முகப்பு »  நலவாழ்வு »  ஆரோக்கியத்துக்கான பிளாக் டீயின் 8 நன்மைகள்

ஆரோக்கியத்துக்கான பிளாக் டீயின் 8 நன்மைகள்

பிளாக் டீ ஹார்மோன் அளவை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது, அலர்ஜி எதிர்ப்பு குணங்களைக் கொண்டுள்ளது

ஆரோக்கியத்துக்கான பிளாக் டீயின் 8 நன்மைகள்

சிறப்பம்சங்கள்

  1. பிளாக் டீ நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது
  2. பிளாக் டீ எடை குறைப்புக்கு உதவுகிறது
  3. பிளாக் டீயை தொடர்ந்து அருந்தி வந்தால் இதய நோய்களின் ஆபத்து குறையும்

டீ 4000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் கண்டு பிடிக்கப்பட்டிருந்தாலும் உலகம் முழுவதும் அனைவராலும் அருந்தப்படும் ஒரு பானம் அது. உண்மையில் டீ, காஃபியை விட குறைவான அளவே தீங்கு விளைவிக்கிறது. ஏனென்றால் காஃபியில் காஃபேன் உள்ளடக்கம் குறைவாக உள்ளது. அதே நேரத்தில் டீயின் நலன்களைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

பிளாக் டீ அதிகமான ஆரோக்கிய நலன்களைக் கொண்டுள்ளது. கிரீன் டீ, வொயிட் மற்றும் பிளாக் டீ இடையே ஆன வித்தியாசங்கள் அதன் செயல் முறை மற்றும் செய்யப்படும் விதத்தைப் பொருத்தது. கிரீன் டீ மற்றும் வொயிட் டீயும் ஃபெர்மென்ட் செய்யப்படுவதில்லை. ஆனால் பிளாக் டீ ஃபெர்மென்ட் செய்யப்படுகிறது. பிளாக் டீயில் ஃப்ளோரைடு இருப்பது, வாய் மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகிறது. பிளாக் டீ ஹார்மோன் அளவை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது, அலர்ஜி எதிர்ப்பு குணங்களைக் கொண்டுள்ளது. பாலிபினால்கள் போன்ற ஆண்டி ஆக்ஸிடென்டை அதிகளவில் கொண்டுள்ளது மற்றும் சோடியம், புரதங்கள், மற்றும் கார்போஹைட்ரேட் முதலிய உள்ளடக்கங்களை குறைந்த அளவில் கொண்டுள்ளது. இதை தவிற உடலின் நீர் சத்தை தக்கவைப்பதுடன்,சருமத்தை மாய்ஸ்சுரைசஸ் செய்கிறது.

பிளாக் டீயை உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வகையாக உட்கொள்கின்றனர். மேற்கத்திய நாடுகளில், குளிர்ச்சியான முறையில் எலுமிச்சை சேர்த்து ஐஸ் டீயாக அல்லது தேன் அல்லது சக்கரை போன்ற இனிப்புடன் சேர்த்து உட்கொள்கின்றனர். மறுபுறம், கிழக்கு நாடுகளில், இந்த பிளாக் டீ சூடாக அருந்தப்படுகிறது. இலங்கை மற்றும் இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில், இது தினசரி பானமாக பொதுவாக உட்கொள்ளாப்படுகிறது.

kladh2q

பிளாக் டீயின் 8 நன்மைகள்


1. நீரிழிவு நோய்க்கான ஆபத்தைக் குறைக்கிறது

ஒரு தீவிரமான வளர்சிதை மாற்ற கோளாறான, நீரிழிவு உலகம் முழுவதும் வளர்ந்து வரும் நாள்பட்ட சுகாதார பிரச்சனை. இரண்டு முதல் மூன்று கப் பிளாக் டீ குடிப்பதால் 2 ஆம் வகை நீரிழிவு நோயின் அபாயத்தை 42% குறைக்க முடியும். பிளாக் டீயில் உள்ள முக்கிய பயோ ஆக்டிவ் காம்பவுண்ட்ஸ் பாலிபினால்கள் ஆகும். இவை குறைவான கிளிசரின் குறியீட்டைக் கொண்டுள்ளது.

