முகப்பு »  இருதயம் »  இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த சில குறிப்புகள்!

இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த சில குறிப்புகள்!

வாழ்வியல் முறை, உணவு பழக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றை பொருத்து இருதய ஆரோக்கியம் இருக்கும்

இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த சில குறிப்புகள்!

வாழ்வியல் முறை, உணவு பழக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றை பொருத்து இருதய ஆரோக்கியம் இருக்கும். வயது, உடல் ஆரோக்கியம் பொருத்துதான் இருதயம் பலமாக இருப்பதும், பலவீனம் அடைவதும். இருதயத்தின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க சில வழிகளை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.

a27ieaag

உணவு பழக்கம்


தவறான நேரத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது இருதய ஆரோக்கியத்தை கெடுத்துவிடும். சர்க்கரை, கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் இருதய நோய்கள் ஏற்படும். இவற்றை தவிர்த்து பழங்கள், விதைகள் மற்றும் கொட்டைகள், தானியங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிட்டு வந்தால் இருதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

உடற்பயிற்சி

நடைப்பயிற்சி, நீச்சல், யோகா, ஓட்டப்பயிற்சி போன்றவற்றை தொடர்ச்சியாக செய்துவந்தால் இருதய ஆரோக்கியம் சீராக இருக்கும். ஆகவே, தினசரி உடற்பயிற்சி செய்வது நல்லது.

புகைப்பழக்கத்தை தவிர்க்கவும்

உங்களுக்கு புகைப்பழக்கம் இருந்தால் உடனடியாக தவிர்த்து விடுங்கள். இது உங்கள் நுரையீரலை பாதிப்பதோடு இருதயத்தை அதிகம் பாதிக்கும்.

உடல் எடை

உடல் பருமனாக இருந்தால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற உடல் உபாதைகள் இருக்கும். இவை உங்கள் இருதய ஆரோக்கியத்தை பாதித்துவிடும். ஆகவே நார்ச்சத்து நிறைந்த உணவை அதிகம் உணவில் சேர்த்து கொண்டால் உடல் எடை சீராக இருக்கும். உடல் எடை குறைந்து இருதய ஆரோக்கியமும் சீராக இருக்கும்.

5ciaar6o

Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

மனதை மேம்படுத்தவும்

நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தால் உயர் இரத்த அழுத்தம் உண்டாகிறது. அதனால் மன அழுத்தம் ஏற்படும் வகையில் எந்த விஷயத்தையும் மனதில் எடுத்து கொள்ள வேண்டாம். அதனை சரிசெய்யும் வகையில் தியானம், மூச்சுப்பயிற்சி, யோகா மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை செய்து வந்தால் இருதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------