முகப்பு »  நலவாழ்வு »  பசியெடுத்தால் ஏன் கோபம் வருகிறது…? இதனால் வரும் விளைவுகள் என்னயென்பதை அறிவோமா

பசியெடுத்தால் ஏன் கோபம் வருகிறது…? இதனால் வரும் விளைவுகள் என்னயென்பதை அறிவோமா

பசியென்று வந்து விட்டால் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோபம் வருவது பலருக்கும் உண்டு.

பசியெடுத்தால் ஏன் கோபம் வருகிறது…? இதனால் வரும் விளைவுகள் என்னயென்பதை அறிவோமா

இந்த மனநிலையை சாப்பாட்டால் மட்டுமே மாற்றம் முடியும்.

சிறப்பம்சங்கள்

  1. இந்த மனநிலையை சாப்பாட்டால் மட்டுமே மாற்றம் முடியும்.
  2. பசி மன அழுத்தத்தை அதிகரிக்கும்
  3. இந்த உணர்வை "hangry" என்று குறிப்பிடுகின்றனர்.

பசியெடுத்தால் நீ நீயா இருக்க மாட்ட… என்றொரு விளம்பரம் வரும் அதில் சொல்லப்பட்ட உணர்வை அனைவரும் உணர்ந்திருப்போம். பசியென்று வந்து விட்டால் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோபம் வருவது பலருக்கும் உண்டு. இந்த மனநிலையை சாப்பாட்டால் மட்டுமே மாற்றம் முடியும். பசி தீர்ந்து விட்டால் இந்த மன நிலையும் மாறிவிடும். வாழ்க்கை முறை ஆலோசகர்  லுக் கொடினோ (Luke Coutinho) என்பவர் இந்த மனநிலை தொடர்ந்து இருந்தால் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த உணர்வை "hangry" என்று குறிப்பிடுகின்றனர். 

உணவு உடலில் எப்படி வேலை செய்கிறது? 

நீங்கள் உண்ணும் கார்ப்போஹைட்ரேட் குளுகோஸாக மாறுகிறது. புரதச் சத்துகள் அமினோ ஆசிட்டாக மற்றும் கொழுப்பு அமிலங்களாக மாறுகிறது. இந்த அமிலங்கள் இரத்தத்தில் கலந்து உடல் உறுப்புகளுக்கு செல்கிறது. கார்ப்போஹைட்ரேட்டிலிருந்து பிரிக்கப்படும் குளுக்கோஸை மூளைக்கு அனுப்பப்படவேண்டும். ஆனால் போதிய அளவு புரதச்சத்தோ அல்லது கார்போஹைட்ரேட்டோ போதுமான அளவு மூளைக்கு செல்லவிடில் இந்த மாதிரியான கோப உணர்வுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்று தெரிவிக்கிறார். 


fl4spjjo

அதீத பசியில் சாப்பிடும் போது டயட்டை மறந்து அதிகமாக சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர், இதனால் உடல் எடை மட்டுமே அதிகரிக்கிறது. இதேபோல் அதிகளவு கார்போஹைட் ரேட் எடுத்துக் கொள்ளும் போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால் மூளை இன்னும் கூடுதலாக கார்ப்போஹைட்டை சாப்பிடத் தூண்டுகிறது. இதனால் கோபம் ஏற்படுகிறது. 

எதனால் கோபம் ஏற்படுகிறது? 

அட்ரினல் சுரப்பிகள் கார்டிசோல் மற்றும் அட் ரினலின் என்ற மன அழுத்தம் கொடுக்கும் சுரப்பிகளை சுரக்கிறது. மன அழுத்தம் ஏற்பட்டு உங்களின் நடத்தை மற்றும் மன நிலை முற்றிலும் மாறுபடுகிறது. தூக்கமின்மையும் இதற்கு ஒரு முக்கியமான காரணமாகும். குறைவான தூக்கம் கெர்லின் என்ற ஹோர்மோன் அல்லது பசியைத் தூண்டும் ஹார்மோனை சுரக்கிறது. இதனால் கோபம் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. 


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

(Luke Coutinho, Holistic Lifestyle Coach - Integrative Medicine)

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information. 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------