முகப்பு »  நலவாழ்வு »  வெஜிட்டேரியனஸ்க்கு ஒமேகா 3 ஃபேட்டி ஆஸிட்ஸ் நிறைந்த 5 உணவுகள்

வெஜிட்டேரியனஸ்க்கு ஒமேகா 3 ஃபேட்டி ஆஸிட்ஸ் நிறைந்த 5 உணவுகள்

இது அலற்சி, இதய நோய்கள், மறதி ஆகியவற்றின் அபாயங்களை குறைக்கிறது.

வெஜிட்டேரியனஸ்க்கு ஒமேகா 3 ஃபேட்டி ஆஸிட்ஸ் நிறைந்த 5 உணவுகள்

வால்நட்ஸில் ஒமேக 3 ஃபேட்டி ஆசிட்ஸ் நிறைந்துள்ளது.

சிறப்பம்சங்கள்

  1. ங்களின் அன்றாட டயட்டில் ஒமேகா 3 சேர்த்துக் கொள்வது என்பது மிகவும் அவசியம
  2. அலற்சி, இதய நோய்கள், மறதி ஆகியவற்றின் அபாயங்களை குறைக்கிறது
  3. சணல் விதைகளில் அதிகளவு ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் உள்ளது

இதயத்திற்கு ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் மிகவும் அவசியம். இந்த ஊட்டச்சத்து சாலமன், ட்யூனா போன்ற மீன் வகைகளில் உள்ளது. அப்படியென்றால் வெஜிட்டேரியன் மக்களுக்கு ஒமேகா 3 கிடைக்கவே வாய்ப்பில்லையா என்று கேட்கலாம்.  காய்கறி உணவுகளிலும் ஒமேகா 3 உள்ளது. உங்களின் அன்றாட டயட்டில் ஒமேகா 3  சேர்த்துக் கொள்வது என்பது மிகவும் அவசியம். இது அலற்சி, இதய நோய்கள், மறதி ஆகியவற்றின் அபாயங்களை குறைக்கிறது. வீகன்ஸ் மற்றும் வெஜிட்டேரியன்ஸ் ஆகிய இருவரும் ஒமேகா 3 ஃபேட்டி ஆஸிட்ஸை பெற விரும்பினால் எதையெல்லாம் சாப்பிட வேண்டும் என்பதை கூறுகிறது DOCTOR NDTV 

வால்நட்ஸ் 

வால்நட்ஸில் ஒமேக 3 ஃபேட்டி ஆசிட்ஸ் நிறைந்துள்ளது. வால்நட்ஸில்  65 சதவீதம் கொழுப்பினால் நிறைந்துள்ளது என்று ஹெல்த் லைன் தெரிவிக்கிறது. உடல் எடைக் குறைக்கவும் இதைப் பயன்படுத்தலாம். இதயம் மற்றும் மூளை ஆகியவற்றின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. டயட்டில் வால்நட்ஸை சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 


சியா விதைகள்

 சியா விதைகளில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. அதில் ஒமேக 3 ஃபேட்டி ஆஸிட்ஸ்தான் அதிகமுள்ளது. நார்ச்சத்தும் புரதச் சத்தும் அதிகமுள்ளது. சியா விதைகளினால் உடல் எடை குறைவதுடன் உடலில் கொழுப்புச் சத்தையும் குறைக்கிறது. சியா விதைளை ஸ்மூத்தி, சாலட்ஸ், நட்ஸ், தயிர் ஆகியவற்றில் கலந்து சாப்பிடலாம். 

vrsoj84g

சணல் விதைகள் 

 சணல் விதைகளில் அதிகளவு ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ், புரதச் சத்து, இரும்பு, மக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளது. சணல் விதைகள் ஹார்ட் அட்டாக்கிலிருந்து பாதுகாக்கிறது. சணல் விதை எண்ணெய்யையும் பயன்படுத்தலாம். அதிலும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் உள்ளது. 

ஆளி விதைகள் 

ஆளிவிதைகளில் ஃபைபர், புரதச் சத்து, மக்னீசியம்  மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் ஆகியவை நிறைந்துள்ளது. ஆளி விதைகள் இரத்த அழுத்தத்தில் முன்னேற்றத்தை கொடுக்கும். ஆளி விதைகளை ஃப்ளக்ஸ் சீட்ஸ், நட்ஸுடன் இணைத்து சாப்பிடலாம். சூப், சாலட்களில் கலந்து சாப்பிடலாம்.

 ப்ரஸில் ஸ்ப்ரவுட்ஸ்

 ப்ரஸில் ஸ்ப்ரவுட்ஸில் ஒமேகா 3 ஃபேட்டி ஆஸிட்ஸ் மற்றும் விட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் விட்டமின் கே நிறைந்துள்ளது. இதய நோய்களின் ஆபத்தைக் குறைக்கிறது. 

 

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information. 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------