முகப்பு »  நலவாழ்வு »  முருங்கைக்கீரை தேநீரை ஏன் அருந்த வேண்டும்??

முருங்கைக்கீரை தேநீரை ஏன் அருந்த வேண்டும்??

கர்ப்பிணிகள் முருங்கைக்கீரை தேநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

முருங்கைக்கீரை தேநீரை ஏன் அருந்த வேண்டும்??

சிறப்பம்சங்கள்

  1. உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க முருங்கை இலை தேநீர் குடிக்கலாம்.
  2. கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
  3. மனநிலையை சீராக வைக்கும் தன்மை கொண்டது.

பல நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக முருங்கை காய், இலை மற்றும் பூ பயன்படுத்தப்படுகிறது.  முருங்கைக்கீரையில் தேநீர் செய்து குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.  முருங்கைக்கீரையை பொடித்து கொதிக்கும் நீரில் போட்டு வடிக்கட்டி குடிக்கலாம்.  கஃபைன் நிறைந்த பானங்களை தவிர்த்து, இதுபோன்ற இயற்கை பானங்களை செய்து குடிக்கலாம்.  முருங்கைக்கீரையில் வைட்டமின் ஏ, பி1, பி2, பி3, ஃபோலேட், கால்சியம், மக்னீஷியம், பாஸ்பரஸ், சிங்க் மற்றும் இரும்புச்சத்து இருக்கிறது.  இதில் கொழுப்பு சத்து இல்லாததால் உடல் எடை குறைக்கவும் இதனை குடிக்கலாம்.  முருங்கைக்கீரை தேநீரில் இருக்கக்கூடிய ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பற்றி பார்ப்போம்.
 

knb7r21

வீக்கம்: 
முருங்கைக்கீரையில் ஐஸோதியோசயனேட், ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் உடலில் வீக்கம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.  


சருமம்  மற்றும் கூந்தல்: 
முருங்கைக்கீரையில் வைட்டமின் மற்றும் தாதுக்கள் இருக்கிறது.  உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.  உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.  

எலும்புகள்: 
கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பதால் எலும்புகள் உறுதியாக இருக்கும்.  ஆர்த்திரிடிஸ் மற்றும் மூட்டு வலி இருப்பவர்கள் தினமும் முருங்கைக்கீரை தேநீரை குடித்து வரலாம்.  

இரத்த அழுத்தம்: 
ஐசோதையொசயனேட் மற்றும் நியாசிமினின் இருப்பதால் தமணிகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.  இதனால் இரத்த அழுத்தம் சீராக வைக்கப்படும்.  

கண்கள்: 
ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் வைட்டமின் ஏ இருப்பதால் கண் பார்வை மேம்படும்.  தினமும் முருங்கைக்கீரை தேநீர் குடித்து வந்தால் கண் பார்வை அதிகரிக்கும்.  

எடிமா என்று சொல்லப்படும் கை, கால் மூட்டு, விரல்களில் ஏற்படும் வீக்கம் குறைக்க முருங்கைக்கீரை சூப் குடிக்கலாம்.  கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.  மலச்சிக்கல், வாயுத்தொல்லை, அல்சர், செரிமான பிரச்னைகளை சரி செய்கிறது.  இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.  ஆஸ்துமா போன்ற பிரச்னைகளை சரி செய்து, மனநிலையையும் சீராக வைக்க உதவுகிறது.  
 

 2e30eclg

முருங்கைக்கீரை தேநீர் தயாரிக்க: 
ஒரு தேக்கரண்டி முருங்கைக்கீரை பொடி, ஒரு தேக்கரண்டி கிரீன் டீ பொடி, 3-4 புதினா இலைகள், 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி வெல்லம், தேவையான அளவு சுடான நீர் ஆகியவை சேர்த்து கலந்து மிதமான சூட்டில் வைத்து கொதிக்க வைக்கவும்.  நன்கு கொதித்த பின் அதனை குடித்து வரலாம்.  


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

பக்க விளைவுகள்: 
நீங்கள் ஏதேனும் டயட்டில் இருந்தீர்களானால், மருத்துவரின் ஆலோசனைப்படி குடிக்கலாம்.  கர்ப்பிணிகள் இதனை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.  நீரிழிவு, இரத்த அழுத்தம், தைராய்டு போன்ற உடல் உபாதைகளுக்கு மருந்துகளை சாப்பிட்டு வந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி குடித்து வரலாம். 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------