முகப்பு »  ஊட்டசத்து »  உடல் எடையை குறைக்க 5 வகை ஹெர்பல் டீ!

உடல் எடையை குறைக்க 5 வகை ஹெர்பல் டீ!

தினமும் காலை ஒரு கப் தேனீரில் தான் இங்கு பலருக்கும் காலை பொழுது இனிமையாக துவங்குகிறது

உடல் எடையை குறைக்க 5 வகை ஹெர்பல் டீ!

தினமும் காலை ஒரு கப் தேனீரில் தான் இங்கு பலருக்கும் காலை பொழுது இனிமையாக துவங்குகிறது.  குறிப்பாக குளிர்காலத்தில் ஏற்படும் சோம்பலை முறிப்பதற்கு நறுமணம் நிறைந்த தேனீர் அவசியமானது.  மேலும் சிலர் குளிர்காலத்தில் உடலை இதமாக வைத்து கொள்ள அவ்வப்போது தேனீர் அருந்திக் கொண்டே இருப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.  உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சோர்வை போக்கி, வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடையையும் குறைக்க கூடிய சில மூலிகை தேனீர்களை எப்படி தயார் செய்வது என்பது குறித்து தான் இந்த கட்டுரை. 

இஞ்சி டீ:


மருத்துவ குணம் நிறைந்த இஞ்சியை தினசரி உணவில் அல்லது தேனீரில் சேர்த்து கொள்வது அவசியம்.  இஞ்சி டீ குடிப்பதால் தொண்டை கரகரப்பு நீங்கி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.  மேலும் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்புகளை கரைக்கும் வல்லமை படைத்தது இஞ்சி. 

மஞ்சள் டீ:

மஞ்சள் சிறந்த கிருமி நாசினி என்பதாலேயே எல்லாவகை உணவிலும் சேர்க்கப்படுகிறது.  மஞ்சளுடன் ஒன்றிரண்டு சிட்டிகை மிளகு சேர்த்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.  மஞ்சளில் ஆண்டிஆக்ஸிடச்ண்ட் மற்றும் ஆண்டி- இன்ஃப்ளமேட்ரி தன்மை இருக்கிறது.  உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குர்குமின் என்னும் பொருள் மஞ்சளில் உள்ளது.  மேலும் புற்றுநோய் அபாயத்தில் இருந்து காக்கிறது. 

அதிமதுர டீ:

இனிப்பு சுவை மிகுதியான அதிமதுரத்தில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டி-டையாபடிக் தன்மை உள்ளது.  தினசரி சிறு துண்டு அதிமதுரத்தை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை வெதுவெதுப்பாக வைத்து கொள்ளும். 

பட்டை டீ:

ப்ளாக் டீயில் பயன்படுத்தப்படும் இந்த பட்டையில் இயற்கையாகவே இனிப்பு சுவை இருப்பதோடு நறுமண மிக்கதாகவும் இருக்கிறது.  இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டி-டையாபடிக் தன்மை இருக்கிறது.  உடல் எடை குறைக்க இதில் தேனீர் தயாரித்து குடித்து வரலாம். 


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

க்ரீம் டீ:

ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த க்ரீன் டீ உடலில் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.  மூளை செயல்பாடுகளை அதிகரிக்க செய்வதோடு உடலில் உள்ள கொழுப்புகளையும் கரைத்து விடுகிறது.  உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும் இந்த க்ரீன் டீயை அடிக்கடி குடித்து வரலாம். 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------