முகப்பு »  நலவாழ்வு »  தலைவலிகள், ஜாக்கிறதை!

தலைவலிகள், ஜாக்கிறதை!

மன அழுத்தம், கோபம், பதற்றம், பசி, உடல் நலக்கேடு போன்றவை தலைவலி ஏற்பட காரணமாய் அமைகிறது

தலைவலிகள், ஜாக்கிறதை!

மைக்ரேன் என்னும் ஒற்றை தலைவலியால் குமட்டல், வாந்தி, போன்ற உடல் உபாதைகளும் தோன்றும்.

சிறப்பம்சங்கள்

  1. பெண்களின் உடலில் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றத்தின் விளைவாக அவர்களுக்கு தல
  2. சைனஸ் தலைவலியால் மூக்கின் இருபுறமும் தொடர்ச்சியாக வலி இருந்து கொண்டே இருக
  3. க்ளஸ்டர் தலைவலி பெண்களை விட ஆண்களையே அதிகம் குறிவைக்கும்.

எல்லோருக்குமே மிகவும் எளிதாக வரக்கூடியது இந்த தலைவலி. வீட்டில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி அலுவலகம் செல்பவர்களாக இருந்தாலும் சரி, குழந்தையானாலும் சரி, வயது முதிர்ந்தவர்களாக இருந்தாலும் சரி பாரபட்சமே இல்லாமல் வாட்டி வதைக்கக்கூடிய கொடிய நோய்தான் தலைவலி. மன அழுத்தம், கோபம், பதற்றம், பசி, உடல் நலக்கேடு போன்றவை தலைவலி ஏற்பட காரணமாய் அமைகிறது. தலைவலிகளின் வேறுபாடுகளையும் காரணங்களையும் அறிந்திருந்தால் எளிமையாக குணப்படுத்த முடியும்.

சைனஸ் தலைவலி

மூக்கின் இருபுறமும், புருவத்தின் மேல், நெற்றியில், கன்னத்தில் என தொடர்ச்சியாக வலி இருந்து கொண்டே இருக்கும். சைனஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலை பாரம், மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தும்மல், முகத்தில் வீக்கம் மற்றும் தலைவலி போன்றவை இதன் அறிகுறிகள். இதனால், மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் சலி வெளிவரும்.


31bhd2j8

எல்லோருக்கும் மிக எளிதாக வரக்கூடியது தலைவலி. Photo Credit: iStock

கோபத்தால் ஏற்படும் தலைவலி

தற்போது எதற்கெடுத்தாலும் கோபப்படும் குணம் எல்லோர்க்கும் வாய்த்து விட்டது. கோபத்தால் ஏற்படும் தலைவலி என்பது பொதுவாக டீனேஜர்கள் மற்றும் பெரியவர்களுக்கு வரக்கூடும். இதனால் பெரிய பாதிப்பு ஏற்படாது என்றாலும் கோபத்தை குறைத்து கொள்வது உடல் நலனுக்கு நல்லது.

க்ளஸ்டர் தலைவலி

க்ளஸ்டர் தலைவலியானது ஒரே ஒரு கண்ணில் ஏற்படக்கூடியது. அதாவது கண்ணை சுற்றியோ அல்லது கண்ணிற்கு பின்புறமோ வலியின் தீவிரம் அதிகமாக இருக்கும். ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று முறை என பலமுறை விட்டுவிட்டு வலிக்கும். இந்த வலியானது சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை நீடிக்கும். ஒவ்வொரு முறை ஏற்படும் தலைவலியும் 15 நிமிடத்தில் தொடங்கி 3 மணிநேரம் வரை தொடரும். இந்த தலைவலியால் தூக்கம் தடைப்படும். இதனால், கண்கள் சிவந்து போதல், கண்ணீர் வழிவது போன்ற உபாதைகள் ஏற்படும். மேலும் இந்த க்ளஸ்டர் தலைவலி பெண்களை விட ஆண்களையே அதிகம் குறிவைக்கும்.

kgv1fsf8

தலைவலிகளின் வேறுபாடுகளையும் காரணங்களையும் அறிந்திருந்தால் எளிமையாக குணப்படுத்த முடியும். Photo Credit: iStock

ஹார்மோன்களால் ஏற்படும் தலைவலி

பெண்களின் உடலில் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றத்தின் விளைவாக அவர்களுக்கு தலைவலி உண்டாகும். மாதவிடாய், கற்ப காலம் மற்றும் மெனோபாஸ் சமயங்களில் தலைவலி ஏற்படும். மேலும் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவதால் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தாலும் தலைவலி ஏற்படும்.

மைக்ரேன் தலைவலி

மைக்ரேன் என்னும் ஒற்றை தலைவலி ஒரு நாளில் நான்கு மணிநேரத்தில் தொடங்கி, மூன்று நாட்கள் வரை நீடிக்கும் அல்லது மாதத்தில் நான்கு முறை வரக்கூடும். இந்த தலைவலியுடன் சேர்த்து குமட்டல், வாந்தி, உடல் எடை குறைவு, வயிற்று வலி போன்ற உடல் உபாதைகளும் தோன்றும். மேலும் குழந்தைகளுக்கு வரக்கூடிய மைக்ரேன் தலைவலியால், கண் பார்வையில் குறைபாடு, காய்ச்சல், இரைப்பை கோளாறு, சோர்வு போன்றவை ஏற்படும்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------