முகப்பு »  Bones & Joints »  நாள்பட்ட கழுத்துவலி தீரணுமா...! இதோ சில வீட்டு வைத்தியங்கள்

நாள்பட்ட கழுத்துவலி தீரணுமா...! இதோ சில வீட்டு வைத்தியங்கள்

முதுகுவலி, தோள்பட்டை, குதிகால் மற்றும் கழுத்தில் ஏற்படும் தீவிர வலியே இதன் அறிகுறியாகும். இதன குடல் பிரச்சினைகள் எடை அதிகரிப்பு ஆகியவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நாள்பட்ட கழுத்துவலி தீரணுமா...!  இதோ சில வீட்டு வைத்தியங்கள்

தீராத கழுத்துவலிக்கு உங்கள் வேலைச்சூழலும் ஒரு காரணம்

சிறப்பம்சங்கள்

  1. நிமிர்ந்து உட்காராமல் குனிந்த படியே இருப்பதனால் நோய் ஏற்படுகிறது.
  2. நாள்பட்ட முதுகுவலியினால் உடலின் இயக்கம் நாள் முழுவதும் பாதிக்கப்படலாம்
  3. யோகா உடலின் தசைகளுக்கு வலுவை கூட்டுகிறது

முதுகெலும்பு வீக்க (Spondylitis ) நோய் முதுகெலும்பை பாதிக்கும் ஒரு தீவிரமான வலி மிகுந்த நோயாகும். பொதுவாக இந்த நோய் வயதானவர்களை அதிகம் பாதிக்கிறது. இன்றைய காலத்தில் இளைஞர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். வேலை நேரம் முழுவதும் நிமிர்ந்து உட்காராமல் குனிந்த படியே இருப்பதனால் இந்த நோய் வருகிறது. நாள்பட்ட முதுகுவலியினால் உடலின் இயக்கம் நாள் முழுவதும் பாதிக்கப்படலாம். உங்கள் உடலின் செயல் திறனும் குறைந்து விடும்.  முதுகுவலி, தோள்பட்டை, குதிகால் மற்றும் கழுத்தில் ஏற்படும் தீவிர வலியே இதன்  அறிகுறியாகும். இதன குடல் பிரச்சினைகள் எடை அதிகரிப்பு ஆகியவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

4a9f7878

மன அழுத்தம், உணவு செரிமானம், நீண்ட வேலை நேரங்கள், உடல் பருமன் ஆகியவற்றால் இந்த முதுகெலும்பு வீக்க நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இந்த எளிமையான வீட்டு வைத்தியம் உங்களின் முதுகெலும்பு நோயை  நிச்சயமாக அகற்றக்கூடியது. 


1. யோகா 

யோகா முதுகெலும்பு வீக்க நோயை தடுக்க சிறந்த சிகிச்சைகளில் ஒன்று. யோகா இந்த நோயினால் ஏற்படும் வலியை குறைத்து உடலின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கிறது. சில யோகாக்கள் இந்த நோய் வராமல் தடுக்கிறது. ஷாலபாஷன, வக்ராசனா, ஆர்த்தா சக்ராசனா, தனுராசனம் ஆகியவை இந்த நோய்க்கான சிகிச்சையாக  இருக்கும். இந்த யோகா உடலின் தசைகளுக்கு வலுவை கூட்டுகிறது. மருத்துவரைக் கலந்து ஆலோசித்தபின் பயிற்சியை தொடங்குங்கள். 

2. நிமிர்ந்து உட்காருதல் 

வீட்டிலோ அல்லது வேலை நேரத்திலோ நீங்கள் உட்கார்ந்திருக்கும் முறையை ஒவ்வொரு தடையும்  கவனித்துக் கொள்ளுதல் அவசியம். எப்போது நிமிர்ந்து உட்கார்ந்த படியே வேலையை செய்தால் தான் முதுகெலும்பு வீக்கம் இல்லாமல் இருக்கும். குடல் பிரச்னைகளும் ஏற்படாது. நீண்ட நேரம் உட்கார்ந்த படியே இருக்காமல் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கலாம். முதுகெலும்பு வளையாமல் உட்காருவதே நல்லது. 

3. ஒத்தடம்

கழுத்து  வலி ஏற்படும் போது ஐஸ் பேக் அல்லது ஹீட் பேட்ஸினால் ஒத்தடம் கொடுப்பது வலிக்கு சிறந்த நிவாரணமாக இருக்கும். முடிந்தால் வெதுவெதுப்பான நீரில் குளித்தால் வலி குறையும் விறைப்பாக இருக்கும் தசைகள் தளர்ந்து விடும். கிராம்பு, பூண்டை நசுக்கி ஒரு தேக்கரண்டி எண்ணெய்யில் போட்டு அந்த எண்ணெய்யை சூடாக்கி வலி உள்ள கழுத்துப் பகுதியில் தேய்க்கலாம். இதனால் வலி குறைந்து கழுத்து தசைகளும் தளர்ந்து கொடுக்கும். 

4. மசாஜ் 

முதுகெலும்பு வீக்க நோய்க்கு மசாஜ் தெரபி நல்ல ஒரு சிகிச்சையாக இருக்கும். மசாஜ் வலியை குறைப்பது தசைகள் தளர்த்தி விடுகிறது. மேலும், மசாஜ் உங்களுக்கு இருக்கும் மன அழுத்தத்தை குறைக்கிறது. சூடான கடுகு எண்ணெய்யில் கிராம்பு போட்டு வலியுள்ள இடத்தில் மசாஜ் செய்து கொடுக்கலாம்.

  5.  நெக் எக்ஸசைஸ்

கழுத்துக்கான பயிற்சிகள் வலியை பெரும் அளவில் தடுக்கின்றன. மன அழுத்தம் அதனோடு சேர்ந்து வேலையில் உங்களுக்கு இருக்கும் டார்கெட் பிரஸர் என அனைத்தும் உங்களுக்கு வலியை அதிகரிக்கவே செய்யும். குறிப்பிட்ட நேர இடைவெளியில் இந்த பயிற்சிகளை செய்யுங்கள். 

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------