முகப்பு »  நலவாழ்வு »  உலக சுகாதார தினம் 2019: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு 10 டிப்ஸ்

உலக சுகாதார தினம் 2019: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு 10 டிப்ஸ்

World Health Day 2019, உலக சுகாதார தினம் 2019: போதிய பொருளாதார வசதி இல்லாதவர்களுக்கு கூட மருத்துவ சேவை சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டியது மிகவும் அவசியம். 

உலக சுகாதார தினம் 2019: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு 10 டிப்ஸ்

Health Day: உலக சுகாதார தினம் ஏப்ரல் 7 கொண்டாடப்படுகிறது

சிறப்பம்சங்கள்

  1. உலக சுகாதார தினம் 1950 முதல் கொண்டாடப்படுகிறது.
  2. அனைவருக்கும் சுகாதார சேவை கிடைக்க செய்ய வேண்டும்
  3. ஆரம்ப சுகாதாரம் அனைவருக்கும் கிடைக்க உறுதியேற்க வேண்டிய நாள்

ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார தினம் (World Health Day) ஏப்ரல் 7 அன்று அனுசரிக்கப்படுகிறது. மக்கள் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு உலகளாவிய அளவில் ஏற்படுத்த உலக சுகாதார அமைப்பு இதை கொண்டாடி வருகிறது. 

1948 ஆம் ஆண்டு ஜெனோவாவில் நடந்த முதல் உலக சுகாதார கூட்டமைப்பில் ஏப்ரல் 7 ஆம் நாளை உலக சுகாதார தினமாக கொண்டாடப் படும் என அறிவிக்கப்பட்டது. 1950 முதல் உலக சுகாதார தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்த நாளில் உலகளவில் சுகாதரம் குறித்த விழிப்புணர்வு முகாம்களும், உரையாடல்களும் நிகழ்த்தப் படுகிறது. இந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நிகழ்த்தபடும். இந்த ஆண்டு யுனிவர்சல் ஹெல்த் கவரேஜ் என்ற நோக்கத்தின் அடிப்படையில் செயல்படவுள்ளது. 


உலக சுகாதார தினம் 2019 (World Health Day 2019): நோக்கமும் செயல்பாடுகளும்

இன்றைய நாளில் உலகில் உள்ள அனைவருக்கும் சுகாதாரமான மருத்துவம் கிடைக்கச் செய்ய வழிவகை செய்ய வேண்டுமென உறுதியேற்று உள்ளது. இதற்காக #HealthForAll என்ற இயக்கத்தையும் முன்னெடுத்து உள்ளது. உலகில் உள்ள அனைவரும் அனைவருக்கும் சமமான மருத்துவ முறைகள் கிடைக்கச் செய்ய முயற்சிகளை எடுப்பது அவசியமாகிறது. 

உடல் நலம் அனைவருக்கும் கிடைக்காத இடைவெளிகளை குறித்து உரையாற்றும் நாள் இதுதான். போதிய பொருளாதார வசதி இல்லாதவர்களுக்கு கூட மருத்துவ சேவை சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டியது மிகவும் அவசியம். 

3ja82mkg

முதன்மையான சுகாதார பாதுகாப்பு அனைத்து  மக்களையும் சென்றடைவதுதான் இலக்காக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. தனிமனிதர்கள் அல்லது சமூகங்கள் அனைத்து மனிதகர்களுக்கும் சுகாதார நலனை உறுதி செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

மக்களுக்கான தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதில் அரசு உறுதியளிக்க வேண்டும்.

1. ஆரோக்கியமான வாழ்க்கை முறை தொடங்க உறுதி எடுங்கள். அதற்க படிப்படியான முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

2. நீங்கள் கடைசியாக உடற்பயிற்சி செய்தது எப்போ…? உடற்பயிற்சி மீண்டும் இன்றே  தொடங்குங்கள். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள். உடற்பயிற்சியை அன்றாட வேலைகளில் ஒன்றாக வைத்துக் கொள்ளுங்கள்.

3. ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க உணவையே சாப்பிடுங்கள். உடல் எடை குறைக்கிறேன் என்று கலோரி அதிகமுள்ள  ஆரோக்கியமான உணவினை சாப்பிட்டாமல் இருக்காதீரகள்.

4. ஆரோக்கியமான உடல் எடையை பாரமரிக்க வேண்டியது அவசியம்.

5. உணவுகளை தவிர்க்காமல் வழக்கமான அளவில் சாப்பிடுங்கள். டயட் என்று சொல்லி உணவின் அளவைக் குறைக்காதீர்கள். இதனால் எதிர்மறை விளைவுகள் ஏற்படும்.

6. ஒவ்வொரு முறை உணவு சாப்பிடும் போதும் உடலுக்கு ஊட்டச்சத்து உள்ள உணவை சாப்பிடுவதற்கான வாய்ப்பாக கருதி சாப்பிடுங்கள்.

7. ஒவ்வொரு பருவத்திற்கு என பிரத்யேகமாக வரும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள். உள்ளூரில் விளையும் காய்கறிகளையே அதிகம் சாப்பிடுங்கள்.

8. உப்பு மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம். இதனால் நீண்ட காலம் சர்க்கரை நோய், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் இன்றி இருக்கலாம்.

9. உடலில் நீர்ச்சத்து குறையாமல் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அதிகளவு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 

10. மன அழுத்தம் குறைய யோகா போன்றவற்றை செய்யத் தொடங்குங்கள். இதனால் வேலையிலும் செயல் திறன் அதிகரிப்பதை உணர முடியும். 

உலக சுகாதார தினத்தில் உடல் நலத்துடன் இருப்பது ஒவ்வொருவரின் உரிமையும் கூட என்பதை அறிந்து கொள்ளுங்கள் 

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com