முகப்பு »  நலவாழ்வு »  நெஞ்சு எரிச்சலை தடுக்க வாழ்க்கை முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்

நெஞ்சு எரிச்சலை தடுக்க வாழ்க்கை முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்

வாழ்க்கை முறையில் சில நல்ல மாற்றங்களை செய்து கொண்டாலே நெஞ்செரிச்சலைத் தடுக்க முடியும்.

நெஞ்சு எரிச்சலை தடுக்க  வாழ்க்கை முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்

சிறப்பம்சங்கள்

  1. நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது மிகவும் பொதுவானது
  2. உடலில் சர்க்கரையின் அளவைக் குறைத்தல் அவசியம்.
  3. நிறைந்த உணவுகள், பழச்சாறுகளை எடுத்துக் கொள்வது நல்லது.

நெஞ்செரிச்சலை டிஸ்பெசியா (dyspepsia) என்று அழைக்கப்படுகிறது. நெஞ்சுக்கூட்டு எலும்பில் எரிகிற உணர்வைத்தான் நெஞ்செரிச்சல் என்கிறோம். நெஞ்செரிச்சல் அடிக்கடி ஏற்படும் போது ஒருநாளின் வேலைகள் தடைபட்டுவிடும். உணவு சாப்பிட்டபின் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது மிகவும் பொதுவானது. ஆனால், அதற்காக மிகவும் கவலைப்பட வேண்டியதில்லை. வாழ்க்கை முறையில் சில நல்ல மாற்றங்களை செய்து கொண்டாலே  நெஞ்செரிச்சலைத் தடுக்க முடியும். உங்களின் சாப்பாட்டு முறை, தூங்கும் நேரம், மன அழுத்தம், எடை, எப்படி உடை அணிகிறீர்கள் என்பதும்  அடங்கும். 

உடல் எடை

 பெல்லி ஃபேட், கர்ப்ப காலத்திற்கு பின்பான எடை அதிகரிப்பு ஆகியவற்றால் நெஞ்சு எரிச்சல் ஏற்படலாம். அதிமான எடையினால் ஏற்படும் அழுத்தம் காரணமாகவும் ஏற்படும். இதற்கு பெல்லி ஃபேட்டைக் குறைத்தாலே போதுமானது. போதுமான அளவு உடற்பயிற்சி மற்றும்  நார்ச்சத்து, புரதச்சத்து கொண்ட உணவைக் எடுத்து கொள்ளுதல், உடலில் சர்க்கரையின் அளவைக் குறைத்தல் அவசியம். 


beo7m798

உணவில் மாற்றங்கள்

 உணவின் அளவில் கவனமாக இருக்க வேண்டும். அதிகளவு உணவை எடுத்துக் கொள்ளக் கூடாது. மசாலா நிறைந்த வறுத்த அமில உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் பழச்சாறு மற்றும் இளநீர், எலுமிச்சை சாறு ஆகியவற்றை அதிகம் குடிக்க வேண்டும். 

சாப்பிட்ட பிறகு படுக்காதீர்கள் 

சாப்பிட்ட உடனே படுக்கச் செல்லக்கூடாது. இதனால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். சாப்பிட்டு சிறிது நேரம் நடந்து விட்டு பின் படுப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். 

உடை 

பெல்ட் அணிவதை தவிர்க்க வேண்டும். இறுக்கமான உடைகளை அணிவதும் வயிற்றை இறுக்கக் கூடிய ஆடைகளினால் உருவாகும் அமிலம் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். தவிர்க்க வேண்டிய பானங்கள் காபி, கேனில் அடைக்கப்பட்ட ஜூஸ்கள், இனிப்பான குளிர்பானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு உணவிற்கு பின்  போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். 

இரவில் தாமதமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் 

இரவில் உறங்கச் செல்வதற்கு  3மணிநேரத்திற்கு முன் சாப்பிட்டு முடித்து விட வேண்டும். அதற்குப் பின் சிற்றுண்டிகள் என எதையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இரவில் மசாலா அதிகம் கலந்த உணவை எடுத்துக் கொண்டாலும் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். 

 

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information. 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com