முகப்பு »  நலவாழ்வு »  நெஞ்செரிச்சலுக்கு 2 நிமிடத்தில் வாழ்க்கைமுறை நிபுணர் கொடுக்கும் தீர்வு

நெஞ்செரிச்சலுக்கு 2 நிமிடத்தில் வாழ்க்கைமுறை நிபுணர் கொடுக்கும் தீர்வு

உங்களுக்கு தேவையானதெல்லாம் ஓமம் அல்லது பெருஞ்சீரகமே போதுமானதாக இருக்கும். சூடான தண்ணீரில் இதைக் கலந்து குடிக்கலாம். இதனால் செரிமானத்திறன் அதிகரிப்பதோடு நெஞ்செரிச்சலை இரண்டு நிமிடங்களில் குணமாக்கி விடுகின்றன.

நெஞ்செரிச்சலுக்கு 2 நிமிடத்தில் வாழ்க்கைமுறை நிபுணர் கொடுக்கும் தீர்வு

சிறப்பம்சங்கள்

  1. பெருஞ்சீரகத்தை சமையலில் பயன்படுத்துவது வழக்கம்
  2. பெருஞ்சீரக டீயும் செய்து குடிக்கலாம்.
  3. அசிடிட்டி நெஞ்சு எரிச்சலை தீர்க்கும் குணம் ஓமம், பெருஞ்சீரகத்திலும உண்டு

அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் மிகப் பொதுவான நோயாக இருந்தாலும், அலுவலக வேலை நேரத்தில் வந்து விட்டால் அதற்கே நேரம் சரியாகிவிடும்.  வேலை பார்க்கவே முடியாது போய்விடும். இந்த நெஞ்செரிச்சல் என்பது வயிற்று அமிலம் மீண்டும் உணவுக் குழாயில் தள்ளப்படுகையில் ஆசிட் ரிஃப்ளக்ஸ் (Acid reflux ) உருவாகிறது. ஆசிட் ரிஃப்ளக்ஸின் பொதுவான அறிகுறி என்பது உணவுக் குழாய் மற்றும் நெஞ்சில் எரிச்சலை மட்டுமே உருவாக்கும். 

இந்த நெஞ்செரிச்சல் பிரச்னைக்கு இணையத்தில் பல வகையான வழிகள் உள்ளன. வாழ்க்கை முறை பயிற்சியாளர் லுக் கொடின்கோ கூறும் தீர்வு எளிமையாகவும் உடனடி தீர்வாகவும் அமைகிறது. லுக் கொடின்கோ தன்னுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தில் நெஞ்செரிச்சலுக்கு உடனடி தீர்வை அளித்துள்ளார். 

ஒவ்வொரு இந்திய சமையல் அறைகளிலும் இருக்கும் அடிப்படை சமையல் பொருட்களே இதில் அடங்கும். “இயற்கையிலிருந்து கிடைக்கும் இந்தப் பரிசு தவறாக போக வாய்ப்பே இல்லை” என்று லுக் கொடின்கோ தெரிவித்துள்ளார். 


9656dei8

அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சலுக்கு 2 நிமிட தீர்வு: 

உங்களுக்கு தேவையானதெல்லாம் ஓமம் அல்லது பெருஞ்சீரகமே போதுமானதாக இருக்கும். சூடான தண்ணீரில் இதைக் கலந்து குடிக்கலாம். இதனால் செரிமானத்திறன் அதிகரிப்பதோடு நெஞ்செரிச்சலை இரண்டு நிமிடங்களில் குணமாக்கி விடுகின்றன. 

ஓமத்தில் தைமால் (thymol) என்ற கூட்டு பொருள் உள்ளது. வயிற்றில் கேஸ்டிரிக் ஜூஸை உருவாக்கி செருமானத் திறனை துரிதப்படுத்துகிறது. அசிடிட்டி, வாயு முதலிய செரிமான பிரச்னைகளுக்கு நம் முன்னோர்கள் கைவசம் வைத்து நமக்கு கொடுத்தது பெருஞ்சீரகத்தைத்தான். பெருஞ்சீரக விதைகள் வித்தியாசமான சுவையில் இருக்கும். 

இந்திய சமையலறையில் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். உணவு சாப்பிட்டதற்குப் பின் எடுத்துக் கொள்ளும் வழக்கமும் உண்டு. பெருஞ்சீரகம் மலச்சிக்கல், வயிற்று எரிச்சல், செரிமானம் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்கும். 

பெருஞ்சீரகத்தில் உள்ள கூட்டுப் பொருள்கள் அலற்சியற்ற தன்மையைக் கொண்டுள்ளது. வாழ்க்கை நிபுணர் லுக் கொடின்கோ சூடான நீரில் ஓமம் மற்றும் பெருஞ்சீரகம் இரண்டையும் கலந்து குடிக்க அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றிற்கு நிவாரணம் அளிக்கிறது. ஒமம் மற்றும் பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிட்டாலும்  நெஞ்செரிச்சல் தணிந்து விடும். 

(Luke Coutinho, Holistic Lifestyle Coach - Integrative Medicine)

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com