முகப்பு »  நலவாழ்வு »  இந்த பருவமழைக் காலத்தில் ஏன் பேரிச்சைப் பழங்கள் பிரபலமாக இருக்கின்றன

இந்த பருவமழைக் காலத்தில் ஏன் பேரிச்சைப் பழங்கள் பிரபலமாக இருக்கின்றன

பேரிச்சைப் பழங்கள் உட்கொள்வது, குறிப்பாக பருவமழைக் காலத்தில் ஆரோக்கியமானதாகும்

இந்த பருவமழைக் காலத்தில் ஏன் பேரிச்சைப் பழங்கள் பிரபலமாக இருக்கின்றன

பேரிச்சைப் பழங்கள் உட்கொள்வது, குறிப்பாக பருவமழைக் காலத்தில் ஆரோக்கியமானதாகும். இதில் நார்சத்து, கேல்சியம், போட்டாசியம் மற்றும் இதர தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிக அளவில் இருக்கின்றன. இதன் பலன்களை மேலும் அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பருவமழைக்காலங்களில், அதற்கென்றே பிரத்தியேகமான உணவுகளும் இருக்கின்றன, உதாரணமாக பேரிச்சைப் பழங்கள். பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் பேரிச்சைப் பழங்களில் உள்ள் பல்வேறு நன்மைகள் பற்றி குறிப்பிட்டுள்ளார். அவருடைய பதிவில் பேரிச்சைப் பழங்கள் நெடுங்காலம் தொட்டு உணர்திறன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பயன்படும் உணவாக கொண்டாடப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், பேரிச்சைப் பழங்கள் அதனுடைய எடைக்கு நிகராக தங்கத்தை தருகிற அளவிற்கு சத்தானது எனக் குறிப்பிடுகிறார். இதில் நார்சத்து, புரோடீன், அயன், மெக்னீஸியம், காப்பர், மென்கனீஸ், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 உள்ளிட்டவை அதிக அளவில் இருக்கின்றன.


2luesqe

ருஜுதா குறிப்பிடுகையில், பேரிச்சைப்பழங்களில் அதிக அளவிலான நார் சத்துக்கள் இருக்கின்றன. இதில் உள்ள நார் சத்துக்கள் உங்களுக்கு மலச்சிக்கல், வீக்கம் மற்றும் எரிச்சல் ஆகியவற்றை கட்டுக்குள் வைக்க உதவுகின்றன.

கால்சியம் மற்றும் மெக்னீசியம் பேரிச்சைப் பழத்தில் உள்ள இரண்டு முக்கிய பொருட்களாகும். இந்த இரண்டும் ஒரு நிறமான தோற்றத்தை அடைவதில் உதவுகின்றன. உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பபர்கள் பேரிச்சைப் பழங்களை உட்கொண்டு பயன்பெறலாம். மேலும் பேரிச்சைப் பழங்கள், பெண்கள் தங்களுடைய மாதவிடாய் காலத்தில் சந்திக்கிற பிரச்சனைகள் தீர்க்க உதவுகிறது.

பேரிச்சைப் பழங்களில் வைட்டமின் பி6 நிறைந்துள்ளது. வைட்டமின் பி6 குறைபாடு மக்களிடத்தில் இயல்பான இன்று. உடலில் வைட்டமின் பி6 அளவு கனிசமான இருப்பது தோல் சேதத்தை தடுக்கவும், முடி உதிர்வதைத் தடுக்கவும் பயன்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் பி6 உங்களுடைய மனநிலையை முன்னேற்றுவதிலும் உதவியாக இருக்கிறது.

b0f0asug

மேலே குறிப்பிட்டுள்ளது மட்டுமில்லாது, பேரிச்சைப் பழங்களில் கலோரிகள் அதிக அளவில் இருக்கிறது. பேரிச்சைப் பழங்கள உட்கொள்வது பற்றி குறிப்பிடுகையில் ருஜுதா ஒரு அரேபிய விதி ஒன்றை குறிப்பிடுகிறார். அந்த விதியின் படி உங்களால் மூன்றாவது பேரிச்சைப் பழத்தை உண்ண முடியுமென்றால் மட்டும் தான் இரண்டாவது பேரிச்சைப் பழத்தை உண்ண வேண்டும். இதன் மூலம் நீங்கள் இரண்டு அல்லது சொற்ப அளவுகளில் உண்பதோடு நிறுத்திவிடக் கூடாது, அதிக அளவில் உட்கொள்ள வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றனர்.

இந்த விதி கிட்டத்தட்ட மிதாஹரின் ஹதா யோகா பிரதிபிகா கருத்துப் போன்றது தான். இதில் நீங்கள் வயிற்றை பாதி காலியாக வைத்திருக்கும் உணர்திறன் உருவாக்க வேண்டும் எங்கே. இது உலகின் ஏனைய பகுதிகளுடன் உணவை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற கருத்தை கற்பிக்கிறது.

இதற்கிடையில் பேரிச்சைப் பழத்தை உட்கொள்வதின் மற்ற சுகாதார நன்மைகளை பார்க்கலாம்:

1. பேரிச்சைப் பழத்தில் பல்வேறு நோய்களை தடுக்க உதவும் ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் இருக்கிறது. ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் ஃப்ரீ ரேடிக்கல்ஸால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து உடலிற்கு பாதுகாப்பு அளிக்கிறது. பேரிச்சைப் பழத்தில் ஃபிளவனாய்டுகள், பினோலிக் அமிலம் மற்றும் கரோட்டினாய்டுகள் இருக்கின்றன. இவை அனைத்தும் புற்றுநோய், மேகுலர் டீஜெனரேஷன் மற்றும் இருதய நோய்கள் வருவதிலிருந்து தடுக்கிறது.

2. பேரிச்சைப் பழங்கள் உட்கொள்வது மூளை செயல்பாட்டில் முன்னேற்றத்தை அளிக்கிறது. பேரிச்சைப் பழங்கள் வீக்கத்தைக் குறைத்து அல்சைமர் உள்ளிட்ட நரம்பியல் குறைபாடு நோய்கள் வராமல் தடுக்கின்றன. பேரிச்சைப் பழங்கள் நினைவு மற்றும் கற்றல் திறன்களை அதிகரிக்க உதவுவதாக ஆய்வுகள் கண்டுபிடித்திருக்கின்றன. இவை ஏக்கத்தையும், அது சார்ந்த நடவடிக்கைகளையும் குறைக்கிறது.

3. பேரிச்சைப் பழத்தின் மற்றொரு முக்கியமான நன்மை அவை கருவுற்ற பெண்களுக்கு உதவியாக இருக்கிறது. பிரசவத்தின் கடைசி வாரங்களில் பேரிச்சைப் பழங்க உட்கொள்வது கர்ப்பப்பை வாய்ப் பகுதியை மேம்படுத்துவதில் உதவ முடியும். மேலும் பேரிச்சைப் பழங்கள் பிரசவத்தில் அறுவை சிகிச்சை போன்ற செயற்கையான தேவைகளை குறைக்க உதவும்.

4. பேரிச்சைப் பழங்களில் இயற்கையான சர்க்கரை இருக்கிறது. இதில் பழங்களில் இயற்கையாகவே காணப்படும் சர்க்கரையான - ஃப்ரக்டோஸ் அதிக அளவில் இருக்கிறது.
 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------