முகப்பு »  நலவாழ்வு »  மருத்துவ குணங்கள் நிறைந்த 3 பொருட்கள் என்னென்ன??

மருத்துவ குணங்கள் நிறைந்த 3 பொருட்கள் என்னென்ன??

வைட்டமின் ஏ, டி, ஈ, கே ஆகிய சத்துக்களை நெய் தருகிறது.  இவை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்களை தடுக்கிறது.,  மேலும் உடலில் இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கிறது. 

மருத்துவ குணங்கள் நிறைந்த 3 பொருட்கள் என்னென்ன??

சிறப்பம்சங்கள்

  1. மஞ்சளின் குர்குமின் என்னும் பொருள் இருக்கிறது.
  2. மிளகு குடலை தூய்மைப்படுத்தும்.
  3. நெய்யில் வைட்டமின் ஏ, டி, கே சத்துக்கள் இருக்கிறது.

மஞ்சள், நெய் மற்றும் மிளகு ஆகிய மூன்று பொருட்களும் உடலில் செரிமானத்தை சீராக வைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் சீராக வைக்கும்.  இவை மூன்றையும் கொண்டு கஷாயம் செய்து குடிக்கலாம்.  உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதுடன், பல உடல் உபாதைகளை தவிர்க்கிறது.  மஞ்சள், மிளகு மற்றும் நெய் ஆகியவற்றின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்ப்போம். 

வீக்கம்:

நாட்பட்ட நோய்களை குணமாக்கும்.  பக்கவாதம், மாரடைப்பு, புற்றுநோய், நீரிழிவு நோய், ஆட்டோ இம்யூன் நோய், மூட்டு வலி, கழுத்து வலி, முட்டி வலி போன்ற பிரச்னைகள் குணமாகும்.  உடலில் வீக்கத்தை குறைக்க இந்த கஷாயத்தை குடிக்கலாம்.


9p3gngpo

ஞாபகத்திறன்:

இந்த கஷாயத்தில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருக்கிறது.  நெய்யில் உடலுக்கு தேவையான ஆரோக்கிய கொழுப்பு இருக்கிறது.  இவை மூளை செயல்பாட்டை அதிகரித்து, ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.  மேலும் அல்சைமர், டிமென்ஷியா மற்றும் பார்கிசன் நோய் போன்றவை தடுக்கப்படுகிறது. 

 

hd1bolp

ஆஞ்சியோஜெனிசிஸ்:

உடலில் புதிய இரத்த செல்களை உருவாக்கும் செயல்முறைதான் இது.  மேலும் இரத்த ஓட்டத்தை உடலில் சீராக வைக்கிறது.  உடலில் வீக்கம், தூக்கம் தடைபடுதல், மருந்துகள் போன்றவற்றை சாப்பிடுவதால் இந்த செயல்முறையில் பிரச்னை வரலாம்.  மேலும் உறுப்புகள் பாதிக்கப்படும்.  இந்த கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலில் புதிய இரத்த செல்கள் உற்பத்தி ஆவது சீராக இருக்கும். 

டிஎன்ஏ:

சுற்றுச்சூழல் மாசு, ப்ளாஸ்டிக் பயன்பாடு, மருந்துகள், புற ஊதா கதிர்கள் போன்றவற்றால் உடலில் டிஎன்ஏ குறைபாடு ஏற்படும்.  இந்த எளிமையான பொருட்கள் கொண்டு பாதிப்பை தடுக்கலாம். 

குடல்:

குடல் ஆரோக்கியம் சீராக இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும்.  குடல் ஆரோக்கியம் குன்றிப்போய் இருந்தால் சருமம், செரிமானம், மனநலன், பதட்டம், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை ஏற்படும்.  மஞ்சள், நெய் மற்றும் மிளகு சேர்த்த கஷாயம் குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடல் சுத்தமாக வைக்க உதவுகிறது. 

 

4v1gq4g

 


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

எப்படி தயாரிப்பது?

ஒரு தேக்கரண்டி மஞ்சள், ஒரு தேக்கரண்டி நெய், தேவையான அளவு மிளகு ஆகியவை சேர்த்து அரைத்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.  காலை வெறும் வயிற்றில் இதனை சாப்பிட்டு வரலாம்.  மஞ்சளில் இருக்கக்கூடிய நற்குணங்களை உடல் உறிஞ்சுவதற்கு மிளகில் இருக்கக்கூடிய பிப்பெரின் என்னும் பொருள் உதவுகிறது.  வைட்டமின் ஏ, டி, ஈ, கே ஆகிய சத்துக்களை நெய் தருகிறது.  இவை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்களை தடுக்கிறது.,  மேலும் உடலில் இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கிறது. 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------