முகப்பு »  நலவாழ்வு »  ஏன் உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறது என யோசிக்கிறீர்களா? 7 காரணங்கள் இதோ..

ஏன் உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறது என யோசிக்கிறீர்களா? 7 காரணங்கள் இதோ..

அதிகமான வியர்வை அளிக்கும் காரணங்களை நினைவில் கொள்ளுங்கள்; இந்த கட்டுரையில் அதிகமாக வியர்வை வருவதற்கான 7 சாத்தியமான காரணங்களை கொடுத்திருக்கிறோம்

ஏன் உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறது என யோசிக்கிறீர்களா? 7 காரணங்கள் இதோ..

சிறப்பம்சங்கள்

  1. நீடித்த மன அழுத்தம், அதிகமான வியர்வை வருவதற்கு பங்களிக்க முடியும்
  2. உடல் வெப்ப எழுச்சி மற்றும் வளர்சிதை மாற்றம் காரணமாகவும் வியர்வை ஏற்படலாம்
  3. உடலில் உள்ள நீர் இருப்பு குறைவும் நிலைமையை மேலும் மோசமாக்கலாம்

தற்போது வெயில் காலத்திலிருந்து பருவமழை காலத்திற்கு மாறி வருகிற நேரம், இதில் வியர்ப்பது தவிர்க்க முடியாயது அம்சம். சிறு வியர்வை துளிகள் உங்களுடைய முகம், கைகள் மற்றும் உடலின் மற்ற பகுதிகளில் இருந்து அதிகம் வழிக்கின்ற காலக்கட்டம் இது என்பதால் பலருக்கும் அதிகம் பிடிக்காத ஒரு வெப்பநிலை. அதிகம் வியர்த்தால் அதுவே பெரிய பாரமாகிவிடும். பொதுவாக வெப்பம் மிகவும் அதிகமாக இருக்கும் போது அல்லது நீங்கள் உடற்பயிற்சி செய்கிற போது வியர்ப்பது சாதாரணமாக கருதப்படுகிறது. எனினும் இந்த இரு காரணங்களுக்காகவும் அதிகம் வியர்க்கவில்லை என்றால் அதை சாதரனமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அதிகமான வெப்பத்தை வெளியேற்ற உங்களுடைய உடல் வியர்க்கிறது. இது குறைந்த இரத்த சுகர் அளவு போன்ற எந்த காரணத்தினால் கூட இருக்கலாம். சிறிது ஆராய்ந்தாலே இந்த பிரச்சனையின் மூல காரணத்தை கண்டுபிடித்துவிடலாம். உங்களுக்கு அதிகமான வியர்வை அளிக்கும் காரணங்களை நினைவில் கொள்ளுங்கள்; உணர்ச்சி அல்லது உடல் ரீதியான மன அழுத்தம் மற்றும் அதனுடன் கூடிய காரணிகளால் இருக்கலாம். இந்த கட்டுரையில் அதிகமாக வியர்வை வருவதற்கான 7 சாத்தியமான காரணங்களை கொடுத்திருக்கிறோம்.

1. ஏக்கம்

அதிகமாக வியர்ப்பதற்கு, ஏக்கம் முக்கிய காரணமாக இருக்கிறது. நீங்கள் பரபரப்பாக இருக்கிற போது வியர்ப்பது சகஜம் தான் என்றாலும், ஏக்கம் உங்களுக்கு அதிக அளவில் வியர்வையை கொடுக்கலாம். நீடித்த அழுத்தமும் உங்களுடைய உடலில் வியர்வையை அதிகரிக்கும். இந்த இரண்டு காரணமும் உங்களுடைய வியர்க்கும் சுரப்பிகளை அதிகம் வேலைகொள்ளச் செய்கிறது.


