முகப்பு »  நலவாழ்வு »  நார்ச்சத்து மிகுந்த உணவுகள்

நார்ச்சத்து மிகுந்த உணவுகள்

நம் உடலுக்கு நார்ச்சத்து என்பது மிகவும் முக்கியமானது.  நார்ச்சத்தில் எளிதில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து என்று இரண்டு வகை உள்ளது.  

நார்ச்சத்து மிகுந்த உணவுகள்

நம் உடலுக்கு நார்ச்சத்து என்பது மிகவும் முக்கியமானது.  நார்ச்சத்தில் எளிதில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து என்று இரண்டு வகை உள்ளது.   பொதுவாக கிடைக்கக்கூடிய இயற்கை உணவு பொருளில் இவை இரண்டுமே நிறைந்திருக்கும்.  இந்த எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தும், இரத்ததில் கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவை குறைக்கும்.   நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணும்போது நம் குடல் இயக்கம் மற்றும் செரிமானம் சீராக இருக்கும்.  ஆண்களுக்கு நாள் ஒன்றிற்கான ஆற்றலுக்கு 38 கிராம் நார்ச்சத்து மிகுந்த உணவை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள்.  ஆனால் அவர்களுக்கு கிடைப்பதோ வெறும் 15 கிராம் மட்டுமே.  இவர்களுக்காகவே சில நார்ச்சத்து மிகுந்த உணவை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம்.


1. சிவப்பு அரிசி

வழக்கமான அரிசியை தவிர்த்து சிவப்பு அரிசியை சாப்பிடுகிறீர்கள் என்றால் அதுதான் சிறந்த ஆரோக்கிய தேர்வாக இருக்கும்.  ஒரு கப் சிவப்பு அரிசியில் நான்கு கிராம் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது.  ஆனால் வழக்கமான அரிசியில் இரண்டு கிராம் நார்ச்சத்து மட்டுமே உள்ளது.  இந்த சிவப்பு அரிசியில் சுலபமாக செரிக்கக்கூடிய மாவுச்சத்து இருப்பதால் இரத்தத்தில் இருக்கும் கொழுப்பு சத்தை குறைக்க உதவும்.  நார்ச்சத்து மிகுதியால் மலச்சிக்கல் பிரச்சனை இல்லாமல் இருக்கும்.  
 


ged7q58o

2. கொண்டைக்கடலை

கொண்டைக்கடலையில் ஊட்டட்ச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.  இதில் மாங்கனீசு, பாஸ்பரஸ், கனிமங்கள் மற்றும் இரும்பு சத்து நிறைந்திருக்கிறது.  இதை தினசரி சாப்பிடுவதால், உடலுக்கு பலம் கொடுத்து ஆற்றலை அதிகரிக்க செய்யும். 

m12b9h8

3. முழு தானியங்கள்

கோதுமை, சோளம், கம்பு மற்றும் கேழ்வரகு போன்ற முழு தானியங்களை உணவில் சேர்த்து கொள்வதனால் உடலுக்கு நல்ல சத்துக்கள் கிடைக்கும்.  இவற்றை சாப்பிடும்போது எளிதில் வயறு நிறைந்துவிடும் என்பதால் உணவு தேவை குறையும்.  இதில் செலினியம், மக்னீஷியம், சின்க், வைட்டமின் பி மற்றும் இரும்பு சத்து நிறைந்திருக்கிறது.  மேலும் இவற்றில் நார்ச்சத்து மிகுந்திருப்பதால் உடல் ஃபிட்டாக இருக்கும்.

4. தேங்காய்

தேங்காயில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு நிறைந்திருக்கிறது.  மற்ற உணவோடு ஒப்பிடுகையில், ஓட்ஸ் ப்ரான், தேங்காய் மற்றும் தேங்காய் மாவில் நான்கு முதல் ஆறு மடங்கு நார்ச்சத்து நிறைந்துள்ளது என்பதால் தினசரி உணவில் தாராளமாக சேர்த்து கொள்ளலாம்.

csn8nuo

6. பட்டாணி

பச்சை பட்டாணியில் ஒன்பது மடங்கு நார்ச்சத்தும் ஆண்டிஆக்ஸிடண்ட்டும் அதிகமாக உள்ளது.  தினசரி வேகவைத்து அல்லது மற்ற உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.  இது உடலில் நல்ல கொழுப்பு சத்தை அதிகரிக்க செய்யும்.  நார்ச்சத்து மிகுதியால் மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது.  மேலும் உடல் எடையை குறைக்கவும், இரத்ததில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது.   

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com