முகப்பு »  பாலியல் சுகாதாரம »  நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய 6 கருத்தடை முறைகள்

நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய 6 கருத்தடை முறைகள்

குழந்தை பெற சரியான நேரம் வரவில்லை என்று நினைப்பவர்கள், பாதுகாப்பான கருத்தடை முறைகள் பற்றி தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்

நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய 6 கருத்தடை முறைகள்

திருமணம் ஆனவர்களோ, திருமணம் ஆகாதவர்களோ யாராக இருந்தாலும், கருத்தடை முறைகள் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். குழந்தை பெற சரியான நேரம் வரவில்லை என்று நினைப்பவர்கள், பாதுகாப்பான கருத்தடை முறைகள் பற்றி தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். 6 வகையான கருத்தடை முறைகள் பற்றி இங்கே காணலாம்.

மாத்திரைகள்:

கருத்தடை மாத்திரைகள் ஹார்மோன்கள் மூலம் கரு உருவாகாமல் தடுக்கிறது. பெரும்பாலும் மாத்திரைகள் தான் கருத்தடைக்கு பயன்படுத்தப்படுகிறது. நல்ல பலன் தருவதாகவும் இருக்கிறது. Combined contraceptive மற்றும் Progestogen என இரண்டு வகை கருத்தடை மாத்திரை வகைகள் உள்ளன. இரண்டுமே பரிந்துரைக்கப்படுபவை. ஆனால், இவை ஹெச்.ஐ.வியை தடுக்காது.


டெபோ ப்ரோவேரா ஊசி:

இதுவும் ஹார்மோன் மூலம் பணி செய்யும். நல்ல பலன்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்த ஊசியை போட்டுக் கொள்ளலாம். இதன் வெற்றி விகிதம் 99%. 

காண்டம்:

மிக விலைக் குறைவான, மிக அதிகம் பயன்படுத்தப்படும் கருத்தடை சாதனம் காண்டம். செக்ஸின் போது ஒரு உடலில் இருந்து மற்றொரு உடலுக்கு, திரவ பரிமாற்றத்தை தடுக்கிறது. அந்த வகையில் ஆணிடம் இருந்து பெண்ணுக்கு விந்து செல்வது தடுக்கப்படுகிறது. கருத்தடைக்கு மட்டும் அல்ல செக்ஸ் மூலம் பரவும் நோய்களையும் தடுக்கிறது காண்டம்.

டையாஃப்ரேம்:

விந்துக்கள் பெண் உறுப்புக்குள் செல்லாமல் தடுக்கும் சாதனம். இதில் இருக்கும் ஒருவகை ரசாயனம், விந்தணுக்களை கொல்லும். இந்த சதனத்தை உடலுறவு கொள்வதற்கு 6 மணி நேரத்துக்கும் முன் பொருத்தி விட வேண்டும். உடலுறுவுக்கு பின் 24 மணி நேரம் தொடர்ந்து இருக்க வேண்டும். ஆனால் இதன் வெற்றி விகதம் குறைவு. மேலும், இவை எச்.ஐ.வியை தடுப்பதில்லை.

அவசரகால கருத்தடை:

அவசரகால கருத்தடைக்கு, 2 முறைகளை பயன்படுத்தலம். ஒன்று மாத்திரைகள் மற்றொன்று காப்பர் ஐயூடி. இ.சி.பி என்ற மாத்திரையை 70 கிலோவுக்கு குறைவான எடை கொண்ட பெண்கள் உட்கொள்ளலாம். அதற்கு மேல் இருப்பவர்கள், மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் காப்பர் ஐயூடி பயன்படுத்தலாம். இரண்டுமே 99% பயன் தரும். ஆனால் மாத்திரைகள் பொறுத்தவரை பக்க விளைவுகள் இருக்கலாம்.


ஃபெம்கேப்:

டையாஃப்ரேமைப் போல சிறிய அளவில் இருக்கும் சாதனம் இது. உடலுறவுக்கு 6 மணி நேரம் முன் இதை பெண்ணுறுப்பில் பொருத்த வேண்டும். பின், 48 மணி நேரம் வரை வைத்திருக்க வேண்டும். நல்ல பலன்களை தரும். பாதியளவில், உடலுறவால் பரவும் நோய்களை தடுக்கிறது. 
 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------