முகப்பு »  தோல் »  முகத்தில் உள்ள கருந்திட்டுக்கள் மறைய எளிய குறிப்புகள்!!

முகத்தில் உள்ள கருந்திட்டுக்கள் மறைய எளிய குறிப்புகள்!!

கற்றாலை, வைட்டமின் ஈ எண்ணெய், எலுமிச்சை சாறு ஆகிய மூன்றையும் நன்கு கலந்து முகத்திற்கு மாஸ்க் போடலாம்.  வைட்டமின் ஈ சருமத்தில் உள்ள கருமைகளை போக்கி, பளிச்சிட செய்கிறது. 

முகத்தில் உள்ள கருந்திட்டுக்கள் மறைய எளிய குறிப்புகள்!!

சிறப்பம்சங்கள்

  1. இரசாயணம் மிகுந்த அழகு பொருட்களை பயன்படுத்தாமல் இருக்கலாம்.
  2. நிறைய தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
  3. மோரில் லேக்டிக் அமிலம் இருப்பதால் முகத்தில் உள்ள கருமை நீங்கும்.

சூரிய கதிர்கள், ப்ளாக் ஹெட்ஸ், வறட்சி, வயது முதிர்ச்சி, பருக்கள், இரசாயணம் மிகுந்த ஃபேஸ் வாஷ், மாய்சுரைசர், சோப் போன்றவை சருமத்தை மென்மேலும் பாதிப்படைய செய்யும்.  மேலும் பக்கவிளைவுகளை உண்டாக்கும் தன்மை கொண்டதாக இருக்கும்.  சருமத்தில் கருந்திட்டுகள், சுருக்கங்கள் மற்றும் பருக்கள் போன்றவை குணமாக சில எளிமையாக வழிமுறைகள் உண்டு.  அவை என்னவென்று பார்ப்போம்.  

b165n4b

 


 

 

1. பப்பாளி ஃபேஸ் மாஸ்க்: 

பப்பாளியில் பப்பைன் என்னும் பொருள் இருக்கிறது.  இது சருமத்தை பளிச்சிட செய்யும் தன்மை கொண்டது.  பப்பாளியை நன்கு மசித்து, அத்துடன் ஒரு மேஜைக்கரண்டி தேன் சேர்த்து கலந்து கொள்ளவும்.  வறண்ட சருமம் உள்ளவர்கள் இந்த கலவையுடன் பால் சேர்த்து கொள்ளலாம்.  எண்ணெய் சருமம் உள்ளவர்கள் இதில் அரை மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளலாம்.  இதனை அடிக்கடி முகத்தில் தடவி வந்தால், முகம் கருமையின்றி பிரகாசமாக இருக்கும்.  பால் மற்றும் தேன் சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படும்.  எலுமிச்சை சருமத்தை ப்ளீச் செய்யும். 

 

2. கற்றாலை:

கற்றாலை, வைட்டமின் ஈ எண்ணெய், எலுமிச்சை சாறு ஆகிய மூன்றையும் நன்கு கலந்து முகத்திற்கு மாஸ்க் போடலாம்.  வைட்டமின் ஈ சருமத்தில் உள்ள கருமைகளை போக்கி, பளிச்சிட செய்கிறது.  எலுமிச்சை சாறு சருமத்தில் உள்ள இறந்த செல்கள், ப்ளாக் ஹெட்ஸ் மற்றும் மாசு ஆகியவற்றை நீக்குகிறது.  கற்றாலை சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படுகிறது.   

3. தண்ணீர்:

நிறைய தண்ணீர் குடித்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதால் சருமம் பிரகாசமாயிருக்கும்.  செயற்கை இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள் மற்றும் மது போன்றவற்றை தவிர்த்து காய்கறி மற்றும் பழச்சாறுகளை குடித்து வரலாம்.  காய்கறிகள் சேர்த்து சூப் தயாரித்தும் குடித்து வரலாம்.  தினமும் இரண்டு முறை முகத்தை கழுவுவதால் கூட முகத்தில் உள்ள மாசுமரு போன்றவை நீங்குகிறது. 

4. மோர்: 

மோரில் லேக்டிக் அமிலம் இருப்பதால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் ப்ளாக் ஹெட்ஸ் ஆகியவற்றை நீக்குகிறது.  மோரை சிறிதளவு எடுத்து பஞ்சில் தொட்டு முகத்தில் தடவி உலர்ந்த பின் கழுவி வரலாம்.  தொடர்ச்சியாக செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

5. எலுமிச்சை மற்றும் யோகர்ட் மாஸ்க்: 


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் இருக்கிறது.  இது சருமத்தை ப்ளீச் செய்ய பயன்படுகிறது.  அத்துடன் யோகர்ட் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகம் மிருதுவாகும்.  அத்துடன் சிறிதளவு சர்க்கரை சேர்ப்பதால் முகத்திற்கு ஸ்க்ரப்பாக பயன்படுத்தலாம்.  இதனால் முகம் மென்மையாக மாறும். 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------