முகப்பு »  நலவாழ்வு »  விராட்கோலி பாடி ஃபிட்டின் ரகசியம் இதுதான்...!

விராட்கோலி பாடி ஃபிட்டின் ரகசியம் இதுதான்...!

Virat Kohli workout video: விளையாட்டுக் களத்தில் கோலியின் திறமை மிளிர தனிப்பட்ட அவர் எடுக்கும் உடற்பயிற்சிக்கும் முக்கிய பங்குண்டு.

விராட்கோலி பாடி ஃபிட்டின் ரகசியம் இதுதான்...!

வியர்வை வடிய உடற்பயிற்சி செய்யும் கோலி

சிறப்பம்சங்கள்

  1. விராட் கோலி பாடி ஃபிட்டின் ரகசியம் ஸ்குவாட் செய்வதுதான்
  2. உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது
  3. அழகான தோற்றத்தையும் கொடுக்கிறது.

இந்தியக் கேப்டன் விராட் கோலியின் விளையாட்டுத் திறமையை அனைவரும் அறிவோம். விளையாட்டுக் களத்தில் கோலியின் திறமை மிளிர தனிப்பட்ட அவர் எடுக்கும் உடற்பயிற்சிக்கும் முக்கிய பங்குண்டு. கோலி விளையாட்டில் மட்டுமல்ல தனிப்பட்ட முறையில் உடலை ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது மிகவும் விரும்புகிறார்.

இன்று விராட் கோலி உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தன்னுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள. இந்த வீடியோவில் விராட் கோலி வியர்வை வடிய உடற்பயிற்சி செய்யும் விதமாக இருப்பதை பார்க்கலாம். 


A post shared by Virat Kohli (@virat.kohli) on

ஸ்குவட்டின் நன்மைகள்

விராட் கோலி ஃப்ரண்ட் ஸ்குவிட் மற்றும் எடை தூக்கும் பயிற்சியில் ஈடுபடுவதைப் பார்க்கலாம். விராட் கோலி உடற்பயிற்சிக்கு ட்ரெயினராக இருப்பவர் ஷில்பா ஷெட்டி,  ஜான் ஆப்ரகாம், ரித்தீஷ் தேஷ்முக் ஆகியோரிடம் இருந்த வினோத் சன்னா ஆவார்.

ஃப்ரண்ட் ஸ்குவாட் முதுகு வலி மற்றும் பிடிப்பு உள்ளவர்கள் அதை குறைக்க இந்த உடற்பயிற்சியைச் செய்யலாம். முதுகின் கீழ் பக்கம் மற்றும் வயிற்று தசைகளுக்கு சிறந்த பயிற்சியாக இது இருக்கும். இந்த உடற்பயிற்சி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

இந்த உடற்பயிற்சி உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது. இந்த ஸ்குவிட் செய்வதால் தொடை மற்றும் முதுகின் கீழ்ப்பக்கம்  தோள்பட்டை ஆகிய பகுதிகள் வலிமையடைய உதவுகிறது. இந்த உடற்பயிற்சியை தொடர்ந்து செய்தால் தசை வலிமையடைவதுடன் நல்ல தோற்றத்தையும் உங்களுக்கு கிடைக்கச் செய்கிறது. 

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------