முகப்பு »  நலவாழ்வு »  எந்த இறைச்சியில் புரதம் அதிகம்!!

எந்த இறைச்சியில் புரதம் அதிகம்!!

சிவப்பு இறைச்சியை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக ஆராய்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

எந்த இறைச்சியில் புரதம் அதிகம்!!

சிறப்பம்சங்கள்

  1. சிவப்பு இறைச்சியில் கொழுப்பு அதிகமாக உள்ளது.
  2. சிவப்பு இறைச்சியை அதிகமாக சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும்.
  3. சிவப்பு மற்றும் வெள்ளை இறைச்சியில் புரதம் அதிகமாக உள்ளது.

நீங்கள் அசைவ பிரியராக இருந்தால், உங்களுக்கு புரதம் நிறைய உணவுகளில் இருந்து கிடைத்துவிடும்.  இறைச்சியிலும் இரண்டு வகை உண்டு.  அதாவது, ரெட் மீட் மற்றும் ஒயிட் மீட்.  ஒயிட் மீட் எனப்படுவது கோழியும், ரெட் மீட் எனப்படுவது ஆடு, மாடு மற்றும் பன்றி இறைச்சியாகவும் இருக்கிறது.  இந்த இரண்டு இறைச்சியில் இருந்து எப்படிப்பட்ட சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன என்பது குறித்து பார்ப்போம். 

tij2b6n

 


இரும்புச் சத்து:

100 கிராம் சிவப்பு இறைச்சியில் 2.7 மில்லிகிராம் இரும்புச் சத்து இருக்கிறது.  100 கிராம் கோழியில் 1.3 மில்லிகிராம் இரும்புச் சத்துதான் இருக்கிறது.  ஆக வெள்ளை இறைச்சியை காட்டிலும், சிவப்பு இறைச்சியில் தான் இரும்புச் சத்து அதிகமாக இருக்கிறது.  சிவப்பு இறைச்சியில் மையோக்ளோபின் அளவு அதிகமாக இருப்பதால் உடலுக்கு இரும்புச் சத்தை கொடுக்கிறது. 

கொழுப்பு சத்து:

சிவப்பு இறைச்சியை காட்டிலும் வெள்ளை இறைச்சியில் கொழுப்பு சத்து குறைவாகவே உள்ளது.  100 கிராம் சிவப்பு இறைச்சியில் 20 கிராம் கொழுப்பு இருக்கிறது.  ஆனால் 100 கிராம் கோழி இறைச்சியில் 14 கிராம் கொழுப்பு சத்தே உள்ளது.  வெள்ளை இறைச்சியில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக இருக்கிறது. 

புரதம்:

புரதத்தை பொருத்தவரையில் சிவப்பு மற்றும் வெள்ளை இறைச்சியில் சம அளவு புரதம் இருக்கிறது.  100 கிராம் இறைச்சியில் 25-30 கிராம் புரதம் இருக்கிறது.

d7j7laj

 

வைட்டமின்:

வெள்ளை இறைச்சியில் வைட்டமின் பி2, பி3, பி5, பி6 இருக்கிறது.  இவை உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.  சிவப்பு இறைச்சியில் வைட்டமின் பி12 இருக்கிறது.  இவை உடலில் இரத்த அணுக்களை அதிகரித்து, இரத்த சோகையை தடுக்கிறது.

இருதய ஆரோக்கியம்:

சிவப்பு இறைச்சிக்கும் இருதய நோய்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவற்றில் இருக்கக்கூடிய கொழுப்பு சத்து இருதய ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடியதாக இருக்கும்.  சிவப்பு இறைச்சியில் சிங்க் மற்றும் வெள்ளை இறைச்சியில் செலினியம் ஆகிய சத்துக்கள் இருப்பதால் இருதய ஆரோக்கியத்திற்கு நன்மையும் செய்கிறது.  பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் ஆகிய சத்துக்கள் அதிகமாக இவை இரண்டிலுமே இருக்கிறது.

புற்றுநோய்:

சிவப்பு இறைச்சியை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக ஆராய்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  ஆகையால் சிவப்பு இறைச்சியை அதிகபடியாக சாப்பிடக்கூடாது.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------