முகப்பு »  நலவாழ்வு »  உடல் எடையை குறைக்க இவற்றை உண்ண வேண்டாம்

உடல் எடையை குறைக்க இவற்றை உண்ண வேண்டாம்

எல்லா விதமான உணவை சாப்பிட்டாலும் உடல் எடையில் எந்த மாற்றங்களும் நிகழ்ந்திட கூடாது என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கிறது

உடல் எடையை குறைக்க இவற்றை உண்ண வேண்டாம்

ஆரோக்கியமான உணவை பார்த்து பார்த்து சாப்பிடும் விழிப்புணர்வு நம்மிடையே தற்போது எழுந்துள்ளது. அதாவது, எல்லா விதமான உணவை சாப்பிட்டாலும் உடல் எடையில் எந்த மாற்றங்களும் நிகழ்ந்திட கூடாது என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கிறது. இம்மாதிரியான கண்டிஷன்களுடன் உலா வருபவர்களுக்காகவே சில உணவு பொருட்கள் மார்க்கெட்டுகளில் கிடைக்கின்றன. அவற்றில் எப்படிப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

1. பழச்சாறுகள்

பழங்களை அப்படியே சாப்பிடுவதற்கும், அரைத்து அதன் ஜூஸைக் குடிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அதுவும் குறிப்பாக உடல் எடை குறைப்பில் பழச்சாறுகளை குடிப்பதற்கு பதில் பழங்களை அப்படியே முழுசாக உண்பது தான் சிறந்தது. ஏனெனில், பழச்சாறுகளில் சர்க்கரை அளவு அதிகம். ஆனால், முழுப்பழத்தில் நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கும். எந்த ஒரு பழத்தையும் அப்படியே சாப்பிடும் போது தான் அதன் முழுமையான சத்து நமக்கு கிடைக்கும்.


mm02dfd8

2. ப்ரௌன் ப்ரெட்

தற்போது ப்ரெட்டில் பல வகைகள் வந்து விட்டன. மைதாவில் செய்யப்படுவதால் வெள்ளை ப்ரெட்டை தவிர்த்து எல்லோரும் ப்ரௌன் பிரெட்டிற்கு மாறி வருகின்றனர். காரணம் இந்த ப்ரௌன் ப்ரெட் கோதுமை போன்ற தானியங்களால் செய்யப்படுகிறது. இதனை சாப்பிடும்போது உடல் எடை குறையும் என்ற நம்பிக்கையில் இதை சாப்பிட ஆரம்பித்து விட்டனர். நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இதில் சர்க்கரை, ஈஸ்ட், செயற்கை நிற ஊக்கிகள் பயன்படுத்தப்படுவதால் உடலுக்கு கெடுதலை ஏற்படுத்தும்.

u9bl9li

3. டயட் சோடா

இந்த டயட் சோடாவில் அதிகளவு செயற்கை சர்க்கரை உள்ளது. இவ்விதமான சர்க்கரை உடல் எடையை அதிகரிக்குமே தவிர குறைக்க உதவாது. இதனை தினசரி குடித்துவந்தால், உடலில் கலோரிகள் அதிகம் சேர்ந்து உடல் பருமன் அதிகரிக்கும்.
 

jph10a5g

4. ப்ரோட்டீன் பார்

உடல் எடை குறைப்புக்காகவே கண்டுபிடிக்கப்பட்ட ஒர் உணவு தான் இந்த ப்ரோட்டீன் பார். கடைகளில் கிடைக்கும் ப்ரோட்டீன் பார்களில் செயற்கை சர்க்கரை அதிகம் உள்ளது. இதில் அதிக கலோரிகளும் உள்ளது. இதனை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்க நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். முடிந்தவரை வீட்டிலேயே செய்து சாப்பிடுவது நல்லது.

5. ரெடிமேட் சூப்

கடைகளில் பேக் செய்து வரக்கூடிய ரெடிமேட் சூப்களில் அதிகளவு உப்பு மற்றும் கொழுப்பு சத்து அடங்கியுள்ளது. உடல் எடையைக் குறைக்க ஏற்ற உணவு தான் என்றாலும், பேக் செய்த பொருட்களில் நீங்கள் எதிர்ப்பார்கும் அளவிற்கு ஆரோக்கியம் கிடைக்காது. வீட்டில் சூப் செய்து குடித்தால், நீங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கவலை படத் தேவையில்லை. இயற்கையாக கிடைக்கும் உணவுப் பொருட்களை சாப்பிட்டு வந்தாலே போதும், உடல் ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் இருக்கும்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------