உடலில் அமிலத்தன்மை அதிகரித்தால், நெஞ்சு மற்றும் வயிற்று பகுதியில் எரிச்சல் உணர்வு ஏற்படும்

உடலில் அசிடிட்டியை குறைக்க கிராம்பு சாப்பிடலாம்

உடலில் அமிலத்தன்மை அதிகரித்தால், நெஞ்சு மற்றும் வயிற்று பகுதியில் எரிச்சல் உணர்வு ஏற்படும். அசிடிட்டி மற்றும் வாயு தொந்தரவு எப்போதுமே உங்களை அசௌகரியமாகவே வைத்திருக்கும். இதனால் வாய் மற்றும் தொண்டை பகுதி வறண்டு இருக்கும். உடற்பயிற்சி, ஒழுங்கற்ற உணவு பழக்கம், மதுபழக்கம், மன அழுத்தம் மற்றும் மசாலா பொருட்களை அதிகம் உட்கொள்ளுதல் போன்றவை அடிட்டி வர காரணங்கள்

o270btug

இந்த இந்தியாவின் பாரம்பரிய மசாலா பொருட்களில் முக்கியமானது கிராம்பு. எல்லோர் வீட்டு சமையலறையிலும், சமையலுக்கும் பயன்படும் இந்த கிராம்பு இந்தோனேஷியா, பாகிஸ்தான், கிழக்கு ஆப்ரிகா மற்றும் ஆசிய நாடுகளில் பெரிதளவு பயன்பாட்டில் உள்ளது. தலைவலி, புற்றுநோய், நீரிழிவு, சைனஸ், காய்ச்சல், சளி , இருமல், நோய்தொற்று மற்றும் வாய் பிரச்சனைகளை சரிசெய்கிறது. மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டி, கல்லீரல், எலும்பு போன்றவற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கிராம்பில் ஆண்டிசெப்டிக் தன்மை இருப்பதால், வாய் துர்நாற்றம், பல் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வை கொடுக்கும். பழச்சாறு, டீ, இனிப்பு பலகாரங்கள் மற்றும் உணவில் சேர்த்து சாப்பிட நல்ல தீர்வு கிடைக்கும்.


284ao668

அசிடிட்டி மற்றும் வாய்வு தொல்லையை போக்க கிராம்பு சிறந்த மூலிகை. உமிழ்நீரை அதிகம் சுரக்க செய்து, செரிமானத்தை சீராக்கும். வயிற்று பகுதியில் காயம் மற்றும் வீக்கம், நெஞ்செரிச்சல், அசிடிட்டி, அஜீரணம் போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை கிராம்பிற்கு உண்டு. கிராம்பில் காரத்தன்மை மற்றும் வலி நீக்கும் தன்மை உண்டு என்பதால், அமில சுரப்பால் வயிறு மற்றும் குடல் பகுதியில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்து விடும். மேலும் வயிற்றில் வாயு உருவாவதை தடுக்கும்.

d04oc6f

கிராம்பை இப்படி பயன்படுத்தலாம்

கிராம்பை அப்படியே வாயில் போட்டு சாப்பிடுவதால், அமிலத்தன்மையால் எதுகளிக்காமல் இருக்கும். ஒவ்வொரு வேளை சாப்பாட்டிற்கு பிறகும் ஒரு கிராம்பை சாப்பிட்டால் அசிடிட்டி உருவாகாமல் இருக்கும். அசிடிட்டியை தவிர்க்க மோர், துளசி, ஏலக்காய், இளநீர், சோம்பு, ஆப்பிள் சிடர் வினிகர், வெல்லம், இஞ்சி, சீரகம் போன்றவற்றை சாப்பிடலாம்.

f78jfhhg

சிறிது தூர நடை பயணம், நேராக அமர்வது, தொளதொளப்பான ஆடைகளை அணிவது, புகைப்பிடிக்காமல் இருப்பது, கடுமையான மசாலா பொருட்களை உட்கொள்ளாமல் இருந்தால் அசிடிட்டியை தவிர்க்கலாம்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com