முகப்பு »  நலவாழ்வு »  துரித உணவு உங்கள் மூளையின் அளவைக் குறைக்கும்… உஷார்!

துரித உணவு உங்கள் மூளையின் அளவைக் குறைக்கும்… உஷார்!

நல்ல உணவுப் பழக்கம் என்பது உடல் ரீதியிலும் மன ரீதியிலும் நேர்மறையான எண்ணங்களைத் தோன்றவைக்கும் என்பது நெடுங்காலமாக சொல்லப்பட்டு வரும் கூற்று

துரித உணவு உங்கள் மூளையின் அளவைக் குறைக்கும்… உஷார்!

சிறப்பம்சங்கள்

  1. துரித உணவு சாப்பிடுவதால் உங்கள் மூளை சுருங்கிப் போகலாம்
  2. ஊட்டச் சத்துகள் நிறைந்த உணவை உண்டால் மூளை விரவடையும்
  3. துரித உணவு, நியாபக சக்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்

நல்ல உணவுப் பழக்கம் என்பது உடல் ரீதியிலும் மன ரீதியிலும் நேர்மறையான எண்ணங்களைத் தோன்றவைக்கும் என்பது நெடுங்காலமாக சொல்லப்பட்டு வரும் கூற்று. ஆனால், துரித உணவு உட்கொண்டால்…. அப்படியே மாற்றாக எதிர்மறை எண்ணங்கள், ஆரோக்கியம் கெடுதல் போன்றவை ஏற்படும். ஆனால், தற்போது ‘நியூராலஜி’-யில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில், ‘அதிக துரித உணவு உட்கொள்வது உடல் நலத்துக்கு மட்டும் கேடு தருவது அல்ல. மூளை வளர்ச்சியையும் தடுக்கவல்லது’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த ஆய்வின் படி, அதிக துரித உணவு சாப்பிடுவதால், மூளையின் அளவு 2 மிமீ குறைவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், நல்ல உட்டச்சத்து நிரம்பிய உணவைச் சாப்பிடுபவர்களின் மூளை 3.6 மிமீ அளவுக்குக் கூடுதலாக வளர்ச்சி பெருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வெறும் மூளை வளர்ச்சியுடன் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. இதன் மூலம், சீக்கிரமே முதுமையும் வந்துவிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இந்த விஷயம் குறித்து டயட்டீஷியன் மோனிஷா அசோகன், ‘அளவுக்கு அதிகமாக துரித உணவை உட்கொள்வது மூளைச் சம்பந்தப்பட்ட விஷயங்களை பாதிக்கும். இது நியாபக சக்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். துரித உணவு சாப்பிடுவதால் உடம்பில் டோகோமைன் என்ற ரசாயணம் சுரக்கும். இது மூளைக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். இதனால் மூளை மறுபடியும் மறுபடியும் துரித உணவைக் கேட்கும். எனவே, தொடர்ந்து துரித உணவு சாப்பிடுபவர்கள் அதை விட்டொழிப்பதும் கடினமானதாகவே இருக்கும்’ என்கிறார். 

அவர் மேலும், ‘எனவே மூளைக்கு உகந்த உணவுகள் குறித்து பார்ப்போமா’ என்று தொடர்கிறார்,

பாதாம்

தினமும் உங்கள் தாய் இரண்டு பாதாம் கொடுப்பது உங்கள் நியாபக சக்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் தான். பாதாம் பருப்புகள் விட்டமின் ஏ, பி ஆகியவைகள் அதிகம் இருக்கும் ஓர் உணவு. மேலும், புரதச்சத்தும் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புகளும் பாதாமில் செறிவாக இருக்கின்றன. பாலாக, வெண்ணையாக, வெறுமனே என அத்தனை விதங்களிலும் பாதாமை உட்கொள்வது உடலுக்கு நல்லது தான். தினமும் காலை சில பாதாம் பருப்புகளை சாப்பிடுவதாக் முடி, தோல் மற்றும் மூளையை  விழிப்பாக வைத்துக் கொள்ள உதவும். 
 

tqzs542bpy


பூண்டு

பூண்டு சேர்த்த மிகவும் காரமாக இருக்கும் நம் இந்திய உணவுகள் உலகம் முழுக்க பிரசித்தி பெற்றது. பூண்டின் சிறந்த குணம் என்னவென்றால், அது நறுமணத்தையும் தந்து, கூடவே ஊட்டச்சத்தையும் அளிக்கும். பாக்டீரியாவுக்கு எதிரான குணாதிசயம் பூண்டில் நிறைந்திருப்பதால், அது உடலை பல பாதிப்புகளிலிருந்து காக்கிறது. பூண்டு மூளை சுருங்குவதிலிருந்தும் பாதுகாக்கிறது.
 

fqsoqy8xovi


காலிஃபிளவர்

சப்பாத்தியும் காலிஃபிளவர் குருமாவும் பேஷான டேஸ்டி டிஷ் தான். அது சுவையாகவும், மிருதுவானதாகவும், மிகுந்த ஆரோக்கிய நலன்கள் கொண்டுள்ளதாகவும் இருக்கும். காலிஃபிளவரில் இருக்கும் அடிப்படை ஊட்டச்சத்து மற்றும் கனிமங்கள் உடலுக்கு வலு சேர்க்கும். நார்சத்தும் காலிஃபிளவரில் அதிகம். உங்கள் மூளையையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளும் திறன் கொண்டது இந்த காய்.

yx80dqip2e

முட்டை

முட்டை என்பது பல காலமாக மனிதனின் ஆரோக்கிய உணவுப் பட்டியலில் தொடர்ந்து இடம் பிடித்து வரும் உணவு. புரதச்சத்திலும் நல்ல கொழுப்பு சத்துகளும் முட்டையில் நிரம்பி இருக்கின்றன. முட்டையை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால் இதய நலன் முதல் எடை குறைப்பு வரை ஈடு கொடுக்கும். ஆனால் இவை எல்லாவற்றையும் விட உங்கள் மூளையை சுருங்காமல் பார்த்துக் கொள்வதில் முட்டையின் பங்கு மிக அதிகம். 
 

ucaadskxmc

கோழி

கோழிக் கறியும் உங்கள் ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நன்மை பயக்கக் கூடியவை தான். மினரல், புரதம், பல ஊட்டச் சத்துகள் கோழிக் கறியும் அதிகம் உள்ளது. அதை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது சாலச் சிறந்தது. சாலட்டிலோ, சாண்ட்விச்சிலோ, தந்தூரி உணவாகவோ சிக்கனை எப்படி சாப்பிட்டாலும் அதன் பயன் அலப்பரியதே. இதனால் தான் பல காலமாக கோழிக் கறி மனிதனின் உணவுப் பட்டியலில் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறது. அது மூளைக்கும் நல்ல விளைவுகளைக் கொடுக்கும்.


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com
97wy7kd30ug

மோனிஷா அசோகன், ஊட்டச்சத்து நிபுணர், டெல்லி

பெறுப்புத்துறப்பு: மேலே கூறப்பட்டுள்ளவை பொதுவான மருத்துவத் தகவல்களே. நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களின் ஆலோசனை அல்ல. சம்பந்தப்பட்ட மருத்துவர்களை சந்தித்து உங்கள் உடல் நிலைக்குத் தகுந்த ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளவும். இதற்கு NDTV எவ்வித பொறுப்பும் ஏற்காது.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------