முகப்பு »  நலவாழ்வு »  முறையற்ற உணவுப் பழக்கம் வயதான தோற்றத்தைக் கொடுக்கும் : ஆய்வில் தகவல் !

முறையற்ற உணவுப் பழக்கம் வயதான தோற்றத்தைக் கொடுக்கும் : ஆய்வில் தகவல் !

ஆரோக்கியம்ற்ற வாழ்வியல் முறையும் சரியான தூக்கமின்மையும் வயதான தோற்றத்தைக் கொடுக்கும்

முறையற்ற உணவுப் பழக்கம் வயதான தோற்றத்தைக் கொடுக்கும் : ஆய்வில் தகவல் !

முதுமையடைவது மனிதர்கள் வாழ்வில் சாதாரண விஷயம்தான். ஆனால், தற்போது மாறி வரும் வாழ்வியல் முறைகளும், சரியான தூக்கமின்மையும் உங்களுக்கு முதுமையான தோற்றத்தைக் கொடுக்கும். இதனால், உங்களின் இளமைப் பொலிவை நீங்கள் இழக்ககூடும். இதனைத் தவிர்க்க ஆரோக்கியமான வாழ்வியல் முறை, உணவுப் பழக்கம், சீரான உடற்பயிற்சி, மனசோர்வு அடையாது இருத்தல் போன்றவை உங்களை பொலிவாக வைத்திருக்க உதவும்

goksqjk

முதுமையான தோற்றத்தைக் கொடுக்கும் 5 காரணிகள்


ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம்

ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் முதுமையான தோற்றத்தை அளிப்பதில் முக்கியமான காரணியாக இருக்கிறது. அதிக சர்க்கரை மற்றும் ஜங்க் உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்வதன் மூலம், உடல் நலம் கெடும். அதிக சர்க்கரை உணவுகள் எடுத்துக்கொள்வது அதிகபட்ச உடல்நலக் கேடுகளை உருவாக்கும், அதே நேரம் வயதான தோற்றத்தையும் கொடுக்கும்.

ciqu18p8

வேதிப்பொருட்கள் அடங்கிய பொருட்களை பயன்படுத்துதல்

கண்களுக்கு கீழ் கறுப்பு வளையங்கள், முடி நரைத்தல், தோல் சுருங்குதல் போன்ற அறிகுறிகள் வேதிப்பொருட்கள் அடங்கிய அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படுவதே. அழகுப் பொருட்கள் மட்டுமின்றி, பதப்படுத்தப்பட்ட உணவுகள், துவைக்கும் சோப் டிடெர்ஜெண்ட் பவுடர்களில் இருக்கும் வேதிப்பொருட்கள் வயதான தோற்றத்தைக் கொடுக்கும்.

தூக்கமின்மை

முறையான தூக்கமின்மையும் இளமைப் பொலிவைக் கெடுத்து வயதான தோற்றத்தைக் கொடுக்கும். தினமும் 8 மணிநேரம் தூக்கம் அவசியம். முறையாக தூக்கமின்மை கண்களுக்கு கீழ் கரு வளையங்களை ஏற்படுத்தும்.

குடிப்பழக்கம்

அதீத குடிப்பழக்கமும் வயதான தோற்றத்தைக் கொடுக்கும். தினமும் ஒரு க்ளாஸ் ரெட் வொயின் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால், அதே நேரம் அதிகமான ஆல்கஹால் எடுத்துக்கொள்வது ஆபத்தை ஏற்படுத்தும். குடிப்பழக்கம் ஜீரண மண்டலத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் ஆபத்தை ஏற்படுத்தும்.

3racktkg

மகிழ்ச்சியாக இருத்தல்

இன்றைய காலகட்டத்தில், தனிப்பட்ட பிரச்னைகள், வீட்டுப் பிரச்னைகள் என பல்வேறு பிரச்னைகளில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இப்படி தொடர்ந்து பிரச்னைகள் குறித்து யோசித்தபடி இருப்பதால், தூக்கமின்மை பிரச்னைகள் ஏற்படும். இதன் மூலம், வயதான தோற்றம் எளிதில் வரும். எனவே, தங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது, இளமைப் பொலிவோடு இருக்க உதவும்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com