முகப்பு »  நலவாழ்வு »  இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன் சாப்பிடக்கூடிய நொறுக்குத் தீனிகள் !

இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன் சாப்பிடக்கூடிய நொறுக்குத் தீனிகள் !

இரவு நேரங்களில் படுக்கைக்குச் செல்லும் நொறுக்குத்தீனிகள் சாப்பிடும் மக்கள் அதிகரித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது

இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன் சாப்பிடக்கூடிய நொறுக்குத் தீனிகள் !

சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றின் முடிவின்படி, இரவு நேரங்களில் படுக்கைக்குச் செல்லும் நொறுக்குத்தீனிகள் சாப்பிடும் மக்கள் அதிகரித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இதில், காட்டேஜ் சீஸ் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்று டயட்டீசியன்கள் தெரிவித்துள்ளனர்.

தினமும் 30 கிராம் புரதச் சத்து அடங்கிய பருப்புவகைகளைச் சாப்பிடுவதன் மூலம், உடல் நலனை மேம்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், இவை தசைகளை வலுப்படுத்தவும், ஜீரண சக்தியை அதிகப்படுத்தவும் உதவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பலர் பங்கு கொண்டனர். அவர்களுக்கு தினமும் இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 60 நிமிடங்களுக்கு முன்னதாக காட்டேஜ் சீஸ் வழங்கப்பட்டது. அது அவர்களது உடல் நலனில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.


இதுகுறித்து மைக்கேல் ஓர்ஸ்பீ என்கிற துணைப் பேராசிரியர் கூறுகையில், இதுவரையில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் புரத உணவுகள் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ts2i9qng

உடல் எடையை அதிகரிக்காத, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடிய உணவு வகைகள்

காட்டேஜ் சீஸ் - இந்த வகையில் ஒரு மிகச்சிறந்த உணவு. உடல் ஆரோக்கியத்திற்கு இது வலு சேர்க்கிறது. இதை நீங்கள் உண்பதன் மூலம் உங்கள் உடலில் தேவையான அளவு அமினோ ஆசிட்டுகள் சுரக்கிறது. இது உங்கள் உடல்நலனை மேம்படுத்தும். இதை உண்பதன் மூலம் பசி கட்டுப்படுத்தப்படும்.

புரதம் நிறைந்த உணவுப் பொருட்கள்

  • பால்
  • யோகர்ட்
  • வெண்ணெய்
  • முட்டை
  • ஓட்ஸ்
  • ப்ரோட்டின் ஷேக்
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------