முகப்பு »  நலவாழ்வு »  ஹெல்தி லோ கார்ப் காய்கறிகள் !

ஹெல்தி லோ கார்ப் காய்கறிகள் !

கீட்டோஜெனிக் டயட் பின்பற்றுபவர்களுக்கு விரைவில் உடல் எடை குறையும்

ஹெல்தி லோ கார்ப் காய்கறிகள் !

கீட்டோஜெனிக் டயட் பின்பற்றுபவர்களுக்கு விரைவில் உடல் எடை குறையும். இதனால் இரத்த சர்க்கரையின் அளவு சீராகவும், உடல் ஆரோக்கியம் மேம்படவும் செய்கிறது. அவகாடோ, முட்டை, சிக்கன், சீஸ், ஆலிவ் எண்ணெய் ஆகியவை கீட்டோஜெனிக் உணவுகள். இவற்றில் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்திருக்கிறது. கீட்டோ டயட்டில் அடங்கும் சில காய்கறிகளை பார்க்கலாம்.
 

vcb7rf08

 


 

செலரி
செலரியில் கலோரிகளே இல்லை. இதில் கார்போஹைட்ரேட் மிகவும் குறைவு என்பதால் உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளலாம்.

கீரைகள்
கீரையில் இரும்பு சத்து அதிகம். இதனை சாலட் அல்லது மதிய உணவில் சேர்த்து கொள்ளலாம். இருதய நோய்கள் மற்றும் கண் குறைபாடு ஆகியவற்றை போக்கும் தன்மை கீரைக்கு உண்டு. மேலும் இதில் வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கிறது.
 

nd1sdqn8

 

 

காலிஃப்ளவர்
கார்போஹைட்ரேட் குறைவாகவும், வைட்டமின் கே மற்றும் சி அதிகமாகவும் இருக்கிறது. இருதய நோய்கள் மற்றும் புற்றுநோய் அபாயம் ஏற்படாமல் பார்த்து கொள்ளும். சோர் க்ரீம் மற்றும் மசித்த உருளைக்கிழங்குடன் சேர்த்து சாப்பிடலாம்.

m4kbn4ro

 

 

மஷ்ரூம்
மஷ்ரூமில் ஆண்டி இன்ஃப்ளமேட்ரி தன்மை இருக்கிறது. இதனை சாலட், சாண்ட்விச் மற்றும் சூப் செய்து சாப்பிடலாம்.

Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

குடைமிளகாய்
அதிகபடியான ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கும் இதில் வைட்டமின் ஏ மற்றும் ஆண்டி இன்ஃப்ளமேட்ரி தன்மைகள் உள்ளது. சாலட்களை கலர்ஃபுல்லாக்க மஞ்சள், சிவப்பு மற்றும் பச்சை நிற குடைமிளகாய்களை சேர்த்து சாப்பிடலாம்.

பீன்ஸ்
மற்ற காய்கறிகளை காட்டிலும் இதில் கார்போஹைட்ரேட் மிகவும் குறைவாக இருக்கிறது. கீட்டோஜெனிக் டயட்டில் முக்கியமானது.
 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------