முகப்பு »  நலவாழ்வு »  வீட்டிலேயே ப்ரோடின் ஷேக் தயாரிக்கலாம்!

வீட்டிலேயே ப்ரோடின் ஷேக் தயாரிக்கலாம்!

உடலுக்கு புரதம் மிகவும் முக்கியமானது. உடலில் உள்ள அதிகபடியான எடையை குறைப்பதற்கும் புரதம் மிகவும் அவசியமானது

வீட்டிலேயே ப்ரோடின் ஷேக் தயாரிக்கலாம்!

உடலுக்கு புரதம் மிகவும் முக்கியமானது. உடலில் உள்ள அதிகபடியான எடையை குறைப்பதற்கும் புரதம் மிகவும் அவசியமானது. பசியை போக்கி உடல் எடையை குறைப்பதில் புரதத்திற்கு நிகர் புரதம் தான். புரதம் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தும். தினமும் ப்ரோடின் ஷேக் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். யோகர்ட், பால், முட்டை மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை காலை நேரத்தில் சாப்பிடலாம்.

7h94bg5g

 


 

பாதாம் பட்டர் ப்ரோடின் ஷேக்

பாதாம் அல்லது பாதாம் பட்டர், யோகர்ட் அல்லது பால் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். பால் மற்றும் நட் பட்டர் இரண்டிலும் புரதம் நிறைந்துள்ளது. அத்துடன் ஷியா விதை மற்றும் ஆளி விதை சேர்க்கலாம்.

6l005pf8

 

 

பனானா யோகர்ட் ப்ரோடின் ஷேக்

வாழைப்பழம் மற்றும் க்ரீக் யோகர்ட் சேர்த்து செய்யப்படும் இந்த ப்ரோடின் ஷேக்கில் சர்க்கரை சேர்க்க தேவையில்லை. க்ரீக் யோகர்ட் சேர்க்கப்படுவதால் கெட்டியானதாக இருக்கும்.

mbns5q78

 

ஓட்ஸ் அண்ட் எக் ப்ரோடின் ஷேக்

வறுத்த ஓட்ஸ், முட்டை, பெர்ரீஸ் மற்றும் பால் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ப்ரோடின் ஷேக்கில் ஊட்டச்சத்துக்கள் மிகுதியாக இருக்கிறது. மேலும் இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த ப்ளூபெர்ரீ சேர்த்து சாப்பிட்டால் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஸ்பினாச் அண்ட் ஃப்ளக்சீட் ஷேக்

பெரும்பாலும் யாரும் கீரையை விரும்புவதில்லை. ஆனால் ஒருவரின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்துமே கீரையில் உள்ளது. வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை மற்றும் அவகாடோ போன்றவற்றை கீரையுடன் சேர்த்து ஷேக் செய்து குடிக்கலாம். மேலும் இதில் முந்திரி, பாதாம் மற்றும் வால்நட் சேர்த்து கொள்ளலாம்.

mbkitp8o

 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------