முகப்பு »  நலவாழ்வு »  தொப்பையை குறைக்க இதை சாப்பிடலாம்...

தொப்பையை குறைக்க இதை சாப்பிடலாம்...

தொப்பையை குறைத்து அழகான உடல் வடிவத்தை பெற நீங்கள் இவற்றை சாப்பிடுங்கள்.  

தொப்பையை குறைக்க இதை சாப்பிடலாம்...

சிறப்பம்சங்கள்

  1. முட்டையின் வெள்ளை பகுதியை சாப்பிட்டால் தொப்பை குறையும்.
  2. சோயா பொருட்களில் புரதம் நிறைந்திருக்கிறது.
  3. உடற்பயிற்சிகளை தொடர்ச்சியாக செய்வதன்மூலம் உடல் எடை குறையும்.

ஆரோக்கியமான மற்றும் வடிவமான உடலை பெற நினைத்தால் உடற்பயிற்சி, உணவு பழக்கம் மற்றும் வாழ்வியல் முறையில் சில மாற்றங்களை பின்பற்ற வேண்டும்.  தொடர் முயற்சியால் மட்டுமே உடல் எடை குறைப்பது சாத்தியம்.  தட்டையான வயிறு தான் இங்கு பெரும்பாலானோரின் கனவாக இருக்கிறது.  புரதம் மற்றும் மற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட ஆரம்பித்தாலே தொப்பை குறைவதை கண்கூடாக பார்க்க முடியும்.  தொப்பையை குறைத்து அழகான உடல் வடிவத்தை பெற நீங்கள் இவற்றை சாப்பிடுங்கள்.  

முட்டை: 


முட்டையில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கிறது.  தினமும் முட்டையின் வெள்ளைப்பகுதியை சாப்பிடுவதால் எலும்புகள் உறுதியாக இருக்கும்.  உடல் வலுவாக இருக்கும்.  

தோல் நீக்கப்பட்ட இறைச்சி: 

தோல் நீக்கப்பட்ட இறைச்சிகளை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான புரதம் கிடைத்து விடுகிறது.  அத்துடன் உடல் எடையும் குறைகிறது.  இறைச்சியின் தோல் பகுதியில் தான் அதிகபடியான கொழுப்பு இருக்கிறது.  அதனால் அவற்றை தவிர்க்கலாம். 

ukgo8n0o

 

கடல் உணவுகள்:

கடல் உணவுகளிலே இறாலில் தான் புரதம் அதிகம் இருக்கிறது.  இதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால் இருதய ஆரோக்கியத்தை பராமரித்து, இரத்த ஓட்டத்தையும் சீராக வைத்திருக்கும்.  மேலும் கலோரிகள் குறைவு என்பதால் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். 

பால் பொருட்கள்: 

பால் பொருட்களில் புரதம் அதிகமாக உள்ளது.  சீஸ், ஸ்கிம்டு மில்க் போன்றவை உடலில் தசைகளின் வளர்ச்சிக்கு உதவும்.  உடலுக்கு தேவையான லேக்டோஸ் தேவையை பூர்த்தி செய்கிறது.  

சோயா: 

சோயா பால் மற்றும் சோயா பொருட்களை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்காது.  உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகப்படுத்துகிறது.  

விதைகள் மற்றும் கொட்டைகள்: 

பூசணி விதை, வால்நட், பாதாம் போன்றவற்றில் புரதம் அதிகம் உள்ளது.  உடலுக்கு தேவையான ஆரோக்கிய கொழுப்புகள், ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் சிங்க் போன்ற சத்துக்கள் இருப்பதால் அடிக்கடி சாப்பிடலாம்.  அப்படியே அல்லது வறுத்தோ சாப்பிட உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------