முகப்பு »  தோல் »  சருமத்தின் அழகை மெருகூட்ட குளிர்ந்த நீரை பயன்படுத்தலாம் !!

சருமத்தின் அழகை மெருகூட்ட குளிர்ந்த நீரை பயன்படுத்தலாம் !!

சூரிய கதிர்களால் சருமம் பல மடங்கு பாதிக்கும்.  குளிர்ந்த நீரால் முகத்தை கழுவுவதால் புற ஊதா கதிர்களால் ஏற்படும் சரும் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும். 

சருமத்தின் அழகை மெருகூட்ட குளிர்ந்த நீரை பயன்படுத்தலாம் !!

சிறப்பம்சங்கள்

  1. குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுவதால் முகம் பிரகாசிக்கும்.
  2. முகத்துளைகளை ஆழமாக சுத்தம் செய்ய குளிர்ந்த நீரை பயன்படுத்தலாம்.
  3. குளிர்ந்த நீரில் வெள்ளரியை சேர்த்தும் முகம் கழுவி வரலாம்.

சருமத்தை பாதுகாக்க இரசாயணம் நிறைந்த க்ரீம், மாய்சுரைசர், சீரம் போன்றவற்றை பயன்படுத்துவதால் சருமம் மேலும் தொய்வுறுகிறது.  இரசாயணம் நிறைந்த பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கை பொருட்களை கொண்டு சுருக்கம், பருக்கள், மாசு போன்றவற்றை போக்கலாம்.  சருமத்தில் உள்ள துளைகளை சுத்தம் செய்து, வறட்சியை போக்கி மிருதுவாக்கவும் தன்மை குளிர்ச்சியான தண்ணீர்க்கு உள்ளது.  இது முகத்தில் ஏற்படக்கூடிய வீக்கத்தையும் குறைக்கும்.   

1. துளைகளை சுருக்கும்:

குளிர்ந்த நீரை பயன்படுத்தும்போது உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.  குளிர்ந்த நீரை கொண்டு முகம் கழுவினால் முகத்தில் உள்ள துளைகள் இறுகும்.  மேலும் சருமம் மிருதுவாகும்.   

2. சுருக்கம்: 

முகத்தில் ஏற்படும் சிறுசிறு சுருக்கங்களை போக்க குளிர்ந்த நீர் கொண்டு முகம் கழுவலாம்.  இதனால் சருமம் புத்துணர்வோடும், இளமை தோற்றத்துடனும் இருக்கும். தொடர்ச்சியாக குளிர்ந்த நீரை கொண்டு முகம் கழுவி வந்தால் முகம் பிரகாசமாகவும், பொலிவாகவும் இருக்கும். 

3. சூரிய கதிர்கள்: 

சூரிய கதிர்களால் சருமம் பல மடங்கு பாதிக்கும்.  குளிர்ந்த நீரால் முகத்தை கழுவுவதால் புற ஊதா கதிர்களால் ஏற்படும் சரும் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும். 

4. அழுக்குகள்: 

குளிர்ந்த நீர் கொண்டு முகம் கழுவும்போது முகத்துளைகளில் இருக்கும் அழுக்குகள் நீங்கி பருக்கள் ஏற்படாமல் இருக்கும்.  சுருக்கங்களையும் போக்கி முகத்தை மாசுமருவில்லாமல் பிரகாசிக்க செய்யும். 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com