7mm45mlg

2. பிரசவம்

ஹோர்மோன்களில் ஏற்படுகிற திடீர் மாற்றங்களால் பிரசவம் நிகழ்கிறது. ஒட்டுமொத்த உடல் வெப்பம் மற்றும் வளர்ச்சிதை மாற்றம் அதிகமாக வியர்ப்பதற்கு காரணாமாக இருக்கலாம். உங்கள் கருப்பையில் குழந்தையை காப்பதில் ஈடுபடும் ஹார்மோன்கள் உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து தோல் மற்றும் வியர்வை விகிதங்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன.

on7jdiu8

 3. மாதவிடாய்

பிரசவத்தின் ஹார்மோன் அளவில் ஏற்படுகிற திடீர் ஏற்றங்கள் அதிகமான வியர்வைக்கு வழிவகுக்கின்றன அதுபோலவே தான் மாதவிடாய் காலத்தில் ஏற்படுகிற ஹார்மோன் அளவுகளின் குறைவும். வெப்ப சலனம் கூட அதிகம் வியர்ப்பதற்கு முக்கியமான காரணமாக இருக்கலாம். ஆனால் உங்களுடைய ஹார்மோன் அளவில் சகஜத்திற்கு வந்துவிட்டதென்றால், அதிகமாக வியர்ப்பதும் குறைந்துவிடும். சில பெண்கள் இதே போன்ற நிலையை அவர்களுடைய 40களின் தொடக்கத்திலும் அனுபவிக்கலாம். இது இயற்கையான ஒரு விஷயம் முன்னரே தொடங்குவதை குறிப்பிடும் அறிகுறியாகக் கூட இருக்கலாம். 

1dnjdulg

4. வெப்பத் தாக்குதல்

சூரியனின் இந்த அதீத வெப்பத்தில், நீங்கள் சாதாரணமானதை விட அதிக அளவில் வியர்த்து, திடீரென்று நின்றால், நீங்கள் வெப்பத்தாக்குதலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இது உங்களுடைய உடல் சாதாரணமாக வியர்த்து குளிர்ச்சி அடையும் தன்மையை இழந்ததனால் ஏற்படுகிறது. இதனால் ஒரு வெப்ப தாக்குதலை சந்திக்கும் ஆபத்தில் உள்ளீர்கள். இதன் பிறகு உடலில் நீர் இருப்பை அதிகரிக்கவில்லை என்றால் நிலைமை மேலும் மோசமாகக்கூடும்.

g7ggnq28

5. குறைவான இரத்த சர்க்கரை அளவு

இது எப்போதாவது உங்களுக்கு நிகழ்ந்தது உண்டா? ஒரு அரைகுறை தூக்கத்தில் வியர்வையில் நனைந்து எழுந்ததுண்டா? குளிர்சாதனப் பெட்டிகள் இரவு முழுவதும் ஆன் ஆகியிருந்தும் ஒரு சிலருக்கு அதிகமாக வியர்க்கும், இது குறைவாக இரத்த சுகர் அளவுகளால் வருகிறது. நீங்கள் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இது மேலும் பொருந்தும். குறைவான சுகர் அளவுகளால், உங்களுடைய உடல் அட்ரினலின் பற்றாக்குறையை போக்குவதற்கு அதிக அளவில் அதை தயாரிக்கும். இது அதிக அளவில் வியர்ப்பதற்கு காரணமாகிறது.

5rn0eg7o

6. சில மருந்துகளின் விளைவு

பெரும்பாலான மக்கள் இன்று மருந்துகளை சார்ந்து தான் இருக்கின்றனர், ஆனால் இதன் பக்கவிளைவுகளைப் பற்றி அவர்கள் சிறிதளவில் தான் அறிந்திருப்பர். அதிகம் வியர்ப்பது கூட இந்த மருந்துகளின் பக்கவிளைவுகளில் ஒன்றாகும்.

vpjaqftg

7. சில உணவுகள்

சில உணவுகள் அதிக அளவில் வியர்வையை உண்டாக்கலாம். உதாரணமாக காரமான, காஃபினேடட் செய்யப்பட்ட மற்றும் சூடான உணவுகள் உங்களுடைய உச்சந்தலை, நெற்றி, முகம் மற்றும் கழுத்தில் வியர்க்க வைக்கும். அதிசயமாக அந்த உணவுகளைப் பற்றி நினைப்பது கூட அதிகம் வியர்க்க வைக்கும்.

576l4gu8
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com