2. இதய நோய்களில் இருந்து பாதுகாக்கிறது

உடல்நல சிக்கல்களைத் தவிர்க்க, இதயம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். இதயத்தை மேம்படுத்துவதில் பிளாக் டீயில் உள்ள ஃப்ளாவன்ஸ் உதவுகின்றன. இதய நோயாளிகளுக்கு கரோனரி தமனி செயலிழப்பை சரி செய்வதோடு, இரத்த நாளங்களின் செயல்பாட்டை சரிசெய்வதிலும் இது உதவுகிறது. எனவே உங்கள் இதயத்தை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்துக் கொள்ள ஒரு நாளைக்கு 2- 3 கப் பிளாக் டீ குடியுங்கள்.

h7cfuqlg

3. செரிமானத்தை மேம்படுத்துகிறது

டானின்ஸ் மற்றும் பிற இரசாயனங்களை அதிகமாகக் கொண்டிருக்கும் பிளாக் டீ, உடலின் செரிமான மண்டலத்தில் நேர்மறையான மற்றும் ரீளாக்ஸிங்க விளைவைக் கொடுக்கிறது. பிளாக் டீயில் இருக்கும் பாலிபினால்கள் நல்ல பாக்டீரியாவை மேம்படுத்துகின்ற பிரிபயோடிக்காக செயல்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த பாலிபினால்கள் குடலில் மற்ற தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. மேலும் இதிலிருக்கும் கெமிக்கல் காம்பவுன்ட்ஸ் வயிற்றுப் புண்களுக்கு எதிராக போராடுகிறது.

4. ஆஸ்துமாவை விடுவிக்கிறது

சூடான மற்றும் சுத்திகரிக்கப்பட்ட திரவங்கள் ஆஸ்துமா நிலைமைகளுக்கு நிவாரணம் தருகின்றன, அவை மூச்சு குழாய்களின் வீக்கத்தை குறைக்கின்றன மற்றும் காற்றுப் பத்திகளை அதிகரிக்கின்றன. இது சுவாசத்தை எளிதாக்கிறது. ஃபிளாவனாய்டுகள் இருப்பது ஆஸ்துமா இருப்பவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது.

5. மன அழுத்தத்தின் நிவாரணம்

மன அழுத்தம் தினசரி வாழ்கையின் அங்கமாக மாறிவிட்டது. மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கு ஒரு கப் பிளாக் டீ சிறந்தது. பிளாக் டீ ஸ்ட்ரெஸ் ஹார்மோனின் உற்பத்தியை குறைக்கிறது மற்றும் நரம்புகள் ரீலாக்ஸ் செய்வதை உறுதிப்படுத்த உதவுகிறது.

6. எடை இழப்பிற்கு உதவுகிறது

இதய நோய், நீரிழிவு, அதிக கொழுப்பு போன்ற நோய்களின் மூல காரணம் உடல் பருமன். பிளாக் டீயை குடிப்பதால் உடல் பருமன் குறைகிறது. எனவே,ஒரு சீரான மற்றும் ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் ஒரு சூடான கப் பிளாக் டீ நீங்கள் சரியான வடிவத்தை பெற உதவும்.

dqqdb7

7. கொலஸ்ட்ரால் குறைகிறது

ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறையின் காரணமாக ஏற்படும் மோசமான கொழுப்பு அளவுகளை குறைப்பதில் பிளாக் டீ உதவுகிறது. கெட்ட கொலஸ்டிரால் இரத்த ஓட்டத்தை குறைக்கிறது, இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும். ஜப்பானிய ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சீன பிளாக் டீ எதிர்ப்பு-ஹைபர்கோளேஸ்டிரோலிமிக் கொண்டிருக்கிறது, இது பருமன் மற்றும் இதய நோயால் பாதிக்கப்படும் மனிதர்களை பாதிக்கிறது.

8. பாக்டீரியாவைக் கொன்றுவிடுகிறது

பாக்டீரியா நன்மை மற்றும் தீமையானது ஆனால் பெரும்பாலும்,இது திமையானதாகவே இருக்கிறது. பெரும்பாலான பாக்டீரியாக்கள் தொற்றுநோயை ஏற்படுத்தும் மற்றும் குணப்படுத்தமுடியாத சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தும். பிளாக் டீயில் காணப்படுகின்ற ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் பிற பைட்டோ நியூட்ரியன்ஸ்களும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பண்புகளை கொண்டுள்ளன என்று விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இது நாற்றம் மற்றும் வியர்வை வரும் கால்களுக்கு இது பயணுள்ள சிக்கிச்சையாக இருக்கும்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------