முகப்பு »  நலவாழ்வு »  எடை குறைப்பதற்கு உதவும் டீ வகைகள்!

எடை குறைப்பதற்கு உதவும் டீ வகைகள்!

கிரீன் டீயில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது பொதுவாக எடை குறைப்புக்கு உதவுகிறது

எடை குறைப்பதற்கு உதவும் டீ வகைகள்!

பொதுவாக தேநீர் என்பது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது

சிறப்பம்சங்கள்

  1. டீயில் பல வகைககள் உள்ளன
  2. ஒவ்வொன்றும் தனிச்சுவை, தனி பண்புகளைக் கொண்டுள்ளன.
  3. பொதுவாக டீ உடல் எடைக் குறைக்க உதவுகிறது

அனைவரும் விரும்பக்கூடிய பானங்களில் முதன்மையானது தேநீர் ஆகும். உலகம் முழுவதும் டீ, காபிக்கு அடிமையாகியுள்ளன. இவற்றில் டீயில் சில நற்குணங்களும் உண்டு. அவற்றில் ஒன்று தான் உடல் எடை குறைப்பு. உடல் எடையைக் குறைக்க விரும்பும், டீ பிரியர்கள் இனி சந்தோஷமாக இருக்கலாம். 

டீயில் பல வகைககள் உள்ளன. இஞ்சி டீ, மசாலா டீ, லெமன் டீ, ஏலக்காய் டீ என அடுக்கிக் கொண்டே போகலாம். அவை ஒவ்வொன்றிலும் ஒரு பண்புகள் உள்ளன. பொதுவாக தேநீர் என்பது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. அந்த வகையில் சில டீ வகைகளை இங்குக் காணலாம். 

1. கிரீன் டீ
கிரீன் டீயில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது பொதுவாக எடை குறைப்புக்கு உதவுகிறது. கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், உடல் எடையை மேம்படுத்துவதுடன். வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க உதவுகிறது.

2. இஞ்சி டீ
டீயில் சுவைக்காக இஞ்சி சேர்ப்பார்கள். ஆனால், இது ஆரோக்கியத்திற்கும் உகந்தது ஆகும். இஞ்சியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் உள்ளன. இஞ்சி டீ குடித்தால் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் தொண்டை புண் தடுக்கவும் உதவுகிறது.


3. ஊளோங் டீ
ஊளோங் டீ என்று ஒன்று இருப்பது பலருக்கும் தெரியாது. இது சைனா வகை டீ ஆகும். கேமில்லியா சினென்சிஸ் என்ற தாவரத்தில் இருந்து தான் ஊளோங் தேயிலை தயாரிக்கப்படுகிறது.  இந்த டீநீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. ஊளோங் டீ வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துவதால் எடை குறைக்க உதவுகிறது.

4. புதினா டீ
புத்துணர்ச்சியூட்டும் தேநீரில் ஒன்று தான் புதினா டீ. தூக்கமின்மைக்கு, செரிமானத்திற்கு இந்த டீ உதவுகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்திற்கும் நன்மை பயக்கும். புதினா டீ குடித்து வந்தால், உடல் எடை குறைப்பும் ஏற்படுவதாக கூறப்படுகிறது. 

lem4pt4g

மூலிகை டீ உடல் எடையைக் குறைக்க உதவுகிறது
Photo Credit: iStock


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

5. பு-எர் தேநீர்
பு-எர் தேநீர் சற்று விலை உயர்ந்தது ஆகும். இதுவும் எடை இழப்பை ஊக்குவிக்க, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இது கொழுப்பின் அளவை மேம்படுத்தவும் உதவுகிறது. ஆனால், இந்த வகை தேநீரை குடிப்பதற்கு முன்பாக மருத்துவ ஆலோசனை பெறுவது நலம்.

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------