முகப்பு »  ஊட்டசத்து »  வாழைப்பழம் சாப்பிட்டா எடை குறையுமா??

வாழைப்பழம் சாப்பிட்டா எடை குறையுமா??

தசை வலிகளை போக்கி உடற்பயிற்சிக்கு பின் ஆற்றல் கொடுக்கக்கூடியதாய் இருக்கிறது. 

வாழைப்பழம் சாப்பிட்டா எடை குறையுமா??

சிறப்பம்சங்கள்

  1. உடல் எடை குறைய நார்ச்சத்து நிறைந்த வாழைப்பழத்தை சாப்பிடலாம்.
  2. கலோரிகள் மற்றும் கொழுப்பு வாழைப்பழத்தில் குறைவாக இருக்கிறது.
  3. பசிக்கும்போது ஸ்நாக்ஸ் போல வாழைப்பழத்தை சாப்பிடலாம்.

எல்லா சீசனிலும் கிடைக்கக்கூடியது வாழைப்பழம்.  ருசியான இந்த வாழைப்பழம் உங்களுக்கு உடனடி எனர்ஜியை கொடுக்கக்கூடியது.  ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய வாழைப்பழம் உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.  இதில் பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் பி6, மக்னீஷியம், காப்பர் மற்றும் மாங்கனீஸ் இருக்கிறது.  கலோரிகள் மிகவும் குறைவாக இருக்கும் வாழைப்பழம் உங்களை பசியுணர்வில்லாமல் நிறைவாக வைத்திருக்கும். 

உடல் எடை குறைக்க:


ஒரு வாழைப்பழத்தில் 12 சதவிகிதம் நார்ச்சத்து இருக்கிறது.  செரிமானம் மற்றும் குடல் இயக்கங்களை சீராக வைக்க நார்ச்சத்து மிகவும் முக்கியமானது.  பச்சை பழத்தில் ஸ்டார்ச் அதிகம் இருக்கிறது.  இந்த ரெசிஸ்டண்ட் ஸ்டார்ச் உணவிலிருந்து சர்க்கரை மெதுவாக எடுத்து கொள்ளும் தன்மை கொண்டது.  மேலும் இருதய ஆரோக்கியத்திற்கும் வாழைப்பழம் மிகவும் நல்லது என்று நியூட்ரிஷனிஸ்ட்கள் தெரிவிக்கின்றனர். 

8p7j04no

நார்ச்சத்துடன் ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்த வாழைப்பழத்தில் 105 கலோரிகள் உள்ளது.  புரதம் மிகவும் குறைவாகவும் கொழுப்பு சுத்தமாக இல்லாத பழம் வாழைப்பழம்.  ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த வாழைப்பழத்தை தினசரி மதிய உணவிற்கு பிறகு சாப்பிடலாம்.  தசை வலிகளை போக்கி உடற்பயிற்சிக்கு பின் ஆற்றல் கொடுக்கக்கூடியதாய் இருக்கிறது.  பசிக்கும் போது ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக வாழைப்பழத்தை சாப்பிடலாம். 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------